தேடும் கண் பார்வை தவிக்க-40

 

அத்தியாயம்-40

ர்மா ஹோட்டல்ஸ் என்று பெயரிட்டிருந்த அந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரத்யேக அறையில் ஒருவித டென்ஷனுடன் அமர்ந்து இருந்தான் ரிஷி வர்மா..

அத்தனை பெரிய ஹோட்டலை நிர்வகிப்பவன்.. இது போன்ற பல கிளைகள் முக்கிய நகரங்களில் இருக்கின்றன..

அத்தனையும் அனாவசியமாக சமாளித்து ஹோட்டல் துறையிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவன்..  

பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கும் சக்ஸஸ்புல் பிசினஸ்மேன் என்றும் இல்லாத பதட்டத்துடனும் படபடப்புடனும் அமர்ந்து இருந்தான் அந்த பிரத்யேக அறையில்.

டார்க் ப்ளு ஜீன்ஸ்ம் சந்தன நிற ரவுண்ட் நெக் டீசர்ட் அணிந்திருந்தான்.. மீசை இல்லாத மலித்த பளிச்சென்ற முகம்.. துறுதுறு கண்கள் உதட்டில் எப்பொழுதும் உறைந்திருக்கும் குளிர் புன்னகை..

பார்ப்பவர்களை எப்பொழுதும் சுண்டி இழுக்கும் அவனின் வலிமையான அழுத்தமான இதழ்கள்..கூர் நாசி.. என ஒரு ஆணிற்கு தேவையான அத்தனை அம்சங்களும் பொருந்தி இருக்க, அந்த அறையில் அலங்காரம் செய்யபட்டிருந்த ஒரு உணவு மேஜையில் அமர்ந்து இருந்தான் ரிஷி..   

யாரையோ எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவன் போல அந்த அறையின் வாயிலையே நொடிக்கொரு தரம் பார்த்து கொண்டிருந்தான்..

“பாஸ்.... போதும்.. இதோட ஆயிரமாவது முறை இந்த வாயிலை பார்த்துட்டிங்க... கூடவே டென்ஷனும் வேற.. எதுக்கு பாஸ் இவ்வளவு டென்ஷன்? கூலா இருங்க... “ என்று  குறும்பாக சிரித்தான் அவன் எதிர்ப்புறம் அமர்ந்து இருந்த விவா..

“டேய் விவா... வந்திடுவா இல்ல. எல்லாம் சரியா நடக்கும் இல்ல? “ என்றான் கொஞ்சம் பதட்டத்துடன்..

“பாஸ்...இது கொஞ்சம் ஒவராதான் இருக்கு.. எதுக்கு பாஸ் இப்படி டென்ஷன் ஆகறீங்க..

நீங்க எல்லாம் ஒரு மல்ட்டி மில்லினர், பல கோடி தொழில்களுக்கு அதிபதி னு சொன்னா சிரிப்பாங்க.. “ என்று நமட்டு சிரிப்பை சிரித்தான்..

“டேய் ரொம்ப ஓட்டாத.. பிசினஸ் ல எத்தனையோ டீல் எல்லாம் ஊப் னு ஊதி விட்டுட்டு போய் இருக்கேன்.. ஆனால் இந்த லவ் சொல்றது இருக்கே...!!  

யப்பா.... ரொம்பவும் கஷ்டம் டா... வாழ்க்கையில லவ் மட்டும் பண்ணவே கூடாது.. உன் பாலிசிதான் பெட்டர்.. மேரேஜ் பர்ஸ்ட்.. லவ் நெக்ஸ்ட். “ என்று சிரித்தான் ரிஷி...

விவேக் ம் இணைந்து சிரித்தவன் அப்பொழுது அந்த கதவு லேசாக திறப்பதை போல இருக்க, வேகமாக ரிஷியின் பார்வை அங்கு சென்றது..

ஆனால் அது வேற ஒருவர் அறை மாறி வந்ததன் அடையாளமாக கதவை திறந்து உ:ள்ளே இருந்த ரிஷியை பார்த்ததும் சாரி சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டு சென்றார்...

