தேடும் கண் பார்வை தவிக்க-42

 


அத்தியாயம்-42

வெளியில்  விவேக் ரோஜாவுக்காக காத்து கொண்டிருக்க,

“ஹே.. விவா.. எதுக்கு இப்ப என்னை வெளில வரச்சொன்ன? இன்னொரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் னு இருந்தேன்.. அதுக்குள்ள என்ன வரசொல்லிட்டியே.. என்ன மேட்டர்.. ? “ என்றாள் யோசனையாக..

“ஹ்ம்ம்ம் உன்கிட்ட ஆசையா கொஞ்ச நேரம் பேசி கிட்டு இருக்கலாம்னுதான் ரூப்ஸ்.. “ என்று கண் சிமிட்ட அவளோ அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்க்க

“ஹப்பா... என்ன ஒரு கோபம்... பாவன் உன் சது.. இப்படி முறைச்சு பார்த்தே அவரை உன் கால் ல விழ வச்சிடுவ போல.. “ என்று குறும்பாக சிரித்தான்..

சது என்ற பெயரை கேட்டதும் அதுவரை முறைத்து கொண்டிருந்த முகம் மாறி உடனே ஒரு கனிவு வந்து ஒட்டிகொண்டது.. முகம் வெட்கத்தில் சிவக்க, விவேக் அவளின் அந்த சிவந்த முகத்தை கண்டதும் ஏனோ மனம் எகிறி குதித்தது...

அதை கண்டு திடுக்கிட்டவன்

“டேய் கணேஷ்.. உன் வேலையை காட்ட ஆரம்பிச்சிட்யா? நான்தான் யாரையும் லவ் பண்ண மாட்டேன் னு சபதம் செய்திருக்கேனே..! அப்புறம் ஏன் இந்த ரெட் ரோஸ் ஐ பார்த்தா மட்டும் என்னை தவிக்க விடற?

இதெல்லாம் உன் ஆட்டம் னு தெரியுது.. நான் உன் ஆட்டத்துக்கு வரலை.. எனக்கு ஆப்பு வைக்க அந்த சது பய ரெடியா  இருக்கான்.. ஆப்பு இருக்குனு தெரிஞ்சே யாராவது ரிஸ்க் எடுப்பாங்களா..?  

எனக்கு இந்த காதல் கன்றாவதி எல்லாம் வேண்டாம்.. மீ பாவம்.. என்னை விட்டுடு.. உனக்கு நூத்தி எட்டு தேங்காய் உடச்சிடறேன்.. “ என்று உள்ளுக்குள் புலம்பியவன் முயன்று  தன்னை கட்டுபடுத்தி கொண்டு அவளிடம் இருந்து பார்வையை மாற்றி கொண்டு

“கேன் வி கேவ் எ வாக்.. ? “ என்றான் தாழ்ந்த கரைந்த குரலில்..

அதை கேட்டு திகைத்தவள்

“வாட்? “ என்று  புருவத்தை நெரிக்க

“ஹீ ஹீ ஹீ.. சாப்பிட்டது புல் ஆ இருக்கு இல்ல ரெட் ரோஸ்.. அது டைஜெஸ்ட் ஆக கொஞ்சம் இப்படி நடக்கலாமா னு கேட்டேன்.. ஏன் இப்படி கேட்க கூடாதா? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு..

அவளும் இடம் வலமாக தலையை அசைத்து சிரித்தவள்

“உங்களுக்கு என்னமோ ஆய்ருச்சு விவா.. ஏதோ சொல்ல நினைக்கறீங்க.. அதை சொல்லாம இப்படி சுத்தி வளைக்கறீங்க.. சரி வாங்க.. ஒரு வாக் போகலாம்.. “ என்று சிரித்தவாறு அந்த புல் தரையில் முன்னே நடந்தாள்..

