தேடும் கண் பார்வை தவிக்க-41
அத்தியாயம்-41
ஒரு வாரம்
கழித்து அவளை பார்க்கவும் அவன் உள்ளே மழைச்சாரல்..
ஆனாலும்
தன்னை மறைத்துக் கொண்டு, புன்னகைத்தவாறு அவளை வரவேற்க, அவளும் புன்னகைத்தவாறு அவனை
நோக்கி சென்றவள் விவா வை பார்த்து அவனிடம் புன்னகைத்து நலம் விசாரித்தவள்
எதார்த்தமாக ரிஷியின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..!
அது நால்வர்
அமரும் மேஜை..!
ஒவ்வொரு
பக்கமும் இரண்டு பேராக அமரும் படி இருந்தது..
ஒரு பக்கம்
விவேக் அமர்ந்திருக்க, அவன் அருகில் அமராமல் ரிஷி அமர்ந்து இருந்த
பக்கம் சென்று அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்..
அதைக் கண்ட ரிஷி இன்னும் துள்ளி குதித்தான்..
இருக்கையில்
அமர்ந்தவள் அந்த அறையை சுற்றிலும் நோட்டமிட, அதன் பிரம்மாண்டத்தை கண்டு அதிசயித்துப் போனவள்
"வாவ் !! சூப்பரா இருக்கு ரிஷி சார்.. இந்த ஹோட்டலும் உங்களுடையது தான. " என்று கன்னம் குழிய சிரித்தாள்..
அவனும் ஆமாம்
என்று கண்களால் பதில் சொன்னவன் பின்
அவளுடைய கல்லூரி படிப்பை பற்றி விசாரித்தான்..
இரண்டு நிமிடம்
இயல்பாக பேசியவன்
“ஆமா ரிஷி
சார்... இப்ப எதுக்கு ட்ரீட் தர்றீங்க? என்ன ஸ்பெஷல்? எதுவும் கமிட் ஆகிட்டீங்களா? “ என்று குறும்பாக கண்
சிமிட்டி கேட்டாள்..
அதை கேட்டு
திடுக்கிட்டான் ரிஷி..
ஆமா எதுக்கு
ட்ரீட் தருவதாக சொல்வது என்று அவசரமாக யோசித்தவன் கூடவே அவள் கமிட் ஆகிட்டிங்களா
என்று கேட்கவும் அவனும் மெல்ல வெட்கப்பட்டு சிரித்தவாறு
“அதுவும் ஒரு
காரணம் தான் தயா.. ஆனால் இந்த ட்ரீட் வேற ஒன்றுக்காக..” என்றான் சிரித்தவாறே..
“ஓ.. சூப்பர்
சார்... கன்கிராட்ஸ்.. அப்ப சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடப்போறிங்க.. “ என்று
குழிந்து சிரித்தவள்
“சரி... அப்ப வேற
எதுக்கு இந்த ட்ரீட்? “ என்று விடாமல் நோண்டி யோசனையாக பார்க்க ரிஷியும்
இதற்கு என்ன சொல்வது என்று மீண்டும் அவசரமாக யோசித்தவன்
“வந்து.. நம்ம விவா பர்த்டே.. அதுக்காக அவனுக்கு ட்ரீட்..
கூடவே நம்ம ப்ரெண்ட்ஷிப் ஐயும் கொண்டாடும் விதமாக உனக்கு ஒரு சர்ப்ரைஸ்
கொடுக்கலாம் என்று இந்த ட்ரீட். “ என்று சொல்லி விவேக்கை பார்த்து கண் சிமிட்டினான் ரிஷி...
அதை கேட்டு
திடுக்கிட்ட விவேக்
“அடப்பாவி நெட்டை.. எனக்கு போன மாசம் தானே பர்த்டே
முடிந்தது.. ஒரு ஆளுக்கு எத்தனை பர்த்டே கொண்டாடுவாங்க.. எல்லாம் இந்த காதல்
படுத்தும் பாடு.. அடுத்தவன் பர்த்டே க்கு எல்லாம் ட்ரீட் தர்றேன் னு சொல்லி லவ்
பண்ற புள்ளைய வரவைக்கறானுங்க.. “
என்று உள்ளுக்குள்
புலம்பினான்.. ரிஷி சொன்னதை கேட்ட தயா விவேக்கிடம் கை நீட்டி
“ஹேப்பி பர்த்டே
விவா சார்.. “ என்று சிரித்தாள்..