ரிஷிக்கு ஏமாற்றமாக இருந்தது....மீண்டும் நொடிக்கொருதரம் பார்வை அந்த வாயிலையே சென்று வந்தது..அவன் பார்வையில் இருந்த தேடலை கண்டு கொண்ட விவா  

“பாஸ்... உங்களை இப்படி பார்த்தால் “தேடும் கண் பார்வை தவிக்க.. பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது... என்று அந்த பாட்டை மீண்டும் பாடினான்..  

தேடும் கண் பார்வை தவிக்க...  துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ...

:

:

“ என்று பாடியவன்

 

அதுவும் இந்த வரி இருக்கே.. இது உங்களுக்கு உங்க சிவிட்சுவேசன் க்கு பெர்பெக்ட் மேட்ச் பாஸ்...

 

காண வேண்டும் சீக்கிரம்...  என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ...  என் ஆசை காவியம்.....

 

என்று ராகமாக இழுத்து பாடி கண் சிமிட்டி சிரித்தான் விவா... ரிஷியை இயல்பாக்கவே அவனை கலாய்த்து கொண்டிருந்தான் விவா..

அவன் எதிர்பார்த்த மாதிரியே ரிஷியும் லேசாக வெட்கபட்டு கொஞ்சமாக அவனை முறைத்து அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தான்..

“டேய் விவா... நீ என்னை கலாய்க்கிற இல்ல.. இதுக்குனே உனக்கு சாபம் இடறேன்..

நீயும் ஒரு காலத்துல ம்ஹூம் ஒரு காலத்துல இல்ல.. சீக்கிரமே என்னை மாதிரி லவ் ஐ மனசுல வச்சுகிட்டு சொல்ல முடியாம நான் படும் இதே அவஷ்தை படணும்..

அதை பார்த்து நான் ரசிக்கணும்.. அப்ப நானும் நீ பாடின இதே பாட்டை உனக்கு பாடி காட்டணும்... காட்டுவேன் னுதான் உள்மனசு சொல்லுது.. என்ன டீலா? “ என்று கண் சிமிட்டி சிரித்தான் ரிஷி...

அவனின் அந்த கம்பீரமான சிரிப்பை தானும் ஒரு ஆண்மகன் என்றதையும் மறந்து ரசித்தவன் ரிஷி சொன்னதன் அர்த்தம் புரிய

“ஐயயோ ! இந்த நெட்டை சொன்ன சாபம் பலித்து விடுமோ? ஒருவேளை நானும் காதலித்து விடுவேனா? அப்படி காதலித்தால் என்னவள் யாரா இருக்கும்? “ என்று அவசரமாக யோசிக்க அடுத்த நொடி ரோஜா அவன் கண் முன்னே வந்து விரல் நீட்டி கொன்னுடுவேன் என்று மிரட்டினாள்..

அதில் திடுக்கிட்டவன்

“ஐயோ.. கணேஷ்... இது என்ன சோதனை..?. வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. இந்த நெட்டை படற பாடு போதும்... இந்த நரக வேதனை எனக்கு வேண்டாம்.. என்னையும் இந்த லவ் க்குள்ள கொண்டு வந்திடாத..

எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது.. எனக்கு ஒரு கனிமொழியோ தேன்மொழியோ பொறந்திருப்பா... அவளை கட்டிகிட்டு அவள் எனக்குத்தான் னு லைசென்ஸ் ஐ முதல்ல வாங்கிகிட்டு அப்புறம் காதலிச்சுக்கிறேன்...

ப்ளீஸ்... இந்த ரிஷி விட்ட சாபம் பலித்துவிடாமல் செய்து விடு.. “ என்று அவசரமாக உள்ளுக்குள் புலம்பினான்...

அவன் முகத்தில் வந்து போன யோசனையை கண்டு கொண்ட ரிஷி

“ஹே விவா... நீ முழிக்கிற முழியை பார்த்தால் ஏற்கனவே பொண்ணு ரெடி போல.. நீ காதல் கடல்ல குதிக்க தயாரா இருப்ப போல... வாழ்த்துக்கள்... யார்டா அது?” என்றான் அவனை குறுகுறுவென்று பார்த்தவாறு உதட்டில் கேலி சிரிப்புடன்..