நொடியில் அவன் மனதில் இருப்பதை புரிந்து கொண்டவளை கண்டதும் இன்னும் அவன் மனம் அவள்பால் தறிகெட்டு ஓடியது.. அதை அடக்கி கொண்டவன் அவளுடன் இணைந்து நடந்தவாறு

“இந்த சேரில ரொம்ப சூப்பரா இருக்க ரெட் ரோஸ்... நைஸ் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் உனக்கு.. “ என்று மனதில் பட்டதை கூற அவளும் எதார்த்தமாக எடுத்து கொண்டு

“தேங்க்ஸ் விவா.. உங்களுக்கு தெரியுது.. ஆனால் சது இருக்கானே அவனுக்கு இந்த மாதிரி ரசனை எல்லாம் இல்லை.. எப்படி ட்ரெஸ் பண்ணிகிட்டு போனாலும் நோ கமெண்ட்ஸ்.. “ என்று இயல்பாக அவள் மனதில் பட்டதை சொன்னாள்..

அவனும் அவளுக்கு சமாதானம் சொன்னவன்

“ஆமா உங்களோட லவ் ஸ்டோரிய  சொல்லேன்..எப்படி உங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு?  யார் ஃபர்ஸ்ட் ப்ரொபோஸ் பண்ணினா? “  என்றான் ஆர்வத்துடன்..

“ஹ்ம்ம் சது என்னுடைய ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டா தான் அறிமுகம் ஆனான்.. என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டுக்கு தெரிஞ்சவன் னு நினைக்கிறேன்..

எப்படியோ  எனக்கு ஒரு நாள் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தான்.  நானும் அதை அக்சப்ட் பண்ணிக்க அதற்கு பிறகு  அப்ப அப்ப சாட் பண்ணிகிட்டோம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நட்பு வளர்ந்தது..

ஒரு நாள் சது தான் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லி அழைக்க நானும் எதார்த்தமாக சென்றேன்.. உடனே ஒரு ரோஜாவை கையில் கொடுத்து ஐ லவ் யூ சொல்லிட்டான்..  

அதைக்கேட்டு நானும் திகைத்து போனேன்.. எனக்கு அப்பொழுது அந்த மாதிரி எந்த ஒரு எண்ணமும் இல்லை.. ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என்ற அளவில்தான் இருந்தது..

ஆனால் அவன் தன் காதலைச் சொல்லி ப்ரபோஸ் பண்ண,  எனக்கும் அதை மறுக்க எந்த காரணமும் இல்லை.. நல்லா படிச்சிருக்கான்..  நல்ல வேலைக்கு போகிறான்..குடும்பமும் ஓரளவுக்கு செட்டிலான குடும்பம் தான் பழகின வரை நல்லவனாக தெரிந்ததால் உடனே நானும் ஓகே சொல்லிட்டேன்..

ஆனால்  எங்க அப்பாவை பற்றி யோசித்து இருக்கவில்லை அப்பொழுது..  அவர் காதலுக்கு எதிரியாக இருக்க மாட்டார் என்று எண்ணியிருந்தேன்

ஆனால் ஒரு நாள் மற்றவர்களிடம் பேசும்போதுதான் அவர் காதலை எவ்வளவு வெறுக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.. அதனால்  இன்னை வரைக்கும் எங்க காதலை வீட்டுக்கு செல்லாமல் தான் மறைத்து வைத்திருக்கிறேன்.. “ என்றாள் கொஞ்சம் வேதனையுடன்..

அவள் ஸ்டோரியை கேட்டவன் வியந்து

“அது எப்படிங்க?  ஃபேஸ்புக்ல ஃபிரெண்டான ஒருத்தனை நம்பி வாழ்க்கையை ஒப்படைக்க இருக்கறீங்க? “  என்றான் ஆச்சரியத்துடன்..

“ஹலோ.. இப்ப நீங்க கூட தான் எனக்கு ஒரு சந்திப்பில் அறிமுகமானிங்க.. உங்க கூட ஃபிரெண்டா இருக்கலையா?  உங்களோட பின்புலம் எல்லாம் விசாரிச்சுகிட்டா பிரெண்ட்ஷிப் வச்சுக்க முடியும்?

அதுமாதிரி  முகம் தெரியாத முன்ன பின்ன அறிந்திராத இருவரை இணைக்கும் பாலம் தான்  ஃபேஸ்புக் மற்றும் அதர் சோஸியல் மீடியாஸ்.. ஒருத்தங்களுடைய கான்டாக்ட் கிடைத்தாலும் மற்ற விவரங்கள் எல்லாம் நாமலே தெரிஞ்சுக்க வேண்டியதுதான்.. கூடவே பழக பழக அவங்க நல்லவங்களா கெட்டவங்களானு  தெரிஞ்சுடும்...

