தேடும் கண் பார்வை தவிக்க-46



அத்தியாயம்-46

வாயிலில் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆலம் சுற்றி வீட்டிற்குள் அழைக்க, எதார்த்தமாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றவள் கைகளை பற்றினான் அவள் அருகில் இருந்தவன்..

அந்த தொடுகை,  அந்த தீண்டல் அப்படியே அவள் மாமனுடையதாக இருக்க விலுக்கென்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அங்கே அழகாக சிரித்து கொண்டிருந்தான் நளன்..

“வெல்கம் டு அவர் ஹவுஸ் மை டியர் பொண்டாட்டி.. “ என்று காதலுடன் கண் சிமிட்ட, அதில் அப்படியே சிலிர்த்து போனாள்.. அவளும் அவன் கையை கெட்டியாக பற்றி கொண்டு மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள்..

அதற்கு பிறகு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி வைத்து கண் மூடி தெய்வங்களை வணங்கி தீபாராதனையை அனைவருக்கும் காட்ட, மனம் நிறைந்த பூரிப்புடன் அவள் அருகில் நின்றிருந்தவன் அந்த தீபாராதனையை தொட்டு கண்ணில் ஒற்றி கொண்டு மீண்டும் காதலுடன் பார்த்து கண் சிமிட்டினான்..

அவளோ மெல்ல சிவந்து முகத்தை அவனிடம் இருந்து திருப்பி கொண்டு மற்றவர்களுக்கு காட்டிவிட்டு திரும்பியவள் மீண்டும் அவன் முகத்தை பார்க்க தூண்ட மெல்ல விழி நிமிர்த்தி தன்னவனைக் காண அடுத்த நொடி திடுக்கிட்டாள்..

காணவில்லை அவள் மாமனை... ஆனால் மனம் நிறைந்த பூரிப்புடன் கண்ணால் சிரித்தபடி நின்றிருந்தான் ரிஷி..

இதுவரை காதலுடன் அவனை நோக்கிய அவள் விழி பார்வை இப்பொழுது எப்படி யாரையோ பார்ப்பதை போல மாறிப்போகும் என்று குழம்பி  போனான்.. ஆனாலும் தன் குழப்பத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு சிரித்தபடி அந்த பூஜை அறையில் இருந்து வெளி வந்தான்..   

தமயந்தியும் அவனை பின்தொடர, ரோஜாவும் விவேக் ம் மீண்டும் அவர்கள் அருகில் வந்தவர்கள்

“பாஸ்.. எப்படியோ உங்க காதல் ல ஜெயிச்சுட்டிங்க.. வாழ்த்துக்கள்.. இனிமேல் ஜாலியா லைப் ஐ என்ஜாய் பண்ணுங்க.. நாங்க இப்படியே கொஞ்சம் பொள்ளாச்சிய சுத்தி பார்த்துட்டு கிளம்பறோம்.. சென்னையில் மீட் பண்ணலாம்..

ஒன்ஸ் அகைன் வாழ்த்துக்கள் சிஸ்டர்.. இனிமேல் எப்பவும் சிரிச்சுகிட்டே ஹேப்பியா இருங்க.. “ என்று வாழ்த்த ரோஜாவும் அதையே சொல்லி வாழ்த்தி விட்டு விடை பெற்று சென்றனர்...

தமயந்தியும் அவர்களுக்கு புன்னகைத்து வழி அனுப்பியவள் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, உடனேயே அவளுக்கு உள்ளுக்குள் குழப்பங்கள் சூழ்ந்து அவளை வதைத்து கொண்டு இருந்தது..

“அது எப்படி என் மாமன் முகம் அடிக்கடி வருகிறது? ஒருவேளை இது மனபிரம்மையோ? என் கை பிடித்து உள்ளே வந்தது சத்தியமா என் மாமன்தான்...

எனக்கு தாலி கட்டியதும் அவன்தான்.. ஆனால் உற்று பார்த்தால் அவன் இல்லையே.. ஒருவேளை என்னிடம் விளையாடுகிறானா? விபத்தில் ஏதாவது ஆகி ரிஷியாக மாறி வந்துவிட்டானா?”  என்று எண்ணியவள் சற்று தொலைவில் நின்று யாரிடமோ சிரித்து பேசி கொண்டிருந்த ரிஷியை ஓரக்கண்ணால் அளவிட்டாள்..

“உயரம் கிட்டதட்ட அதே உயரம்தான்.. என் மாமன் கொஞ்சம் ஒல்லியாக இருப்பான்.. ஆனால் இவன் கொஞ்சம் சதை போட்டு இருக்கிறான்..

