தேடும் கண் பார்வை தவிக்க-43



 அத்தியாயம்-43

“நானும் இப்ப ஒருத்தரை காதலிக்கிறேன்.. “ என்று தமயந்தி சொன்னதை கேட்டு அதிர்ந்து போனான் ரிஷி..

“வாட்? நீ என்ன சொல்ற தயா?  “ என்று அதிர்ச்சியுடன் ஒரு வித ஏமாற்றத்துடன் பார்த்தான்...

அவளோ எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டாள்... இவனுக்கோ தவிப்பாக இருந்தது..

ஒருவேளை அவள் கல்லூரியில் யாரையாவது விரும்புகிறாளோ? அதனால்தான் தன் கவலையை மறந்து சிரித்த முகமாக வலம் வர முடிகிறதோ..?

எப்படியோ அவள் சந்தோஷமாக இருந்தால் சரி.. அவள் அவனையே மணந்து கொள்ளட்டும்.. “ என்று  வேதனையுடன் மனம் அவசரமாக கணக்கிட்டு கொண்டிருந்தது..

ஆனாலும் ஒரு சின்ன ஆர்வம்.. அது யாரென்று தெரிந்து கொள்ள எண்ணி மீண்டும் அவளிடம் கேட்டான்..

“சொல்லு தயா? யாரை நீ லவ் பண்ற? உன் காதலுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.. நீ சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருந்தா போதும்.. “ என்றான் தன் வேதனையை மறைத்து கொண்டு...

அதை கேட்டு விலுக்கென்று நிமிர்ந்தவள்

“உங்களால எனக்கு உதவ முடியுமா? என் காதலை சேர்த்து வைக்க முடியுமா? “ என்றாள் பரபரப்பாக..

“ஹ்ம்ம் கண்டிப்பா தயா..என்னால் முடிஞ்ச  உதவியை செய்யறேன்.. சொல்லு என்ன செய்யணும். “

“என் மாமாவை திரும்ப கூட்டிகிட்டு வரணும்.. என் நளன் மாமாவை உங்களால கூட்டிகிட்டு வரமுடியுமா? என் காதலை சேர்த்து வைக்க முடியுமா? “ என்றாள் ஆர்வத்துடன்..

அதை கேட்டு அதிர்ந்து போனான் ரிஷி..

“த..தயா... நீ....  நீ என்ன சொல்ற? “ என்றான் புரியாமல்..   

“ரிஷி.......  நான் என் மாமாவைத்தான் காதலிக்கிறேன்.. என் கழுத்துல தாலி கட்டிய என் புருஷனை காதலிக்கிறேன்.. அப்ப அவன் காதல் எனக்கு தெரியல.. ஆனால் அவன் என்னை விட்டு சென்ற பிறகுதான் அவன் காதல் எனக்கு தெரிந்தது..

என்னை எப்படி உயிருக்கு உயிராய் உருகி உருகி காதலிக்கிறான் என்று அவன் என்னை விட்டு போன பிறகுதான் தெரிந்தது..

என் மாமா இறந்த ஐந்தாவது நாள் வீட்டை சுத்த படுத்த என்று ஆட்கள் வந்திருக்க அப்பொழுதுதான் கிடைத்தது அவன் டைரிகள்..

அத்தனை டைரிகள்.. யாராவது ஆறு வயதில் இருந்து டைரி எழுதி பார்த்திருக்கிங்களா ரிஷி? என் மாமா எழுதி வச்சிருக்கிறான்..

அவனுக்கு எழுத பழகிய ஒன்னாம் கிளாசில் இருந்து எல்லாத்தையும் எழுதி வச்சிருக்கிறான்.. அந்த நோட்புக்கில், டைரியில் எல்லாமே என்னை பத்திதான் எழுதி இருக்கிறான்...