அவ்வளவு ஏன் இன்று 90% மேரேஜ் முகம் தெரியாத இருவரை இணைத்து வைப்பதே நம்ம மெட்ரிமோனியல் வெப்சைட்கள் தான்..

இணையத்தின் வழியாக பழகுபவர்கள் அதிகம் விவா.. யாரோ ஒரு சிலர் சீட் பண்ணுகிறார்கள் என்பதற்காக எல்லாரையும் அந்த லிஸ்ட் ல சேர்த்துட முடியாது..  நாமதான் ஜாக்கிரதையா இருந்துக்கணும்.. " என்று பொரிந்தாள்..

அவள் முகத்தில் ஜொலித்த கோபத்தையும் ரசித்தவன்

“சில்...  சில்.. ரெட் ரோஸ்.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.. அதுக்கு எதுக்கு மதுரையை எரித்த கண்ணகி மாதிரி இந்த பொங்கு பொங்கறகூல் டவுன்.. " என்று சிரித்தான் விவேக்..

அவளும் தன்னை சமாளித்து கொண்டவள்

"அது சரி.. நீங்க யாரையாவது காதலித்து இருக்கீங்களா?  காதலிக்கறிங்களா? " என்றாள் சிரித்தவாறு..

"ஹ்ம்ம்ம் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலை.. அப்படி ஒரு இன்ட்ரெஸ்ட் இதுவரைக்கும் வந்ததில்லை.. ஆனால் இப்ப சமீபமா காதல் கதைகளா கேட்க எனக்கும் லவ் பண்ணனும் னு ஆசை வருது ரெட் ரோஸ். " என்றான் கண் சிமிட்டி சிரித்தவாறு..

"வாவ். சூப்பர் விவா... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. " என்று அவன் கை பற்றி இழுத்து குலுக்க, அவளின் ஸ்பரிசம் பட்ட அந்த இடம் குறுகுறுத்தது அவனுக்கு... உடலில் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் வந்ததை போல இருந்தது...

அவன் அந்த பரவசத்தை அனுபவிக்க விடாமல் இடைபுகுந்தாள் ரோஜா..

சரி விவா.. இப்ப எதுக்கு என்னை எழுந்து வெளில வரசொன்னிங்க? என் லவ் ஸ்டோரிய கேட்கவா? “ என்றாள் யோசனையாக

“என்ன ரெட் ரோஸ்..?  லவ் பண்ற னு சொல்ற.. ஒரு லவ்வர்ஸ் க்கு தனிமை கொடுக்கணும்னு தெரியாதா? “ என்றான் கண்களால் சிரித்தவாறு..

“வாட்? லவ்வர்ஸ் ஆ? யார் அது? “ என்றாள் ஆச்சர்யமாக

“சுத்தம்.. நீ எல்லாம் என்னத்த லவ் பண்றியோ..! இவ்வளவு நேரம் நாலு பேர் சாப்பிட்டோம் இல்ல. அதுல ஏதாவது வித்தியாசம் தெரிந்ததா? “ என்றான் புருவத்தை உயர்த்தி..

“வித்தியாசம்..?? “ என்று தாடையில் கை வைத்து யோசித்தவள்

“ஹ்ம்ம் அப்படி எதுவும் தெரியலையே.. “ என்றாள் உதட்டை பிதுக்கி..

“ஹ்ம்ம்ம்ம் நீயெல்லாம் ரூபலா னு சொல்லிக்காதா.. ஒரு டிடெக்டிவ் னா எப்பவும் விழிப்போட இருக்கணும்.. எநத ஒரு சின்ன வித்தியாசம் கூட கண்ணுல இருந்து தப்ப கூடாது. “ என்று குட்டி லெக்சர் அடிக்க அதில் கடுப்பானவன்

“ஹலோ... மிஸ்டர் ஜேம்ஸ்பான்ட் நாட் நாட் செவன்... போதும் உங்க லெக்சர்.. நான் ஒன்னும் ரூபலா வாக வேண்டாம். எனக்கு டான்ஸ் டீச்சரே போதும்.. நீங்களே சொல்லுங்க.. உங்க டிடெக்டிவ் கண்ணுக்கு அப்படி என்ன வித்தியாசம் தெரிஞ்சுதாம்? “ என்று முறைத்தாள்..