“ஐயோ.. பாஸ் நீங்க வேற... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை..இந்த வீணாப்போன லவ் க்காக நீங்க படற இந்த நாய் படாத பாட்டை பார்த்தும் எனக்கு காதலிக்க தோணுமா என்ன?

அதெல்லாம் இல்ல பாஸ்.. என் வழி தனி வழி.. நான் அப்ப சொன்ன பாலிசிதான் இப்பவும்.. மேரேஜ் பர்ஸ்ட்.. லவ் நெக்ஸ்ட்.. “ என்று சமாளித்து சிரித்தான்..

ரிஷியும் இணைந்து சிரிக்க, அதே நேரம் அந்த வாசம் அவன் மான்குட்டியின் வாசம் எங்கிருந்தோ வந்து அவன் நாசியை தீண்டியது.. உடனே அவன் உடலின் அனைத்து புலன்களும் விழித்து கொண்டன..

பார்வை ஆவலுடன் வாயிலுக்கு செல்ல, அப்பொழுது கதவை திறந்து கொண்டு அந்த ஹோட்டலின் மேனேஜர் உள்ளே வந்தார்...

அவரை தாண்டி பார்வை பின்னால் செல்ல, மருண்ட விழிகளுடன் நின்றிருந்தாள் அவள்.. அவனவள். அவன் ரோஜா பொண்ணு.. தமயந்தி...

பெரிதாக வேலைப்பாடு எதுவும் செய்திடாத அதே சமயம் பார்க்க சிம்பிளாகவும் இல்லாமல் நேர்த்தியான மயில் கழுத்து கலர் சல்வார் அணிந்திருந்தாள்..

காதில் ஒரு சிறு கம்மல் கழுத்திலும் மெல்லிய தங்க சங்கிலி என எளிமையாக வந்திருந்தவளை கண்டதும் ரிஷியின் மனம் தடதடக்க ஆரம்பித்தது...

வயிற்றுக்குள் ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்  ஒன்றாக குபீரென்று எழுந்து பறப்பதை போல ஒரு படபடப்பு...துடிக்கும் இதயத்தை மானசீகமாக கை வைத்து அழுத்தி கொண்டவன் கால்கள் வேகமாக எழுந்து கொள்ள, இரண்டே எட்டில் வாயிலை அடைந்திருந்தான்..

“ஹாய் தயா பொண்ணு.. வா.... வா......வா...   “ என்று புன்னகைத்தவன்  அவளை அழைத்து வந்த மேனேஜர் க்கு நன்றி சொல்லி அவனை அனுப்பி விட்டு தமயந்தியை இருக்கையின் அருகில் அழைத்து வந்தான்..

தமயந்தியோ அந்த ஹோட்டலுக்கு வந்து இறங்கியதும் முதலில் ஹோட்டலின் வெளித்தோற்றத்தை பார்த்து பயந்து போனாள்..

கிட்டதட்ட ஐம்பது மாடிகளை கொண்டு கட்டப்பட்டு இருந்தது அந்த ஹோட்டல்..

ஆட்டோவில் வந்து இறங்கியவள் அதன் வெளித்தோற்றத்தை கண்டு பிரமித்து போனான்... அதன் உயரத்தை  நிமிர்ந்து பார்த்தே கழுத்து வலி வந்திருக்கும்  

இவ்வளவு பெரிய ஹோட்டலா  என்று பிரமித்தவாறு முழித்து கொண்டே உள்ளே வர, அவளுக்காகவே காத்திருந்த சீருடை அணிந்த இரு காவலர்கள் இடை வரை குனிந்து அவளை வரவேற்றனர்..