இல்லை.. சதை இல்லை இதுதான் சரியான எடை.. உயரத்துக்கும் எடைக்கும் பெர்பெக்ட் ஆக இருக்கிறான்.. ஒருவேளை மாமா நல்லா சாப்பிட்டு கொஞ்சம் எடை போட்டு விட்டானோ?

ஆனால் நிறம்? நளன் கொஞ்சம் மாநிறத்துக்கு அதிகமாக ஆனால் அதிக வெள்ளையாக இருக்க மாட்டான்.. இவனை ஆராய அப்படியே வெள்ளைக்காரனை போல வெளுத்து இருந்தான்..

“ஒருவேளை அப்ப இவன் அவன் இல்லையோ.. ம்ஹூம் நிறம் என்ன பிரமாதம்..?  என் மாமன் லண்டன் லதான இருந்தான்.. குளிர்ல அதுவும் ஏசிக்குள்ளயே  இருந்திருந்தா என் மாமனும் இந்த கலர்தான் வந்திருப்பான்..

அப்படி என்றால் இவன் என் மாமன்தான்.. என்னை ஏமாற்றுகிறான்.. என்கூட விளையாடுகிறான்.. “  என்றவளின் பார்வை அவன் முகத்துக்கு செல்ல, அடுத்த நொடி அதிர்ந்து போனாள்...

அவளுக்கு அவன் மாமனிடத்தில் பிடித்தமானது ஒன்று இவனிடம் மிஸ்ஸிங்.. அது.... அவன் மீசை...

எப்பொழுதும் நளன் மீசையை பிடித்து இழுத்து விளையாடுவது அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்... அதுவும் அவன் அறியாமல் அவன் மீசையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி கொள்வது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று..

அவனிடம் இருந்து புடுங்கிய  அவன் மீசை முடிகளையெல்லாம் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறாள்.. அவனும் இவளுக்கு தன் மீசையை பிடிக்கும் என்பதால் அதை எடுத்து விடாமல் அப்படியே வைத்திருந்தான்..  

கல்லூரிக்குச் சென்ற பொழுதும் லண்டனுக்கு வேலைக்காக சென்ற பொழுதும்  எத்தனையோ பேர் அவனை மீசையை எடுக்க சொல்லி வற்புறுத்தினர்.. மீசையை எடுத்து விட்டால் அது இன்னும் அவனுக்கு அழகாக இருக்கும் என்று அட்வைஸ் பண்ணினர்..

ஆனால் அவனோ அதை மறுத்து விட்டான்.. அவளுக்கு பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக தன் மீசையை எடுக்காமல் இருந்தான்.. ஆனால் எதிரில் நின்று கொண்டிருந்தவன் முகம் மீசையின்றி தினமும் சேவ் பண்ணுவதால் வழுவழு வென்றும் கொழு கொழு கன்னம் சிரிக்கும் கண்களுமாக நின்றிருந்தான்..  

அதைக் கண்டதும் ஏமாற்றமாக இருந்தது தமயந்திக்கு..

“இவன் என் மாமன் என்றால் கண்டிப்பாக மீசையை எடுத்து இருக்க மாட்டான்.. அதனால் இவன் அவன் இல்லை.. “  என்று முகம் வாடி போனாள்..  

அடுத்த நொடி அவளருகில் வந்து அமர்ந்திருந்தான்  ரிஷி

“என்னடா ஆச்சு ? ஏன் ஒரு மாதிரி டல் ஆ இருக்க? “ என்றான் அக்கறையுடன்.

அவனின் குரல் கேட்டு அதிர்ந்தவள் அவன் முகம் பார்க்க தயங்கி,

“ஒ... ஒன்.. ஒன்னுமில்ல.. “ என்றாள்..

“ஹ்ம்ம்ம் என்கிட்ட எதுவும் சொல்லணுமா? எதுக்கு என்னையே அப்படி பார்த்துகிட்டிருந்த? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு..

“ஆங்.... அதெல்லாம் ஒன்னுமில்லை.. “ என்று சமாளித்தாள்..

“இல்ல.. உனக்கும் என் மாமனுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சிகிட்டிருந்தேன் என்றா சொல்ல முடியும்? “ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டாள்...

அதே நேரம் மாப்பிள்ளையை பார்க்க என்று அந்த ஊர் சின்னஞ்சிறுசுகள் எல்லாம் வந்திருந்தனர்.. வெளியில் இருந்த கண்ணம்மா ரிஷியை அழைக்க,

“தயா... போய் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு.. எதையும் போட்டு குழப்பிக்காத.. இதோ வர்றேன்... “ என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டிவிட்டு எழுந்து சென்றான்..