“ஹீ ஹீ ஹீ.. இப்படி எல்லாம் சட்டுனு சரண்டர் ஆகிடக்கூடாது ரூப்ஸ்... சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிகிட்டிருக்கிற மூளையை கொஞ்சமாச்சும் தட்டி எழுப்பி கொஞ்சம் வேலை கொடு..நல்லா யோசிச்சு பார்.. உனக்கே தெரியும்.. “ என்று சீண்டினான் அவளை...

“ஹ்ம்ம்ம் க்ரேட் இன்சல்ட்.. இதுக்குனே நானே கண்டுபுடிக்கிறேன்...” என்றவள் மீண்டும் சற்று முன் நடந்ததை எல்லாம் ரிவைண்ட் பண்ணி பார்த்தவள்

“ஹே விவா... ஐ காட் இட்...உங்க அசிஸ்டன்ட் ரிஷி  சின்ன ரோஜாவை கொஞ்சம் விழுந்து விழுந்து கவனிச்சுகிட்ட மாதிரி இருந்தது.. வேற எதுவும் வித்தியாசமா தெரியலையே ! அப்ப அதுதான் நீ சொன்ன வித்தியாசமா?  “ என்றாள் கொஞ்சம் ஆர்பரித்து கொஞ்சம் யோசனையாக..

“வாவ்... சூப்பர் ரூப்ஸ்.. கரெக்டா கண்டுபுடிச்சிட்ட... என்னோட சேர்ந்து உனக்கும் கொஞ்சமா டிடெக்டிவ் மூளை வந்து கிட்டிருக்கு.. “ என்று சிரிக்க, அவள் அவனை முறைத்தவள்

“சரி.... இதுல என்ன இருக்கு? இதுக்கும் நீ என்னை வரச்சொன்னதுக்கும் என்ன லிங்? “ என்று யோசனையாக பார்த்தாள்..

அப்பொழுது விவேக் ஒரு முறை சுற்றி பார்த்தவன்  தங்கள் அருகில் யாரும் இல்லை என்று தெரிந்துகொண்டு

“ரூப்ஸ்.. உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்.. ஆனால் நீ அதை ரகசியமா வச்சுக்கணும்.. யார்கிட்டயும் சொல்லக் கூடாது.. “  என்று டிஸ்கிளைமர் ஐ போட்டவன் அவள் அருகில் நெருங்கி வந்து

“ரிஷி என்னுடைய அசிஸ்டன்ட் இல்லை.. வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ்  கேள்விபட்டிருக்கிறாயா?  அதோட எம்.டி அன்ட் இந்த ஹோட்டல் கூட அவருடையது தான்..சின்ன ரோஜாவை தேட சொன்ன க்ளையன்ட் அவர்தான்.. அவர்தான் இந்த கேஸ்க்கு என்னுடைய பாஸ்.. ”  என்றான் ரகசிய குரலில்..  

அதைக்கேட்டு அதிர்ந்தவள்

“என்ன சொல்ற விவா? எனக்கு ஒன்னும் புரியலையே..”  என்று அதிர்ச்சியுடன் பார்க்க அவனும் சுருக்கமாக ரிஷியின் காதல் கதையை சொல்லி முடித்தான்..

அதைக் கேட்ட ரோஜா வாயை பிளந்தாள்..

“வாவ்.. செம இன்ட்ரெஸ்டிங் விவா...! இப்படிக்கூட லவ் பண்ணுவாங்களா?  யாருனே தெரியாத ஒரு பொண்ணை பார்த்த உடனே லவ் பண்ணி அலையோ அலைனு அலைஞ்சு அட்ரஸையும் கண்டுபிடிச்சிட்டார்..பயங்கர ஸ்மார்ட் தான்..”  என்று வியந்தாள்

“ப்ச்.. ஆனால் என்ன செய்யறது ரோஸ்.. தமயந்தி சிஸ்டருக்கு ஏற்கனவே மேரேஜ் ஆயிடுச்சு..இப்போ இந்த நெட்டை ரிஷி பாஸ் காதலை சின்ன ரோஜா  எப்படி ஏத்துப்பாங்கன்னு தெரியல..