ரிஷி வாயை
பொத்தி கொண்டு சிரிப்பை அடக்கி கொள்ள, அவனோ ரிஷியை
செல்லமாக முறைத்தவாறு
“தேங்க்ஸ்
சிஸ்டர்... " என்று புன்னகைத்தான்..
அதே நேரம் விவேக்
ன் பார்வை வாயிலையே பார்த்து கொண்டிருந்தது... வாய் அவர்களுடன் பேசி கொண்டிருந்தாலும்
பார்வை என்னவோ வாயில் பக்கமே இருந்தது...
"என்ன
மேன்...! தேடும் கண் பார்வை தவிக்க
வா? " என்று ரகசியமாக அவனிடம் மட்டும் சொல்லி
கண் சிமிட்டி சிரித்தான் ரிஷி
விவேக் ம் லேசாக
வெட்கப்பட்டு சிரித்து
“அதெல்லாம்
ஒன்னும் இல்ல பாஸ்... நீங்க பாட்டுக்கு ஏதாவது கற்பனை பண்ணிக்காதிங்க.. “ என்று
செல்லமாக முறைத்தான்..
அதேநேரம் அவன் அலைபேசி
ஒலிக்க அவர்களிடம் சொல்லிவிட்டு அந்த அழைப்பை ஏற்றவாறு எழுந்து சென்றான்.. அப்பொழுது
தமயந்தி மீண்டும் ரிஷி சார் என்று அழைத்து ஏதோ சொல்ல வர
"தயா...
இப் யூ டோன்ட் மைன்ட் இந்த சார் ஐ விடேன்.. அது என்ன உன் காலேஜ் புரபஸரை கூப்பிடற
மாதிரி சார் ன்னு கூப்பிடற.. “ என்று செல்லமாக முறைத்தான்..
“அது எப்படி ரிஷி
சார்.. நீங்க எவ்ளோ பெரிய ஆளு.. உங்கள
போய் பேர் சொல்லி கூப்பிட முடியுமா? “ என்றாள் அவளும் சிரித்தவாறு..
“ஹ்ம்ம் எவ்ளோ
பெரிய ஆள்..? நானும் ஒரு ஆறடிக்கு கொஞ்சம் அதிகமாதான்
இருக்கிறேன்..இதுக்கெல்லாம் நீ சார் போட்டு என்னை வயசானவனா ஆக்க வேண்டாம்..
அன்னைக்கு
மட்டும் பிளைட்ல என்னை பேர் சொல்லிக் கூப்பிட்ட இல்ல.. அப்ப எப்படி கூப்பிட வந்ததோ அதே மாதிரி
கூப்பிடு.. “ என்று புருவங்களை உயர்த்தினான்
குறும்பாக சிரித்தவாறு..
“அது வந்து... அப்ப நீங்க இவ்ளோ பெரிய ஆளுனு தெரியாது.. சும்மா யாரோ தெரிஞ்சவங்க னு பீல்
ஆச்சா.. அதான் அப்படி சொல்லிட்டேன்... சாரி தப்பா எடுத்துக்காதீங்க.. “ என்றாள் வருத்தத்துடன்..
“சே சே இதில
தப்பா எடுத்துக்க என்ன இருக்கு தயா.. என்னை உரிமையோடு ரிஷி னு கூப்பிடுறது தான்
பிடிச்சிருக்கு.. ப்ளீஸ் அப்படியே கூப்பிடு.. “ என்றான்..
“இல்ல சார்... அது
சரியா இருக்காது.. நான் சார் னே கூப்பிடுறேன்.. “ என்றாள் தயக்கத்துடன்..