நான் பொறந்ததில் இருந்தே என்னை காதலித்திருக்கிறான்... ஆனால் எனக்குத்தான் அதை புரிந்து கொள்ள தெரியாத தத்தியா இருந்திருக்கேன்..

ஒன்னாம் கிளாசில் இருந்து எழுதி இருந்த நோட்புக், டைரிகள்.. இருபத்தைந்து இருந்தது.. அத்தனையும் கவர் பண்ணி எந்த எழுத்தும் அழிந்து விடாமல் அதை பாதுகாத்து வச்சிருந்தான்..

ஆனால் என்கிட்ட எதையுமே காட்டலை ரிஷி... அவன் மனதையும் சொல்லவே இல்லை.. நான் வளரட்டும் என்று காத்திருந்திருக்கிறான் போல.. ஆனால் கடைசி வரைக்கும் அவனை நான் புரிஞ்சுக்கவே இல்லை.. அவன் காதலையும் புரிஞ்சுக்கவே இல்லை..

அன்று  என்னை விட்டு பிரியும் பொழுது அத்தனை தவிப்பு அவன் இடத்தில்.. அதைக்கூட என்னால் புரிந்து கொள்ள முடியாமல் விளையாட்டு பிள்ளையாய் இருந்து விட்டேன்..

அவன் படித்தது எனக்காகவாம் . அவனுக்கு ஆக்சுவலா அக்ரி படிச்சிட்டு சொந்தமா விவசாயம் பண்ணனும்.. விவசாயத்தில் புதியமுறைகளை பயன்படுத்தி நிறைய பேருக்கு உதவி செய்யணும்னு ஆசை..

ஆனால் அவன் விவசாயத்தை பார்த்து கொண்டு எங்க ஊர்லயே இருந்துவிட்டால் என் அப்பத்தா என்னை அவனுக்கு கட்டி கொடுக்காது என்று அவன் லட்சியத்தையே விட்டுவிட்டான்..

என்னை மணப்பதை ஒன்றே லட்சியமாக கொண்டு அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிட்டு காசு சேர்க்கவேண்டும் என்றே லண்டன் போய்ருக்கான்..

அங்கயும் கூட வீக் என்ட் கூட ப்ரியா இருக்க மாட்டானாம்..காசு கிடைக்கும் என்று ஓ.டி பார்க்க போய்விடுவானாம்.. அப்படி காசு சேர்த்து  வாங்கினதுதான் அவன் கார்.

என் அப்பத்தா வாயை அடைக்கவே அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறான்..

எப்படியோ என்னை கல்யாணம் பண்ணியும் அவனால் என்கூட ஒருநாள் கூட சேர்ந்து வாழ முடியவில்லை.. அவன் காதலையும் சொல்ல முடியவில்லை.. எப்படி தவித்திருப்பான் அப்பொழுது..

ஒரே ஒரு முத்தம் கேட்டான் ரிஷி.. அதை கூட என்னால் கொடுக்க முடியலை.. அவனை நான் மனதார கணவனாக ஏற்று கொள்ளாததால் அவன் காதலை புரிந்து கொள்ள முடியவில்லை..

அவன் கேட்டதுக்கு என்னால் ஒத்துழைக்க முடியவில்லை.. அதை கூட புரிந்து கொண்டு என்னை கட்டாயபடுத்தாமல் பிரிந்து சென்றான்.. அவனுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்... நான் இங்கயே இருந்திடறேன் என்றான் தவிப்பாக

ஆனால் நான் ஒரு கிறுக்கி.. அவனை போகவேண்டாம்  என்று சொல்லி இருந்தால் அவன் போகாமல் இருந்திருப்பானோ.. இல்லை ரெண்டு நாட்கள் கழித்து சென்றிருப்பான்..

எனக்கு அதெல்லாம் அப்ப புரியலை.. அவன் காதல் புரியலை.. நானும் அவனை காதலித்து இருந்தால் கண்டிப்பா அவனை பிரிந்து செல்ல விட்டிருக்க மாட்டேன்.. நானேதான் அவனை கொன்னுட்டேன்.. என்று  முகத்தை பொத்தி கொண்டு அழுதாள் தமயந்தி..