பாஸ் அவர் காதலை சொல்லத்தான் இந்த சின்ன ட்ரீட் ஏற்பாடு செய்தார்.. “  என்று விளக்கி  சொன்னான்..

“ரெட் ரோஸ்..  ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. அவங்க காதலை சேர்த்து வைக்க  நீயும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்.. தமயந்தி சிஸ்டர் கிட்ட அப்பப்போ எடுத்து சொல்லுங்க..  பாஸ் எப்படியும் அவர் லவ் ஐ இன்னைக்கு சொன்னாலும் அவங்க உடனே ஏத்துக்க மாட்டாங்க..

ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமா முயற்சி செய்து பார்க்கணும்.. அவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்தால் இரண்டு பேர் வாழ்க்கையும் சந்தோசமாக நிம்மதியாக இருக்கும்.. பார்க்கலாம்... “  என்று பெருமூச்சு விட்டான்..

“கண்டிப்பாக விவா...  என்னால் முடிஞ்ச  உதவியை செய்கிறேன்.. பாவம் அந்த சின்ன பொண்ணுக்குள்ள இவ்வளவு சோகமா.. “  என்று கண் கலங்கி விவேக்கிற்கு உறுதி அளித்தாள்..  

பிறகு கதை பேசிக்கொண்டே அந்த லானில் நடந்து கொண்டிருந்தனர்..  

றையிலிருந்த ரிஷியோ விவேக் எழுந்து சென்றதும் எப்படியாவது தன் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்..

ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தயக்கமாக இருந்தது.. ஆனாலும் இதைவிட்டால் வேற சான்ஸ் கிடைக்காது என்று எண்ணி அவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல ஆரம்பித்தான்..

“தயா.... இப் யூ டோன்ட் மைன்ட் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா? “  என்று தயக்கத்துடன் ஆரம்பித்தான்..  

உடனே அவளும் மலர்ந்து சிரித்தவள்

“சொல்லுங்க ரிஷி...  என்ன கேட்கணும்? “  என்றாள் வெகுளியாக..

அவளின் கள்ளம் கபடமற்ற பால் வடியும் முகத்தை கண்டாலே உள்ளுக்குள் அலை அடிக்க, நாக்கு ஒட்டிக்கொண்டது அவனுக்கு.. நான் சொல்வதை கேட்டு இந்த முகம் கலங்கி போகுமோ என்று தயக்கமாக இருந்தது..

ஆனாலும் முயற்சியை  கைவிடாமல் தன்னை சுதாரித்துக்கொண்டவன்

“அது வந்து..... நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?  உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ லவ் யூ தயா...“  என்று சொல்லி முடிக்கும் முன்னே

“ஸ்டாப் இட்.... “  என்று கத்தியவள் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள்...

நல்லவேளையாக அது ரிஷியின் பிரத்தியேக அறை.. அங்கு அவர்களை  தவிர வேற யாரும் இல்லை.. அதனால் அவள் எழுந்து நின்று கத்தியது யாருக்கும் கேட்கவில்லை..  

அவளிடம் இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பாத்திருந்ததால் ரிஷி பதட்டப்படாமல் மெதுவாக அவள்  கையை  பிடித்து இழுத்து அவளை இருக்கையில் அமர வைத்தவன் 

கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையா கேள் தயா.. “ என்றான் மிரட்டும் குரலில்..

அந்த குரலுக்கு கொஞ்சம் பயந்தவள் அப்படியே அமர்ந்து விட,

“ப்ளீஸ்.. நான் சொல்லவேண்டியதை சொல்லி முடிச்சிடறேன்.. அதுக்கப்புறம் நீ பேசு.. “  என்றவன் தொடர்ந்தான்..

“ப்ளைட் ல உன்னை முதன்முதலா நான் பார்த்தப்பவே எனக்குள் சிறு அதிர்வு.. உன்னை பார்க்க கூட இல்லை.. உன் குரலை கேட்டதுமே அப்படி ஒரு பரவசம் என் உள்ளே.. லவ் அட் பர்ஸ்ட் சைட் என்பதெல்லாம் நான் நம்பவில்லை..