“ஹோய் தயா
பொண்ணு.. அன்னைக்கு நீ என்னை எப்படி எல்லாம் கொஞ்சின தெரியுமா? தூக்கத்துல மாமா மாமா னுதான் கூப்பிட்ட.. அப்போ கூப்பிட்ட மாதிரி
என்னை மாமானு கூப்பிடு இல்லனா ரிஷி னு கூப்பிடு..” என்று செல்லமாக அதட்டினான்..
“ம்ஹூம்...மாட்டேன்..
அதெல்லாம் முடியாது.. “ என்று அவள் சிணுங்க
“அப்படினா நீ
அன்னைக்கு என்னை கொஞ்சினதை யெல்லாம் நான் கண்ணம்மா அம்மாகிட்ட காண்பிப்பேன்.. எல்லாமே
நான் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்.. எப்படி வசதி? “ என்று புருவம் உயர்த்தி குறும்பாக மிரட்டினான்...
“ஐயையோ.. இப்படியெல்லாமா
செஞ்சீங்க..! ஒன்னுமே தெரியாதவன் மாதிரி நடிச்சிட்டு நான் தூக்கத்துல உளறினதை
எல்லாம் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கிங்க.. சரியான ப்ராட்..! ” என்று அருகில்
இருந்த அவன் கையை செல்லமாக அடித்தவள்
“ப்ளீஸ்
சார்..அத்தை கிட்ட அதை காட்டிடாதிங்க...அத்தை என்ன ஓட்டுவாங்க.. அத
கொடுத்துடுங்களேன்.. “ என்று வெட்கப்பட்டு
பாவமாக முகத்தை வைத்து கொண்டு சிணுங்கினாள்..
அவளின் அந்த
குழந்தைதனமான முகத்தையும் அவளின் பாவமான முக பாவத்தையும் செல்ல சிணுங்களையும் காண
காண திகட்டவில்லை ரிஷிக்கு..
அப்படியே அள்ளி
அணைத்து கொள்ள சொல்லி துடித்தது அவன் உடலின் ஒவ்வொரு அணுவும்.. முயன்று தன்னை
கட்டு படுத்தி கொண்டவன்
“ஹா ஹா ஹா சரி
அப்படினா என்னை மாமானு கூப்பிடு.. இல்லை னா ரிஷி னு கூப்பிடு.. “ என்று மீண்டும் செல்லமாக மிரட்ட அவளோ
“சரி ரிஷி சார்...
“ என்று ஆரம்பித்தவள் ரிஷி என்று முடித்துக் கொண்டாள்.. அதே நேரம் அந்த அறை கதவை திறந்துகொண்டு புன்னகையுடன்
உள்ளே வந்தாள் ரோஜா..
அழகான இளஞ்சிவப்பு
புடவையில் ரோஜாவை உடல் எங்கும் வாரி இறைத்ததை போல ரோஜா பூக்களாக பூத்து குலுங்கும்
ஒரு புடவையில் வந்திருந்தாள்...
அந்த அறையின்
ஓரமாக நின்று போன் பேசி கொண்டிருந்த விவேக் ன் கண்கள் எதேச்சையாக வாயில் புறம்
பார்க்க, ஒரு ரோஜா குவியலாய் புன்னகையுடன் உள்ளே
வந்தவளை கண்டதும் அவன் மனம் எகிறி குதித்தது...
கண்கள் விரிய
ஒவ்வொரு அடியாக மெது மெதுவாக எடுத்து வைத்து வந்தவளையே அவனையும் அறியாமல் இமைக்க
மறந்து ரசித்து பார்த்து கொண்டிருந்தான் விவேக்..
ரோஜாவை கண்டதும் கண்கள் விரிந்தன தமயந்திக்கும்...
உடனே பார்வை
ரிஷியின் பக்கம் சென்றது.. இதுதான் அவன் சொன்ன சர்ப்ரைஸ் ஆ என்று பார்வையில் வினவ, அவனோ இமைகளை தாழ்த்தி ஆம் என்க கண்களால் நன்றி சொன்னாள்..
உடனே வேகமாக
எழுந்தவள்
“ரோஜா. அக்கா...