அதில் மிரண்டவள் ஆனாலும் சமாளித்து கொண்டு கண்களை சுழற்ற, அப்பொழுது கோட் சூட் அணிந்து கையில் பூங்கொத்துடன் நின்றிருந்த மற்றொரு நபர்  

அவள் தமயந்தி என உறுதிபடுத்து கொண்டு அவரும் இடை வரை குனிந்து அவள் கையில் பூங்கொத்தை கொடுத்து அவளை மரியாதையுடன் வரவேற்று அந்த பிரத்யேக அறைக்கு அழைத்து வர, தமயந்திக்கு இன்னும் நடுங்க ஆரம்பித்தது...  

தயக்கத்துடன் அவரை   பின் பற்றி செல்ல, அந்த ஹோட்டலின் உள் அமைப்பை பார்த்தே இன்னும் மிரண்டு போனாள்..

இந்த மாதிரி ஹோட்டலுக்கெல்லாம் அவள் முன்ன பின்ன வந்ததில்லை.. அதனால் அதன் பிரம்மாண்டம் அவளை மிரள வைத்தது..

அவளை அழித்து சென்றவர் ஒரு அறைக்கதவை திறந்து கொண்டு அவளுக்கு மரியாதையுடன்  வழிவிட்டு நின்று அவளை உள்ளே போக சொல்ல, அதில் இன்னும் மிரண்டு போனவள் உள்ளே செல்வதா வேண்டாமா என்று தயங்கி நிற்க,

அப்பொழுது உள்ளே இருந்து அவளை நோக்கி மென்னகை தவழ வேகமாக வந்த ரிஷியை கண்டதும் தான் நிம்மதியாக இருந்தது..

அவனை பார்த்ததும் நட்புடன் புன்னகைத்தாள் தமயந்தி...

அவளின் அந்த விரிந்த புன்னகை வறண்டு கிடந்த பாலைவனத்தில் விழுந்த சொட்டு மழை நீராய் சிலிர்க்க, துள்ளி குதித்தது அவன் உள்ளே..

ரிஷி அவளை பார்த்து ஒரு வாரம் ஆகி இருந்தது..

சென்ற வாரம் அவள் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவளை பார்க்க ஆவலுடன் சென்றிருக்க, அவனுக்கு பேரிடியாய் கிடைத்தது அந்த செய்தி அவள் ஏற்கனவே வேற ஒருவனுக்கு சொந்தமானவள் என்று...

அப்பொழுது கல்லூரியில் இருந்து திரும்பி வந்திருந்தவளை பார்த்துவிட்டு வந்தது தான்...

அடுத்த நாள் கண்ணம்மா அவனுடன் பேச வேண்டும் என்று அழைத்திருக்க, அன்று சென்ற பொழுது தமயந்தி வீட்டில் இல்லை.. ஆனால் கண்ணம்மா சொன்ன அவள் கடந்த கால கதையை கேட்டு ரொம்பவுமே மனம் உடைந்து விட்டான்..

பின் கண்ணம்மா அவளை மணந்து கொள்ள சொல்லி கேட்க அவனும் அவள் சம்மதித்தால் மணந்து கொள்வதாக சொல்லிவிட்டு சென்றான்... கெட்டதிலும் நல்லதாக அவன் அம்மா கஸ்தூரி அவனுக்கு திரும்ப கிடைத்துவிட்டதை போல இருந்தது..

ஏனோ கண்ணம்மாவை பார்த்த உடனே அவனுக்கு அவன் அன்னையின் நினைவுதான்..

அடுத்த நாள் அலுவலகத்தில் இருந்து திரும்பி இருந்தவன் இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் விழ அவன் மான்குட்டி கண்முன்னே வந்து நின்றாள்...

அவள் கடந்த இரண்டு வருடமாக வாழ்க்கையில் அனுபவித்த வலிகளும் வேதனைகளும் கண் முன்னே வர, அவளை இனிமேலாவது சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்று அவன் மனம் துடித்தது..

ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை.. எத்தனையோ பெரிய பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் அசால்ட்டாக செய்து முடித்தவன் காதல் என்று வரும்பொழுது மட்டும் உள்ளம் படபடப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை..

குறிப்பாக அவன் எதுவும் சொல்ல போய் அவள் காயபட்டு விடக்கூடாது என்று தான் தயங்கினான்..ஆனாலும் அவன் மனம் ஏனோ அவள் குரலையாவது கேட்க வேண்டும் போல தவித்தது..  