ஆனால் அன்று நேரில் பெர்சனலா உணர்ந்தேன் அதை.. அப்பொழுதுதான் தெரிந்தது அது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்று..

லண்டன் ஏர்போர்ட்டில் உன்னை காணாத அந்த சில நிமிடங்கள் எனக்குள்  அத்தனை தவிப்பு.. உன்னைக் கண்ட பிறகுதான் எனக்குள் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது..

உன்னை பார்த்த உடனே நீதான் என் மனைவி என்று என் மனதில் ஆழ பதிந்து விட்டது.. “ என்று முடிக்குமுன் தமயந்தி அவசரமாக ஏதோ சொல்ல வர அவளை ஒரு கை நீட்டி அமர்த்தியவன்  

“நான் சொல்லி முடித்து விடுகிறேன் தயா.. “  என்று அவளை  தடுத்தவன் தொடர்ந்தான்..

“உன்னுடைய டான்ஸ் ப்ரோக்ராம் அப்ப வந்து உன்னைப் பார்க்க வேண்டுமென்று  திட்டமிட்டிருந்தேன்.. ஆனால் அதற்குள்  என் பேக்டரியில் ஒரு விபத்து நடந்து விட்டது..

நான் அன்று இரவே சென்னை திரும்பி வர வேண்டியதாயிற்று.. அதற்கு  பிறகு மூன்று மாதங்கள் அந்த பேக்டரியை சரி பண்ணுவதில் நேரம் ஓடிப்போனது..

அவ்வளவு அலைச்சலிலும் உன் முகம் அவ்வபொழுது வந்து போகும்..  உன்னை பார்க்க வேண்டும் என்று தவிப்பாக இருந்தது.. ஆனால் உன்னை தேடுவதற்கு எனக்கு அவகாசமில்லை..

ஒரு வழியாக எல்லாம் செட்டிலாகி முடிந்த பிறகு  உன்னை தேட ஆரம்பித்தேன்.. ஆனால் உன்னை பற்றிய அடையாளங்கள் எதுவும் என்னிடம் இல்லை.. லண்டனை தொடர்புகொண்டு கேட்டபொழுது அங்கேயும் உங்கள் நடன குழுவை பற்றி பெரிதாக விவரங்கள் கிடைக்கவில்லை..

அதனால் தான் விவேக்கை அணுகினேன்.. விவேக் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட்.. அவன் மூலமாகத்தான் உன்னை தேட ஆரம்பித்தேன்.. “ என்று அவன் அவளை தேடிய கதையை சுருக்கமாக சொல்லி முடித்தான்..  

உன் அட்ரஸ் கிடைத்ததும் அவ்வளவு  ஆர்வமாக ஓடி வந்தேன் உன்னை பார்க்க.. ஆனால் அங்கு வந்து பார்த்த பிறகுதான் ஏற்கனவே நீ திருமணம் ஆனவள் என்று தெரிந்தது..

அதை கேட்டு அப்படியே உடைந்து போய் விட்டேன்.. என் வாழ்க்கையே சூன்யம் ஆனதை போல இருந்தது..

நீ வேற ஒருவனுக்கு சொந்தமானவள் என்று தெரிந்ததும் உன்னை என் மனதில் இருந்து விலக்க முயன்றேன்.. ஆனால் உன்னையே என் மனைவியாக பதித்துவிட்ட மனதில் அதை அழிக்க முடியவில்லை... எவ்வளவு முயன்றும் உன் நினைவுகளே என்னை கொன்றது..

அப்புறம் தான் கண்ணம்மா அம்மா என்னை அழைத்து உன் வாழ்வில் நடந்த சோகத்தை எல்லாம் சொன்னார்கள்..

அதை கேட்டதும் இன்னும் அதிர்ந்து போனேன்... உன்னுடைய கள்ளம் கபடமற்ற சிரிப்புக்குப் பின்னால் இப்படி ஒரு வலியும் வேதனையும் இருக்கும் என்று நான் சத்தியமாக எண்ணியிருக்கவில்லை தயா..

அப்படியே உறைந்து போனேன்.. இந்த சின்ன வயதில்  எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து விட்டாய்.. எனக்கு 27 வயது ஆகும்பொழுது என் பெற்றோர்கள்  இறந்தது.. அவ்வளவு மெச்சூர்டான வயதிலும் அவர்கள் இழப்பை தாங்க முடியாமல் நடைபிணமாக ஆகிப்போனேன்..