எப்படி இருக்கிங்க... ? “ என்று சந்தோஷத்தில் கூவியவாறு ஓடி
சென்று அவளை கட்டி கொண்டாள் தமயந்தி..
ரோஜாவும் அவளை
பார்த்த சந்தோஷத்தில் மலர்ந்து சிரித்தவள்
“ஹே சின்ன
ரோஜா... எப்படி இருக்க? “ என்று அவள் கன்னத்தை பிடித்து
செல்லமாக கிள்ளினாள்..
“ஐம் பைன் கா...
உங்களை இங்க பார்ப்பேனு எதிர்பார்க்கவே இல்லை..உங்களை பார்க்க ரொம்ப சந்தோஷம்.. அன்னைக்கு நீங்க
மட்டும் உதவி செய்யலைனா என் ஆசை நிறைவேறி இருக்காது. ரொம்ப தேங்க்ஸ் கா.. “ என்று தழுதழுத்தாள்..
“ஹே ஹமான்.. நோ
சென்டிமென்ட்ஸ்..சியர் அப்.. சின்ன ரோஜா
டியர்...” என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினாள் ரோஜா..
தமயந்தியும்
புன்னகைத்தவள்
“அது என்ன சின்ன
ரோஜா கா ? “ என்றாள் யோசனையுடன்..
அதே நேரம்
விவேக் ம் வேகமாக அவர்கள் அருகில் வந்திருந்தான்.. தமயந்தி கேட்டதுக்கு உடனே
ரோஜாவின் பார்வை விவேக் இடம் செல்ல அவனோ எதுவும் சொல்ல வேண்டாம் என்று கண்ணால்
ஜாடை காட்டினான்..
தமயந்திக்கு
ரிஷி அவளை தேடிக் கண்டுபிடித்தது இன்னும் தெரியாது.. அவன் எதார்த்தமாக அவளை
சந்தித்ததை போலத்தான் சொல்லி வைத்திருக்கிறான்..
அதனால் அதை
அப்படியே மெய்ன்டெய்ன் பண்ண வேண்டி ரோஜாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஜாடை
காட்டியவன்
“அதுவா சிஸ்டர்..
நீங்க ரெண்டு பேருமே பார்க்க ஒரே மாதிரியா இருக்கீங்களா? அதனால் அவங்க உங்களை சின்ன ரோஜா னு கூப்பிடலாம்..
என்ன ரெட் ரோஸ்.. நான் சொன்னது கரெக்ட்தான.. “ என்று கண்சிமிட்டி
சிரித்தான்..
ரோஜா அவனை
முறைத்தவாறே தமயந்தியிடம் திரும்பியவள் ஆமாம் என்று சொல்லி அவளை அணைத்தவாறு
மேஜைக்கு அழைத்து வந்தாள்..
ஆண்கள் இருவருமே
அப்பொழுது தான் அவர்கள் உருவ ஒற்றுமையை கவனித்தனர்..
உலகத்தில் ஏழு
பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறார்கள்.. அதேபோல இவர்கள் இரண்டு
பேரும் முக ஜாடையிலும் உருவத்திலும் ஒரே
மாதிரி இருந்தனர்..
பார்ப்பவர்கள்
அக்கா தங்கை என்றுதான் சொல்லுவர்..
“அந்த மாதிரி
ஒற்றுமை இருந்ததால் தான் இந்த ரெண்டு பொண்ணுங்களும் பிராடு பண்ணி இருக்குங்க.. லண்டன்
வரைக்கும் போயிட்டு வந்திருச்சுங்க.. “ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் விவேக்..
ரோஜா எதார்த்தமாக
விவேக்கின் அருகில் அமர்ந்து கொள்ள அவளுக்கு ரிஷியை விவேக்கின் அசிஸ்டன்ட் என்ற
வகையில் முன்பே தெரியும் என்பதால் அவனிடம் கை குலுக்கி நலம் விசாரித்து
அமர்ந்தாள்..
பின் கண்களால்
சுற்றி பார்த்தவள் விவேக்கிடம் குனிந்து
“விவா.. எங்க உன் கிளைன்ட் ஐ காணோம்..? அவர்தானே இந்த ட்ரீட்
கொடுப்பதாக சொல்லி என்னை வரச் சொன்ன.. அவர் எங்க காணோம்?