ரிஷியோ அவள் அழுவதை தாங்காதவனாய் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து அவளை தன்னோடு சேர்த்து மெல்ல அணைத்து கொள்ள, தனக்கு சாய ஒரு தோள் கிடைக்கவும் இதுவரை அவள் உள்ளே அடைத்து வைத்திருந்த துக்கத்தை எல்லாம் ரிஷியின் தோளில் சாய்ந்து கதறி தீர்த்தாள்..

அவனும் ஆதரவுடன் அவள் தலையை வருடி கொடுத்தான்..

அவள் அழட்டும் மனதில் அழுத்தி கொண்டிருப்பது எல்லாம் வெளியில் வரட்டும் என்று அவளை அழ விட்டு விட, கிட்டதட்ட அடுத்த ஐந்து நிமிடம் அழுது தீர்த்தாள்..

ஓரளவுக்கு எல்லாம் வெளியில் வந்துவிட, அழுகை கொஞ்சம் குறைந்து தேம்பலாக மாறி இருக்க இன்னும் அவன் தோளை விட்டு முகத்தை நிமிர்த்தி இருக்கவில்லை..

அவனும் அவள் முதுகை ஆதரவுடன் வருடி கொடுத்தும் மற்றொரு கையால் அவள் தலையை வருடி கொடுத்தவாறு இருந்தான்.. அவன் கண்களிலும் ஈரம் ஒட்டி இருந்தது..

ஓரளவுக்கு விசும்பி முடித்தவள் அவசரமாக அவனிடமிருந்து விலகியவள்

“சாரி.. “ என்று குற்ற உணர்வுடன் விலகி கொண்டவள் துப்பட்டாவால் கண்களை துடைத்து கொண்டாள்

ரிஷி அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கொடுத்தான்.. அவளும் குடித்து முடித்தவள் ஒரளவுக்கு தன்னை சமாதானம் படுத்தி கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்..

“அவன் டைரி எல்லாம் படித்த பிறகுதான் அவன் காதல் எனக்கு புரிந்தது..

அந்த நொடியில்தான் எனக்கு அவன் மீது காதல் வந்தது... அவன் வேண்டும் எனக்கு... அவனை போலவே நானும் அவனை திகட்ட திகட்ட காதலிக்க வேண்டும்..என்ற வெறி வந்தது..

அன்றிலிருந்து அவனை நான் காதலிக்கிறேன் ரிஷி... அவன் ஆசை எல்லாம் நான் நிறைவேற்றணும் னு தோணுச்சு.. அதுல முதன் முதலா அவன் ஆசை நான் எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும் என்பதுதான்.. என் கண்ணில் தண்ணி வராமல் பார்த்துக்கணும் என்றதுதான்..

அதை படித்த பிறகு நான் அழுவதை நிறுத்திவிட்டேன்.. அவன் என்னுடன் இருப்பதாக எண்ணி கொண்டேன்.. அவனும் அதைத்தான் சொல்லி விட்டு சென்றான்.. என்னோடு எப்பவும் துணை இருப்பதாக சொல்லி சென்றான்..

அடுத்த வாரமே என் அத்தையை கூட்டிகிட்டு என் படிப்பை தொடர சென்னைக்கு வந்துவிட்டேன்.. அவன் ஆசை எல்லாம் முடிந்த அளவுக்கு நிறைவு செய்தேன்..

அதில் ஒன்று தான் நான் லண்டனில் பரத நாட்டியம் ஆடணும் என்றது..

ஒருமுறை லண்டனில் அவன் ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்க்கு சென்றிருக்கிறான்.. அங்கு ஆடிய பெண்ணை பார்த்ததும் என்னை போலவே இருந்ததாம்...