அலைபேசியை எடுத்து விட்டான்...அழைக்கவும் மனம் துடித்தது.. ஆனாலும் ஏனோ சிறு தயக்கம்.. கைவிரல் அவள் எண்ணை தேடி தயாராக வைத்திருந்தது.. அடுத்து அழைக்கலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்தான்..

முடிவை சொல்ல அந்த நடுவராகிய காலத்திடமே விட்டு விட்டு கண் மூட அடுத்த நொடி தீர்ப்பு கிடைத்துவிட்டது அவனுக்கு..

யெஸ்... அவன் அழைக்க தயங்கிய அவளே அழைத்திருந்தாள் அவனை.. ஒலித்த அலைபேசியில் திரையில் தெரிந்த பெயரை கண்டதும் அப்படியே துள்ளி குதித்தான்...

அவன் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.. வாழ்க்கையில் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்த மாதிரி துள்ளினான்..

அங்கு அலைபேசியோ இன்னும் அடித்து கொண்டிருக்க, உடனே அது நின்று விடுமுன்னே அவசரமாக அழைப்பை ஏற்று

“ஹ்ம்ம்ம் சொல்லுடா தயா..... “ என்றான் அவனையும் அறியாமல் உற்சாக மிகுதியில்.

எப்படி வந்ததாம் அந்த கனிவு அவன் குரலில்..?  எது அழைக்க சொல்லியதாம் அவளை சொல்லுடா என்று .. புரியவில்லை அவனுக்கு அந்த நொடியில்...

ஆனாலும் வந்திருந்தது அப்படி ஒரு வார்த்தை அவனிடமிருந்து. அதற்கு பிறகுதான் உறைத்தது அவளை அழைத்த விதம்...

உடனே கொஞ்சம் பதற்றம் தொற்றி கொள்ள அவள் என்ன சொல்ல போகிறாளோ? என்று ஆர்வமாக காத்திருக்க, கேட்டது அந்த குரல்....

அவன் உயிர் வரை சென்று தீண்டியது... அவனை உயிர்பித்து தட்டி எழுப்பியது அந்த குரல்....

“ரிஷி கண்ணா... நான் அம்மா பேசறேன் பா..... சாப்டியா......? “ என்ற குரல் அவன் கன்னம் வருடி இதயத்திற்குள் சென்று உள்ளே தன் அன்னைக்காக ஏங்கி கொண்டிருந்த ஆழ்மனதை தட்டி எழுப்ப அப்படியே உறைந்து விட்டான்...

இது அப்படியே அவன் அன்னையின் குரல் அல்லவா...! கேட்கும் விதம் கூட அப்படியே அவன் அன்னை நேரில் இருந்து அவன் கன்னம் வருடி கேட்பதை போல அல்லவா மனதை வருடுகிறது.....

“மை மாம்.... என்னை விட்டு எங்கயும் போகலை... இதோ இதோ... என்னுடன் பேசுகிறாள்... “ என்று துள்ளி குதித்தவன்

“மா..................... “ என்றான் அடிவயிற்றில் இருந்து...

அதே கேட்டு கண்ணம்மாவும் ஒரு நொடி பேச்சிழந்து போனார்.. அந்த குரல் அவர் மகனுடையது அல்லவா? அப்படியே அவனே நேரில் வந்து அழைப்பது போல இருக்க

“ந... நளா........ “ என்றார் தன்னையும் மறந்து..

உடனே அவரின் மனநிலையை புரிந்து கொண்டவன் அவரை இயல்பாக்க எண்ணி

“சொல்லுங்க மா.... நான் சாப்டேன் நீங்க சாப்டிங்களா? “ என்றான் தழுதழுத்தவாறு...

“ஹ்ம்ம்ம் ஆச்சுப்பா.. என் போன்ல சார்ஜ் இல்ல.. அதான் தமா போன்ல இருந்து பண்ணேன்.... உன் குரலை கேட்கணும் போல இருந்தது.. அதான் பண்ணேன்.. தொந்தரவு  பண்ணிட்டனா...? “ என்றார் தயக்கத்துடன்..