இவ்வளவு பெரிய ஹோட்டல் ல ட்ரீட் தர்றார் னா பெரிய ஆள்தான்.. யாருப்பா அந்த
வி.ஐ.பி..? “ என்று கிசுகிசுத்தாள்..
அவளிடம் ரிஷி தான்
தமயந்தியை தேடியவன் இன்று இன்னும் சொல்லியிருக்கவில்லை.. அதனால் ரோஜா
குழப்பத்துடன் விவேக்கிடம் விசாரிக்க
“ஹ்ம்ம்
சீக்கிரம் வருவார் ரெட் ரோஸ்..நான் உனக்கு எல்லாம் அப்புறம் சொல்றேன்.. இப்ப
முதல்ல சாப்பிடுவத பாரு.. இந்த மாதிரி ஒரு
பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு இன்னொரு தரம் கிடைக்காது.. நல்லா மூக்கு முட்ட காஸ்டிலியான
ஐட்டம்ஸ் ஆ பார்த்து சாப்பிட்டுக்கோ.. “
என்று கண்
சிமிட்ட, அவளோ அவனை முறைத்தாள்..
அடுத்து விவேக் ஐ மறந்து தமயந்தியை பார்த்து கதை பேச
ஆரம்பித்தாள்..
ரிஷி அங்கு
காத்திருந்த பணியாளரிடம் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்ய அடுத்த ஒரு மணி நேரம்
நால்வரும் கலகலப்பாக பேசி சிரித்து உணவை ரசித்து சாப்பிட்டனர்..
தமயந்தியும்
ரோஜாவுக்கு இணையாக வாய் அடித்துக் கொண்டே இயல்பாக பழகுவதை கண்டு ரிஷிக்கு ஆச்சரியமாக
இருந்தது.. அப்பொழுதுதான் ஒன்று புரிந்தது..
அவள் கவலை
எல்லாம் உள்ளுக்குள் வைத்து அழுத்திக் கொண்டு வெளியில் சிரித்துக்
கொண்டிருக்கிறாள்.. இல்லை சிரிப்பதை போல நடித்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது..
ஆனாலும் அதைப் பற்றி
நோண்டாமல் அவளை சிரிக்க வைத்து பேசிக் கொண்டிருந்தான்.. கூடவே அவனுக்கு பிடித்த சில டிஸ்களை டேஸ்ட்
பண்ணிப் பார்க்கச் சொல்லி அவள் தட்டில் எடுத்து வைத்தான்..
ஒருவழியாக
சாப்பிட்டு முடித்து இருக்க பெண்களுக்கான ஐஸ்கிரீம் ங்களை வரவழைத்து கொடுத்தவன் பார்வை
விவேக்கிடம் சென்றது..
விவேக் ம் கண்களால்
ஏதோ ஜாடை சொல்ல, ரிஷிக்கு அதுவரை இருந்த இயல்புத்தன்மை
மாறி படபடப்பு வந்து ஒட்டிக்கொண்டது..
விவேக் தன்
சாப்பாட்டை முடித்து இருந்தவன் கையை கழுவிக் கொள்ள அதே நேரம் மீண்டும் அவனுக்கு
அழைப்பு வந்தது..
இந்த முறை
மற்றவர்களிடம் சொல்லிவிட்டு அழைப்பை ஏற்று பேச அறைக்கு வெளியில் சென்றான்.. கூடவே
ரிஷிக்கு கட்டை விரலை உயர்த்திகாட்டி தம்ஸ் அப் சொல்லி கண் சிமிட்டி சென்றான்..
அடுத்த இரண்டு
நிமிடத்தில் ரோஜாவின் அலைபேசிக்கு மெசேஜ் வந்ததற்கான ஒலி எழுப்ப அதை எடுத்து பார்த்தவள்
அதில் விவேக் அவளை வெளியில் வருமாறு அழைத்திருக்க,
யோசனையுடன் இருவரையும் பார்த்தவள்
Comments
Post a Comment