இதற்கும் நான் என் பள்ளி கல்லூரி படிப்பை லண்டனில் தனியாகத்தான் தங்கி படித்தேன்.. அப்படிப்பட்ட எனக்கே அவர்கள் இழப்பை தாங்க முடியவில்லை என்றால் சிறுவயதில் இருந்தே உன்னுடன் இருந்த உன் குடும்பம்  ஒரே நாளில் தொலைந்து போனதை கண்டு உனக்கு  எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் என்று துடித்து போனேன் தயா..

உன்னை என் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்ள வேண்டும் போல  என் மனது தவிக்கிறது...  

ப்ளீஸ் தயா.. என்னிடம் வந்துவிடு.. உன்னை என்னுள் புதைத்துக் கொள்கிறேன்.. இனிமேல்  உன் அருகில் எந்த ஒரு வலியும் வேதனையும் அண்ட விடமாட்டேன்..

என்னை ஏற்றுக்கொள் கண்மணி.. என் காதலை புரிந்துகொள்.. என்னிடம் வந்துவிடு.. “  என்று உருகி குரல் தழுதழுக்க அவள் ஒரு கரம் பற்றி அவள்  காதலை யாசித்தான்..   

தமயந்தியோ சிலையாக அமர்ந்திருந்தாள்.. அவன் சொன்னது எல்லாம் அவளால்  நம்பவே முடியவில்லை..

சிறிது நேரம் பேச்சிழந்து அமர்ந்திருந்தவள் மெல்ல சுதாரித்துக் கொண்டு  அவன்  கைக்குள் இருந்த அவள்  கையை இழுத்து கொண்டு அவனை நேராக பார்த்தவள்

“சாரி ரிஷி.. உங்கள் மனதை எந்த விதத்திலாவது நான் டிஸ்டர்ப் பண்ணியிருந்தால் மன்னியுங்கள்.. உங்கள் காதலை நான் ஏற்றுக்கொள்ள முடியாது..” என்றாள்  விரக்தியுடன்..

“ஏன் தயா?  என்னை பிடிக்கவில்லையா? “  என்றான் அடிபட்ட பாவத்துடன்..

“ப்ச்.. இல்லை உங்களை யாருக்காவது பிடிக்காமல் போகுமா ?  எங்கள் காலேஜ்லயே உங்களுக்கு எத்தனை பேன்ஸ் தெரியுமா.. ஆனால் உங்களை உங்கள் காதலை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது... “  என்றாள் தீர்க்கமாக..

“அது தான் ஏன் தயா..? உன் கல்யாணம் எவ்வளவு அவசரமா நடந்தது என்று அம்மா சொன்னார்கள்.. பெரியவர்களுக்காகத்தானே நீ அந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச..

அப்போது உன் மனதில் காதல் எதுவும் இல்லைதானே.. “  என்று அவள்  கண்ணுக்குள்  பார்த்து கேட்டான் ஒரு வித தவிப்புடன்..

அவள் இல்லை என்று சொல்ல வேண்டும் என்று அத்தனை தெய்வங்களையும் வேண்டி கொண்டான்..

சில விநாடிகள் கழித்து  அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள்..

“தேங்க் காட்.. “ என்று துள்ளி குதித்தவன்

“அப்புறம் என்ன தயா தயக்கம்..? நீதான் காதலிக்கவில்லையே..உன் வாழ்வில் நடந்த துயரத்தை எல்லாம் நான் துடைத்து விடுகிறேன்.. உன்னை கண் கலங்காமல் காப்பேன்.. என் காதலை ஏற்றுக்கொள்..என்னிடம் வந்துவிடு..” என்றான் கெஞ்சலாக..

“ஹ்ம்ம்ம் நான் அப்ப காதலிக்கவில்லைதான்.. காதல் என்றால் என்னவென்று  தெரியாது தான்..ஆனால் இப்ப காதல் பற்றி நன்றாக புரிந்து கொண்டேன் ரிஷி.. நானும் இப்ப ஒருத்தரை காதலிக்கிறேன்.. “ என்றாள் அவன் முகத்தை நேராக பார்த்து... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!