வெளியில் பெரிய கும்பலே நின்று கொண்டிருந்தது

தமயந்தி திருமணம் பொள்ளாச்சியில் நடந்ததால் அங்கு திருமணத்திற்கு வரமுடியாத அந்த ஊர் மக்கள் மாப்பிள்ளையை பார்க்க வந்திருந்தனர்..

அதுவும் ரிஷி பெரிய பிசினஸ் மேன்.. கல்யாணம் ஆகி ஒரு வாரத்துலயே புருஷனை இழந்துவிட்ட தமா பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து அவ்வளவு பெரிய ஆள் இந்த சின்ன கிராமத்தில் பொண்ணு எடுத்தது அதுவும் அறுத்து போனவளை கட்டிய செய்தி சுத்து பட்டு எல்லா ஊருக்கும் காட்டுத்தீயாய் பரவியது..

அந்த பகுதியிலயே தமயந்தி ரிஷி திருமணத்தை பற்றிதான் பேச்சு.. அதுவும் திருமணத்திற்கு சென்றவர்கள் மாப்பிள்ளையை பார்த்துவிட்டு

“மாப்பிள்ளை வெள்ளைக்காரனை போல வெள்ளை வெளேர் னு இருக்கார்.. மீசை இல்லாமல் பார்க்க சினிமா ஆக்டர் மாதிரி அவ்வளவு கம்பீரமா இருக்கார் என்று  எல்லாரும் புகழ்ந்து சொல்ல,

அதை கேட்டவர்கள் அவர்களும் மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என ஆவலாக இருக்க, எல்லாரும் புது மாப்பிள்ளையை பார்க்க படை எடுத்தனர் ..

திடீரென்று அவ்வளவு கும்பலை அதுவும் கிராமத்து மக்களை பார்க்க திகைத்து போனான் ரிஷி.. எல்லாரும் அவனையே மேலிருந்து கீழாக பார்க்க சிறு வெட்கத்துடன் எல்லாரிடமும் சிரித்து பேசி கொண்டிருந்தான்..

அவ்வளவு பெரிய கோடிஸ்வரன் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எல்லாருடன் சிரித்து பேச அவங்களுக்கு   எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது..

அதற்குள் அவனுடைய அசிஸ்டன்ட் விஷ்ணு வை அழைத்து அவசரமாக ஸ்வீட் பாக்ஸ் வரவழைத்து அங்கு வருபவர்களுக்கு எல்லாம் கொடுக்க வைத்தான்.. கூடவே அந்த ஊருக்கே மூன்று வேளையும் கல்யாண சாப்பாடு அந்த ஊர் பள்ளிகூடத்தில் வைத்து போட சொல்லி ஏற்பாடு செய்திருந்தான்..

எல்லாரும் மனம் நிறைந்த திருப்தியுடன் மாப்பிள்ளையை பார்த்துவிட்டு வயிறு நிறைய கல்யாண விருந்தை சாப்பிட்டு அவனை வாழ்த்தி  விட்டு சென்றனர்...

அப்பொழுது அவன் அலைபேசிக்கு அழைப்பு வர, அதை எடுத்து சரளமாக ஆங்கிலத்தில் உரையாட அவனின் நுனி நாக்கு ஆங்கிலத்தை   கண்டவர்கள் இன்னும் அசந்து போயினர்.

“தமா பொண்ணு கொடுத்து வச்சவ!  இதுக்குத்தான் இந்த பொண்ணு இரண்டரை வருசமா கஷ்டபட்டாளோ? இனிமேலாவது அவ வாழ்க்கை நல்ல படியா இருக்கட்டும்.. “ என்று பெருமூச்சு விட்டு நகர்ந்து சென்றனர்..

அப்பொழுது ஒரு இளைஞன் தயக்கத்துடன் வீட்டிற்கு உள்ளே வர, உடனே அவன் பேசிக்கொண்டிருந்த அழைப்பை அப்புறம் பேசுவதாக சொல்லி அணைத்தவன்

“ஹே தினேஷ்... எப்படி டா இருக்க? “ என்றான் ரிஷி..

அதை கேட்டு உள்ளே வந்தவன் திடுக்கிட்டு போனான்.. இது அவன் ஆருயிர்  நண்பன் நளனின் குரல்.. திகைப்புடன் ரிஷியை பார்க்க அவனோ சிரித்தவாறு

“ஸாரி.. தினேஷ் தான.. ? கொஞ்சம் உங்களை  பார்த்த எக்ஸைட்மென்ட் ல   கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடேன்.. “ என்றான் தினேஷ் ஐ தன் தோளோடு சேர்த்து மெல்ல அணைத்தபடி..