உடனே ஒரு நாள் நானும் அது மாதிரி அவ்வள்வு பெரிய மேடையில் ஆடணும்.. அதை முன்னால் உட்கார்ந்து ரசிக்கணும் என்று எழுதி இருந்தான்...

எனக்குள் அவனின் அந்த ஆசை உறுத்தி கொண்டே இருந்தது.. என் படிப்பை முடித்ததும் அதுக்காக முயற்சி செய்து ஒரு நாள் லண்டன் போய் ஆடணும்... அவன் ஆசையை நிறைவேற்றணும் என்று எண்ணி இருந்தேன்....

அப்படி யோசித்து கொண்டிருந்த பொழுதுதான் எதேச்சையாக ரோஜா அக்காவை பார்த்தேன்..

அவங்க லண்டன் டான்ஸ் புரோக்ராம் பற்றி பேசியதை கேட்டதும் ஏதோ ஒன்று என்னை லண்டனுக்கு வா.. .என்று அழைப்பதை போலவே இருந்தது....

உடனே அந்த அக்கா சொன்ன மாதிரி அவங்க பெயரில் நான் சென்றுவிட்டேன்... அன்றுதான் உங்களை சந்தித்தது..

அன்று ப்ளைட்ல போறப்போ அந்த மேகங்களுக்கிடையில்  இருந்து என் மாமா என்னை பார்த்து சிரித்தான்.. அவனை நான் பார்த்தேன் ரிஷி..

அந்த ப்ளைட் காணாமல் போன இடம் வந்ததும் எனக்கு அவன் முகமே தெரிந்தது.. அதனால் தான் நான் அன்று ரொம்பவுமே உணர்ச்சி வசப்பட்டிருந்தேன்..

டான்ஸ் புரோக்ராமில் அவனுக்காகவே ஆடினேன்.. கண்டிப்பா என்னை வந்து பார்த்து கொண்டிருப்பான் என்று..

ட்ரஸ்ட் மீ... வந்திருந்தான்... என் மாமா வந்திருந்தான்.. என்னை பார்க்க வந்திருந்தான்.. விஐபி இருக்கைக்கு பின்னால் அமர்ந்து என் நடனத்தை ரசித்து பார்த்தான்...

அவனை அப்படியே ஓடிப்போய் கட்டிக்கணும்னு இருந்தது.. ஆனால் என் நடனம் முடிந்ததும் உடனே மறைந்து விட்டான்..

நான் தேடி பார்த்தேன்.. எல்லா இடத்துலயும் தேடி பார்த்தேன்.. என் பார்வை தவிக்க தேடி பார்த்தேன்.. ம்ஹூம் வரவில்லை அவன்..

ஆனாலும் அவன் என் நடனத்தை ரசித்துவிட்டான்.. அவன் ஆசையை நிறைவேற்றி வைத்துவிட்டேன் என்ற நிம்மதி என் உள்ளே..

பிறகு அவன் கடைசியாக தங்கி இருந்த இடம், அவன் வேலை  செய்த ஹோட்டல் எல்லாம் போய் பார்த்துவிட்டு வந்தேன்.. அவன் விட்டு சென்ற பொருட்கள் எல்லாம் அவன் ரூம்மேட் எடுத்து வைத்திருந்தார்..

அதை எல்லாம் ஆசை தீர தொட்டு பார்த்தேன்.. எனக்கு என்று  வாங்கி வைத்திருந்த சில பரிசு பொருட்கள், அவன் டைரி எல்லாம் கிடைத்தது.. எல்லாமே எனக்கு பொக்கிஷம் ரிஷி.. எல்லாத்தையும் எடுத்துகிட்டு வந்திட்டேன்..

அவன் என் முன்னே இல்லை என்றாலும் என்னுடனே இருக்கிறான்.. அவனைத்தான் நான் இப்பொழுது காதலித்து கொண்டிருக்கிறேன்.. இப்ப சொல்லுங்க.. என் காதலை உங்களால சேர்த்து வைக்க முடியுமா? “ என்றாள் விரக்தி புன்னகையுடன்...