“அச்சோ.. என் அம்மா அழைப்பது எனக்கு தொந்தரவு ஆகுமா? நீங்க எப்ப வேணா எனக்கு கால் பண்ணலாம் மா... உங்களுக்குத்தான் பர்ஸ்ட் பிரிபரன்ஸ்... “

என்று புன்னகைத்தவன் அவரிடம் சிறிது நேரம் கதை பேசி கொண்டிருந்தவன் பின் தமயந்தியை பற்றி கேட்க அவரும் போனை அவளிடம் கொடுத்தார்...

அவள் அதை வாங்கி கொண்டு

“சொல்லுங்க ரிஷி சார்.. எப்படி இருக்கிங்க.? . “ என்றாள் மலர்ந்து சிரித்தவாறு..

வெளியில் சிரித்தாலும் அவள் உள்ளுக்குள் இருக்கும் வலியை உணர்ந்தவன் அவளை மனதில் மெச்சி கொண்டு

“ஐம் பைன் தயா....சாப்டியா? “ என்றான்...

அதற்கு பிறகு சிறிது நேரம் உரையாடிவிட்டு அலைபேசியை அணைக்க, மனம் நிறைவாய் இருந்தது அவனுக்கு..

இதுவரை மனதை அழுத்தி வந்த ஏதோ ஒரு பாரம் விலகியதை போல இருந்தது.. தன் பெற்றோர்களை இழந்து தனிமரமாக நின்றவனுக்கு ஒரு குடும்பம் கிடைத்து விட்ட மகிழ்ச்சி..

அதுவும் அவளிடம் பேசிய அந்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாக புதைத்து கொண்டான் தன்னுள்ளே..

அதற்கு பிறகு தினமும் இரவு அழைத்து கண்ணம்மாவுடன் பேசுவதை வாடிக்கையாக வைத்து கொண்டான்.. கூடவே தமயந்தியிடம் சிறிது நேரம் பேசி வைப்பான்.. ஆனால் அவன் மனதை வெளிபடுத்தாமல் ஒரு நல்ல நண்பனாக தொடர்ந்தான்..

இப்படியே ஒரு வாரமாக அலைபேசியில் மட்டுமே அவள் குரலை கேட்டு கொண்டிருக்க அடுத்து அவளை  நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது..

ஆனால் எப்படி பார்ப்பது? என்ன சொல்லி அவள் வீட்டுக்கு செல்வது என்று தயக்கமாக இருந்தது...அப்பொழுதுதான் விவா இந்த ஐடியாவை கொடுத்தான்..

ஏதாவது ட்ரீட் கொடுப்பதாக சொல்லி அவளை அழைக்க சொன்னான்..அன்றே அவன் மனதில் இருப்பதையும் தமயந்திடம் சொல்லி விட சொன்னான்.. அதை கேட்டு யோசித்தான் ரிஷி..

அவள் மட்டும்தான் என்றால் அவள் ஒத்துக் கொள்ள மாட்டாள் என புரிய மேலும் அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ரோஜாவையும் வரவழைத்து கூடவே விவேக்  மற்றும் ரோஜாவுக்கும் அவனுக்கு உதவி செய்ததற்கு நன்றி சொல்லும் விதமாக நான்கு பேருக்குமாய் இந்த டின்னரை அரேஞ் பண்ணி இருந்தான் ரிஷி..

கண்ணம்மா தமயந்தி இருவரையுமே அழைத்தான்.. ஆனால் கண்ணம்மா வர மறுத்து விட, தமயந்தியை மட்டும் அவர் கட்டாயபடுத்தி அனுப்பி வைத்தார்..

கூடவே ரிஷி அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக சொல்லவும் கொஞ்சம் யோசித்தவள் வருவதாக ஒத்து கொண்டாள்..

அவள் ஒத்து கொண்டாலும் வருவாளா மாட்டாளா என்றுதான் பதட்டத்துடன் காத்திருந்தான்...

அவள் சொன்னபடி இதோ வந்தும் விட்டாள் அவனவள்...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!