தினேஷ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் ரிஷியை ஆராய்ச்சி உடன்   பார்த்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு

“சார்...  என்னை எப்படி உங்களுக்கு தெரியும்? “  என்றான் குழப்பத்துடன்

“ஹா ஹா ஹா எல்லாம் தெரியும்... அப்புறம் இந்த சார் ஐ விடு.. என்னை பேர் சொல்லியே கூப்பிடு.. “  என்று அதட்டினான் ரிஷி..  

“அது வந்து சார்....  நீங்க எவ்ளோ பெரிய ஆள்..  உங்கள போய் நான் எப்படி ?? “ என்று தயங்க

“ஹா ஹா ஹா நானும் மனுஷன் தான் தினேஷ்..  எனக்கும் பிரண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க..  நீ  நளன் உடைய ப்ரெண்ட் தான.. அப்போ எனக்கும் ப்ரெண்ட் தான்.. ‘”  என்று கை நீட்ட தினேஷ் ம் அவன் கைப்பற்றி குலுக்கினான் யோசனையுடன்..

“அப்புறம் தினேஷ்... எனக்கு இந்த ஊரை கொஞ்சம் சுத்தி காமிக்கிறியா?  நான் போய் ட்ரஸ் மாத்திட்டு வரேன்..  என் கூட வர முடியுமா? “ என்றான் சிரித்தவாறு

“ஓ யெஸ் சார்...”  என்ன சொல்ல வந்து ரிஷி முறைக்க

“ஹ்ம்ம் கண்டிப்பா நளா.. “ என்றான் வாய் தவறி..

உடனே ரிஷியும் நிறைவாய் புன்னகைத்து

“நான் நளன் இல்லை....  ரிஷி....  கால் மீ ரிஷி... “  என்று அவன் தோளை தட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றான்..  

சிறிது நேரத்தில் ஜீன்ஸும் டீசர்ட்க்கு  மாறியவன் அந்த வரவேற்பறையை கடக்க,  உள்ளே திரும்பி

“அம்மா....  நான் தினா  கூட வெளியில போயிட்டு வரேன்... “  என்று கண்ணம்மாவிடம் சொல்ல அதைக்கேட்டு தினேஷ் ம் கண்ணம்மாவும் திகைத்துப் போயினர்...

இது நளன்  குரல்...  சொல்லுவது,  சொல்லும் முறை கூட அப்படியே நளன் சொல்லுவதை போல இருந்தது..

எப்பொழுது தினேஷ் நளன் வீட்டிற்கு வந்தாலும் உடனே அவனுடன் ஊர் சுற்ற கிளம்பி விடுவான் நளன்..கிளம்பும்போது இப்படித்தான் தன் அன்னையிடம் சொல்லிச் செல்வான்..

இன்றும் அதேபோல சொல்லிவிட்டு நகர, அதைக்கேட்டு இருவருமே ஒரு நொடி திகைத்து போயினர்.. வெளியில் வந்தவன்  தினேஷ் ஐ அணைத்தவாறு செல்ல, தினேஷ் நளா என்று அவனை அழைத்தவன் பின்  மாற்றிக்கொண்டு

“ரிஷி...  என் பெயரை எப்படி தினா னு  கூப்பிடுறீங்க? “  என்றான் யோசனையுடன்..

“ஹா ஹா ஹா இதுல என்ன  இருக்கு?  தினேஷ் ஐ பொதுவா எல்லாரும் தினா னு சுருக்கி கூப்பிடறது தானே..  அதுதான் எனக்கும் அப்படி வந்து விட்டது.. அப்படி கூப்பிடலாம் இல்லையா?”   என்றான் புருவத்தை உயர்த்தி

“ஓ.. தாராளமா... என் ப்ரெண்ட் நளன் கூட அப்படித்தான் என்னை கூப்பிடுவான்.. " என்றான் நளனின் நினைவில் குரல் கம்ம..

“ஹ்ம்ம் தெரியும்.. சரி... நளனை பத்தி சொல்லேன்.. அப்புறம் எங்கெல்லாம் நளன் சென்று  சுத்தினானோ அங்கெல்லாம் என்னை அழைத்து கொண்டு செல்வாயா? " என்க தினேஷ் ம் உடனே ஒத்து கொண்டு ரிஷியை அழைத்து சென்று அந்த கிராமத்தின் எல்லா பகுதிகளையும் சுத்தி காட்டினான்..