அதை கேட்டு திகைத்து வியந்து போனவன் அவளுக்கு என்ன ஆறுதல்  சொல்வது என்று புரியாமல் முழித்தான்..நளனின் காதலை கண்டு மெய் சிலிர்த்து போனான்...  

அவளின் கையை மெல்ல அழுத்தி கொடுத்தவன்

“எல்லாம் சரியாகும் டா..சீக்கிரம் உன் காதலை சேர்த்து வைக்கிறேன்...” என்க, அதை கேட்டு விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்..

அவனோ மெல்ல இமை தாழ்த்தி முடியும் என்னால் முடியும் என்று சொல்வதை போல பார்வையால் அவளை அமைதி படுத்த அதே நேரம் விவேக் ம் ரோஜாவும் உள்ளே வந்தனர்..

தமயந்தியின் கண்ணில் வழிந்த நீரை பார்த்ததும் நடந்தது புரிந்து விட, ரோஜா வேகமாக அவள் அருகில் வந்து அவளை மெல்ல அணைத்து கொள்ள, இந்த முறை தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் ரோஜாவை பார்த்து சிரித்தாள்..

ரிஷி ரோஜாவை பார்த்தவன்

ரோஜா சிஸ்டர்.. சின்ன ஹெல்ப்.. இவளை கொஞ்சம் பாத்ரூம் க்கு கூட்டிபோய் பேஸ் வாஸ் பண்ண வைங்க..” என்றான் கெஞ்சலாக.

அவளோ வாயடைத்து போனாள்.. அவ்வளவு பெரிய பிசினஸ்மேன்.. தன்னிடம் உதவி கேட்கறானே என்று திகைக்க, அவளின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவன்

“நானும் மனுஷன் தான் சிஸ்... உங்க ப்ரெண்ட் சர்க்கில் ல என்னையும் சேத்துக்கங்க. டோன்ட் திங் ஐம் எ கிரேட் பெர்சன்.. " என்று சிரிக்க அவளும் சிரித்தவாறு தமயந்தியை அழைத்து சென்றாள்..

பின் நால்வரும் விடைபெற்று செல்ல, ரிஷி தமயந்தியை ட்ராப் பண்ணுவதாக சொல்லி அவள் வீட்டிற்கு அழைத்து சென்றான்..

காரில் செல்லும்பொழுது ஏதோ யோசனையில் இருந்தவன் மெல்ல சுதாரித்து கொண்டு

“தயா.. ஒரு சின்ன ரிக்வெஸ்ட்... உன்னால் என்னை ஏத்துக்க முடியாவிட்டாலும் என் கூட எப்பவும் ஃப்ரெண்ட் ஆ இருக்கணும்.எப்பவும் போல என் கூட ப்ரியா பேசணும்..

நான் உன்னை  எந்த விதத்திலும் கட்டாயபடுத்த மாட்டேன்.. அப்புறம் எனக்கு என் அம்மாவை பார்க்கணும்.. அதுக்காக உன் வீட்டுக்கு அப்பப்ப வரலாம் இல்லையா..?  அதுக்கு உன் பெர்மிஷன் வேணும்.. அவங்ககிட்ட என் அம்மாவை பார்க்கறேன்..

அதனால் இந்த ரிக்வெஸ்ட் ஐ யாவது ஏத்துக்கோ. " என்று கெஞ்சினான்..

"ஹ்ம்ம் அதனால் என்ன ரிஷி.. அத்தைக்கும் உங்களை பார்த்தால் கொஞ்சம் மனசு பாரம் குறையுது.. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. நீங்க உங்க அம்மாவை தாராளமா வந்து பாருங்க.. செல்லம் கொஞ்சுங்க.. நோ அப்ஜெக்சன்.. " என்று சிரித்தாள் தமயந்தி..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!