ங்கு தமயந்தியோ சோபாவில் அமர்ந்து கொண்டு இவனா? அவனா? இவன் அவன் இல்லையா? அவன் இவன் இல்லையா? என்று எதை எதையோ யோசித்து குழம்பி கொண்டிருக்க அவளுக்கு விடை எதுவும் கிடைக்காமல் இன்னும் குழப்பம்தான் அதிகமானது.

தன் தலையின் இரு பக்கமும் கை வைத்து அழுத்தி கொண்டு அமர்ந்து இருக்க, அப்பொழுது அங்கு வந்த கண்ணம்மா அவள் நிலை கண்டு உருகி அவள் அருகில் அமர்ந்தவர்

“என்னடா தங்கம் பண்ணுது? தலை வலிக்குதா? “ என்றார் வாஞ்சையுடன் அவள் தலையை தடவியவாறு..

அவளும் அத்தையை நிமிர்ந்து பார்த்தவள்  ஆமாம் என்று தலையாட்ட

“சரி வாடா... வேற புடவை மாற்றிக்கொண்டு கொஞ்ச நேரம் தூங்கு..  காலையில் சீக்கிரம் எழுந்து கூடவே தலைக்கு தண்ணி ஊத்துனது இன்னும் ஈரமா இருக்கும்.. ஜடையை பிரித்து முடியை விரித்து விட்டு கொஞ்ச நேரம் தூங்கு.. சீக்கிரம் சரியாகிடும்.. “ என்று  தமயந்தியை அழைத்துச் சென்று அவளை  படுக்கவைத்தார்...  

ன்று இரவு தமயந்தியை முதலிரவுக்காக அலங்கரித்துக் கொண்டிருந்தார்  கண்ணம்மா...

தமயந்தியும் அதெல்லாம் வேண்டாம் என்று மறுக்க கண்ணம்மா

“இருக்கட்டும் டா செல்லம்... போன முறை தான் ஆயா  இறந்த துக்கத்தில் புதுசா கல்யாணம் ஆன உங்க ரெண்டு பேருக்கும் முறையா நடக்கவேண்டிய சாந்தி முகூர்த்தத்தை பண்ணாமல் விட்டுபுட்டோம்..

இந்த முறை அப்படி இருக்கக்கூடாது.. எல்லா சடங்கும் சம்பிரதாயமும் சரியா இருக்கோணும்..  நீ எதுவும் பேசப்படாது.. “  என்று  அவள் வாயை அடைத்து விட்டார்..  

தன் மருமகளை ரெடி பண்ணி முன்பு நளன் அறையாக  இருந்த அறைக்குள் அவளை அனுப்பி வைத்தார்..

அறைக்கு உள்ளே இருந்த ரிஷி அங்கிருந்த ஜன்னல் வழியாக வீட்டிற்கு முன்னால் இருந்த குட்டி தோட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தான்..  

பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கின.. அதுவும் மல்லிகை மற்றும் சம்பங்கி இரண்டும் ஒன்றாக கலந்த வாசம் அவன்  நாசியை தீண்டி அவனுள்  கிறக்கத்தை கூட்டியது..

கூடவே வானத்திலிருந்த அந்த பால் நிலாவும் குளிர் ஒளியை பாய்ச்ச,  அந்த  கிராமத்து குளிர் காற்றும் சுற்றியிருந்த மலர்களின் நறுமணமும் அவனுள் ஏகாந்தத்தை தூண்ட, அந்த இடம், அந்த கிராமம், அந்த சின்ன வீடு எல்லாமே அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போனது...

அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அத்தனை வாசத்தையும் தாண்டி அவனவளின் வாசம் ஓடி வந்து அவன் நாசியை அடைய, அப்படியே உள்ளுக்குள் சிலிர்த்துப் போனான்..  

வாயிலுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தவன் முன்பக்கம் திரும்பாமலேயே அவளின் வருகையை உணர்ந்து கொண்டவன் வேகமாக திரும்பி அறை வாயிலை பார்க்க அங்கே அவளும் பால் சொம்பை கையில் வைத்துக் கொண்டு  தன் உதட்டை பற்களால் அழுந்த  கடித்தபடி நின்றிருந்தாள்...

காலையில் அணிந்ததை போல இப்பொழுதும் அதே மயில் கழுத்து கலர் பட்டுப்புடவை.. ஆனால் சரிகை மட்டும் சின்னதாக இருந்தது.. நளனுக்கு இந்த கலர் பிடிக்கும் என்பதால் எல்லா புடவையும் இந்த கலரிலயே தேர்ந்தெடுத்து இருந்தாள் தமயந்தி..

அதில் ஒன்றை கட்டிக்கொண்டு வந்து இருக்க ரிஷி கண்களோ ஆவலுடன் அவளை அள்ளி பருகியது..   

ஒரு நொடி இமைக்க மறந்து அவளை கணவன் பார்வையுடன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..  அவளும் விழிகளை உயர்த்த அவன் பார்வையிலிருந்த அந்த கணவனுக்கான ஆசையை ஏக்கத்தை கண்டதும் உள்ளுக்குள் கிலி பரவியது..

அவள் கைகள் நடுங்க ஆரம்பிக்க அடுத்த நொடி இரண்டே எட்டில் அவளை  அடைந்தவன்

“ஹே புதுப்பொண்ணு... வா வா.. ஏன் அங்கயே நிக்கிற? “  என்றவாறு அவளை கைபிடித்து அழைத்து வந்தான்..  அவளின் கையை  தொடும் போதே அவள் கை சில்லிட்டிருப்பது புரிந்தது..

கூடவே அவள் உடலிலும் தெரிந்த நடுக்கம் அவளின் மன நிலையை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்டான்..

உடனே அவள் கையில் இருந்த சொம்பை வாங்கி வைத்தவன் அவளை மெல்ல தன் தோளோடு சேத்து அணைத்து அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தவன் அவனும் அருகில் அமர்ந்து கொண்டான்...

அவள்  கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு பின் மெல்ல நிமிர்ந்து அவளை பார்க்க, அவளோ இன்னும் மிரட்சியுடன் தலையை குனிந்து கொண்டாள்..

அவளின் மோவாயை பிடித்து நிமிர்த்தியவன் அவள் கண்களுக்குள் பார்த்து

“என்னடா பயமா இருக்கா?  என்றான் மயிலிறகால் வருடும் மென்மையான குரலில்..

அவளும் ஆமாம் என்று தலையாட்ட

“என்கிட்ட என்ன பயம் டா...?  ஓ இது ஃபர்ஸ்ட் நைட் என்கவும் நீ வந்த உடனே நான் உன் மீது பாய்ந்து விடுவேன் என்று பயந்து போனாயாக்கும்.. “  என்று சிரித்தவன்

“நான் அம்மாகிட்ட இதெல்லாம் வேண்டாம் என்றுதான் சொன்னேன் டா..  அம்மாதான் கேட்கல.. சரி அவங்க மனசு திருப்திக்காக செய்து விட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன்.. “  

என்று அவள் கை விரலை ஒவ்வொன்றாக தன் கை விரல்களுக்குள் விட்டுவிட்டு எடுத்தவாறு சொல்லிக் கொண்டிருந்தான்..பின் அவளை நேராக பார்த்தவன் 

“தயா மா... நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது.. நான் அப்ப சொன்னது தான் இப்பவும் எப்பவும்... உன் மனம் என்னை கணவனாக ஏற்றுக்கொள்ளும் வரை நானாக  உன்னிடம் அந்த உரிமையை எடுத்துக்கொள்ள மாட்டேன்..

உன்னை என்னருகில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் இந்த திருமணம்.. இனிமேல் எந்த தயக்கமும் இல்லாமல் நீ என் பக்கத்திலேயே இருக்கலாம்.. உன்னை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்..

எந்த ஒரு வலியும் வேதனையும் உன்னை அடையாமல் நான் உன் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்வதற்கான லைசென்ஸ் தான் இந்த தாலி... இந்த திருமணம் எல்லாம்..

மற்றபடி உண்மையான கணவன் மனைவியாக உன் மனம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே.. அதுவரை நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்.. நீ எப்பவும் போல இந்த ரிஷி கேட்ட பேசணும்.. வாய் அடிக்கணும்.. நீ நீயா இரு.. என்னை கண்டு பயந்துக்காத.. புரிஞ்சுதா? “  என்று  பொறுமையாக எடுத்துக் கூறினான்..  

அதைக் கேட்டவளுக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது.. மனதை அழுத்தி வந்த பெரிய பாரம் நீங்கியதை போல இருந்தது.. அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் போல இருக்க ஆனால் ஏனோ உதடுகள் பிரிந்து கொள்ளவில்லை..

ஆனாலும் தன் கண்களால் நன்றி சொல்ல,  அவள் கண்ணை பார்த்தவன் அதில் குவிந்து கிடக்கும் பல குழப்பங்களையும் அவள் முகத்தில் காலையிலிருந்து பார்த்த பலவித உணர்வுகளையும் நினைவுக்குக் கொண்டு வந்தவன்  

அவள் முகத்தில் இருந்த குழப்பத்தையும் வாட்டத்தையும் போக்க எண்ணி அவள் மற்றொரு கையையும் எடுத்து  தன் இரண்டு கைகளுக்குள் வைத்து பொத்தி கொண்டு அவள் கண்களுக்குள் உடுருவி பார்த்தவன்

“நளன் நியாபகம் அதிகமா வருதா டா ? “ என்றான் அதே மயிலிறகாய் வருடும் குரலில்..

அதை கேட்டு அவளோ விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க,

“எதுக்குடா அப்படி பார்க்கற? உன் மனதில் இருப்பதை எல்லாம் என்னிடம் கொட்டிவிடு.. உன் மனதுக்குள் வைத்து அழுத்தி கொள்ளாதே.. அது இன்னும் வேதனையைத்தான் கொடுக்கும்..

நான் உன்னுடைய உண்மையான் ப்ரெண்ட் னா மனம் விட்டு பேசு... ப்ளீஸ் தயா.. என்னை தள்ளி வைத்து பார்க்காத..

நாம் இருவரும் நண்பர்களாக நம் வாழ்நாள் முழுவதும் இருக்க போகிறோம். அதனால் என்னிடம் சேர் பண்ணிக்க தப்பில்லை.. உன் நளனை பத்தி சொல்லு..

நீ அவனை இப்பவும் காதலிக்கிறதை கூட சொல்.. நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. நான் உனக்கு ப்ரெண்ட்.. அதை நியாபகம் வைத்துக் கொள்.. “ என்று அவள் கையை அழுத்தி கொடுக்க,

அடுத்த நொடி அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள் அவன் மனையாள்...

அவனை கட்டி கொண்டு காலையில் இருந்து அவள் அனுபவித்த அவள் பார்த்த அவள் மாமனின் உருவத்தையும் அதை  கண்டு தவித்த  அவளின் உணர்வுகளையும் அவனிடம் கதறலுடன் கொட்டி தீர்த்தாள்..

அவனோ அவளை இறுக அணைத்தவாறு தலையை வாஞ்சையுடன் தடவியவாறு அவள் சொல்லியதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தான்.. எல்லாத்தையும் அவனிடம் கொட்டி முடித்தவள்  

“என் மாமா வந்திருந்தான் ரிஷி.. என் கல்யாணத்தை பார்க்க வந்திருந்தான்.. “ என்று விசும்ப

“சரி டா.. சரி டா.... அவன் உன்னை பார்க்க வந்திருந்தால் இன்னும் இங்கேயேதான் இருப்பான்..  நீ இப்படி அழுமூஞ்சியா இருந்தா அவனுக்கு பிடிக்குமா? கஷ்டமா இருக்கும் தானா..

உன் கண்ணில் நீரை பார்த்தால் அவனுக்கு கஷ்டமா இருக்கும் தான... அதனால் அவனுக்காக,  நளனுக்காக இனிமேல் நீ அழக்கூடாது.

நீ இவ்வளவு நாள் அழுதது எல்லாம் போதும் டா.. அடுத்த முறை அவனை பார்த்தால் சட்டையை பிடித்து நாலு அறை அறஞ்சு ஏன்டா என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போன னு கேள்..

அப்பதான் அவனுக்கு உறைக்கும்.. இப்படி நீ அழக்கூடாது.... “ என்று  இன்னுமாய் அவளை இறுக்கி அணைத்தபடி அவளுக்கு ஆறுதல் சொன்னான்..

அதை கேட்டதும் கொஞ்சம் தெளிந்தவள்

“ஹ்ம்ம்ம் நீ சொல்றது சரிதான் ரிஷி..  நான் இனிமேல் அழமாட்டேன்.. “ என்று  கண்ணீருக்கு இடையில் சிரிக்க

“தட்ஸ் குட்.. இப்பதான் நீ குட் கேர்ள்.. சரி வா.. பேஸ் வாஸ் பண்ணிகிட்டு வரலாம்... “

என்றவன் அவனே அவளை அணைத்தவாறு அழைத்து சென்று அவள் முகம் கழுவி அருகில் இருந்த டவலில் முகத்தை துடைத்தவன் மீண்டும்  அழைத்து வந்து அவளை கட்டிலில் அமர வைத்தான்..

“தயா.. நீ டையர்ட் ஆ இருக்க.. இப்படி தூங்கு.. நான் கீழ படுத்துக்கறேன்.. “ என்க அதை கேட்டு திடுக்கிட்டு போனாள்..

“அவன் எவ்வளவு பெரிய கோடிஸ்வரன்..! இந்த அறையை விட பெரிய சைசில் இருக்கும் படுக்கையில்  படுத்தால் உள்வாங்கி கொள்ளும் பஞ்சு மெத்தையில் புரள்பவன்..

தனக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்து இந்த சிறு கிராமத்தில் இந்த சிறிய வீட்டில் தங்கி இருக்கிறான்.. இப்ப தரையில் படுத்துக்கறேன் னு சொல்றானே..” என்று  திகைத்தவள்

“அதெல்லாம் வேண்டாம் ரிஷி... மேலயே படுத்துக்கங்க... எனக்கு ஒன்னும் நோ அப்ஜெக்சன்.. “ என்றாள் அவசரமாக..

“ஆர் யூ ஸ்யூர்? “ என்று அவள் கண்ணுக்குள் பார்த்து கேட்க

“யெஸ்... ஐம் ஸ்யூர்.. உங்கள பத்தி எனக்கு தெரியும்...நீங்க கொடுத்த வாக்கை மீற மாட்டிங்கனு தெரியும்.  சோ.. தாராளமா இங்கயே தூங்குங்க.. “ என்று புன்னகைக்க, அவனும் புன்னகைத்தவாறு படுக்கையின் ஓரத்தில் படுத்து விட்டான்..

அவள் ஒரு மூலையில் படுத்து கொள்ள அடுத்த  அரை மணி நேரத்தில் இருவருமே உறங்கிவிட்டனர்...

ரிஷி நல்ல தூக்கத்தில் இருக்க திடீரென்று அவன் இடுப்பில் கை விழுந்தது.. அதில் இருந்த வளையல்களின் குலுங்கள் ஓசையில் திடுக்கிட்டு விழித்தவன் அருகில் திரும்பி பார்க்க அதிர்ந்து போனான்...

கட்டிலின் ஓரத்தில் படுத்து இருந்தவள் இப்பொழுது அவன் அருகில் நெருங்கி வந்து அவன் இடைமீது கையை போட்டு அவன் கழுத்து வளைவில் அவள் முகத்தை புதைத்து கொண்டிருந்தாள்..

அவளின் அருகாமையும் அவள் தலையில் அணிந்திருந்த அந்த மல்லிகையின் வாசமும் அவனை கிறங்க அடித்தது...

அதுவும் குழந்தையாக உறங்கும் அவளின் செவ்விதழ்கள் அவன் கழுத்தில் உரச, அவனுக்குள்ளே பெரும் பூகம்பம் அடித்து கொண்டு வந்தது...

தன் உடலோடு ஒட்டியபடி ஒன்டி கொண்டிருந்தவளை அப்படியே இறுக்கி கொள்ள தவித்தது  அவன் கணவன்  மனம்.. ஆனால் அடுத்த நொடி, அவன் செய்து கொடுத்த சத்தியம்,  உறுதி நினைவு வர, உடனே தன் ஆசைக்கு அணை போட்டான்..

தன் கணவன் மனதை தலையில் ஒரு குட்டு வைத்து அடக்கியவன் அவளின் நண்பனாய் பார்வையை மாற்றி கொண்டு அவளை ரசித்தான்..

இது அவளின் உறங்கும் வழக்கம் போல.. அன்று கூட ப்ளைட்ல் செல்லும் பொழுது அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன் கையை பிடித்து கொண்டுதானே உறங்கினாள்..

“அவன் யாரென்றே தெரியாத பொழுதே அவன் தோளில் உரிமையுடன் சாய்ந்து கொள்ளும் தைர்யம் எங்கிருந்து வந்ததாம்? எப்படி வந்ததாம் அந்த தைர்யம் அவளுக்கு..? 

அப்படி என்றால் ஏதோ ஒரு மூலையில் நான் அவளுக்கு நெருக்கமானவனாக இருக்கிறேன்.. அதை அவள் விரைவில் உணர்ந்து கொள்வாள்...” என்று பெருமூச்சு விட்டவன் மீண்டும் அவளை ரசித்து பார்த்தான்....   

இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை.. அவன் ரோஜா பொண்ணு, அவன் மான்குட்டி இப்படி தன்னை  கட்டி கொண்டு தன் கழுத்தில் முகம் புதைத்து உறங்குவாள் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை..

எப்படி நடந்ததாம்  இந்த அதிசயம் என்று அவன் மனம் ஒரு முறை நினைத்துப் பார்த்தது..! 


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!