தேடும் கண் பார்வை தவிக்க-48
அத்தியாயம்-48
அந்த பழைய நினைவுகளில்
இருந்து வெளிவந்தவன் ஓரப்பார்வையில் அருகில் இருந்தவளை பார்க்க, அவளோ விவேக் ன் தோளில் சாய்ந்து
நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்..
அவளை அவ்வளவு
நெருக்கத்தில் பார்க்க, ஏனோ உள்ளுக்குள் புரண்டது..அவளை பார்த்த நாள் முதலே அவனுக்குள்
அவ்வபொழுது பனிச்சாரல் அடிக்கும்..
ஆனால் அடுத்த
நொடி அந்த சது கண் முன்னே வந்து நிற்பான்
அவனை மிரட்டியவாறு.. அதனாலயே அவனை மனதிற்குள் கருவி கொண்டே தன் உணர்வுகளுக்கு அணை போட்டு
தடுத்து வந்தான்..
ஆனால் அவள்
தவறானவனை காதலித்து இருக்க, அதற்காக அவன் வருத்தபட்டாலும் அவளை காப்பாற்றி அந்த பாதிப்பில் இருந்து
வெளிகொண்டு வர துடித்தது அவன் உள்ளே..
அந்த
நொடியில்தான் காதலை பற்றி புரியாமல் இருந்ததும் புரிந்ததை போல இருந்தது..
இது மாதிரி
தானே அந்த நெட்டை ரிஷி தவித்திருப்பான்.. துடித்திருப்பான்..தன்
மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் துடிப்பதும் உயிர் போகும் வலி
பரவுவதும் காதலின் அடையாளங்கள் என தெளிவாக புரிந்து கொண்டான்..
“அப்படி
என்றால் நான் இந்த ரெட் ரோஸ் ஐ காதலிக்கிறேனா ?” என தனக்குள் கேட்க
“அடப்பாவி..
இன்னுமா உனக்கு அது புரியலை.. நீயெல்லாம் என்ன ஒரு டிடெக்டிவ் ஓ? “ என்று நமட்டு சிரிப்பை
சிரித்தான் கணேஷ்..
“ஹலோ ப்ரோ..
இதெல்லாம் உன் வேலைதானா? எப்படியோ என்னையும் இந்த பாழாய்ப் போன காதலில் சிக்க வச்சுட்ட.. நீ நல்லா
வருவ.. ஆனா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க.. என்னை அந்த ரிஷி மாதிரி எல்லாம் ரொம்ப
சுத்த விடாத..
சீக்கிரம் என்
ரோஜா பொண்ணு எனக்கு ஐ லவ் யூ சொல்லிடணும்.. அது உன் கையில் இருக்கு.. அது மாதிரி
நீ பண்ணிட்டனா 108 இல்ல இல்ல 1008 தேங்காய் உடைக்கிறேன்.. இட்ஸ் அ ப்ராமிஸ்..
ப்ளீஸ் கணேஷ்.. சீக்கிரம் என் வாழ்க்கையில் விளக்கேற்றி வை.. “
என்று மனதுக்குள் வேண்டி கொண்டவன் அருகில் அமர்ந்து இருந்தவளை
ரசித்தவாறு இருக்கையின் பின்னால் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்ணை மூடி அவன்
ரோஜா பொண்ணு, ரூப்ஸ் உடன் டூயட் பாட ஆரம்பித்தான்...
திருமணம் முடிந்த
அடுத்த
நாள் சென்னை வந்துவிட்டனர் ரிஷியும் தமயந்தியும்..
கண்ணம்மா கிராமத்துலயே இருந்து கொள்வதாக சொல்லி சென்னைக்கு வர மறுக்க,
ரிஷி அவரை கட்டாயபடுத்தி தன்னுடன் அழைத்து வந்து விட்டான்..
கன்னியம்மாவுக்கும் நல்ல ஒரு செவிலியை ஏற்பாடு செய்து அவரை நன்றாக பார்த்துக்க
சொல்லிவிட்டு வர அவருக்கோ தன் பேத்தியின் வாழ்வு நேராகிவிட்ட சந்தோஷத்தில் கொஞ்சம்
கொஞ்சமாக உடல் தேற ஆரம்பித்தார்..
சென்னைக்கு வந்த பிறகு வாழ்க்கை வழக்கம் போல ஓட ஆரம்பித்தது..
அரண்மனை போல இருந்த வீட்டை பார்த்ததும் கண்ணம்மாவும் , தமயந்தியும் திகைத்து போயினர்..
தோட்ட வேலை வீட்டு வேலை, கார் துடைக்க வீட்டை தினமும் துடைக்க என்று ஒவ்வொன்றுக்கும்
ஆட்கள் இருக்க, கண்ணம்மாவுக்கு முதலில் அங்கே தங்க சங்கோஜமாக
இருந்தது...
ரிஷி அவரை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக்கி அந்த வீட்டில் பொருந்த
வைத்தான்... வீட்டில் போரடிக்க, சமையலை மட்டும் கண்ணம்மா செய்வதாக ரிஷியிடம்
வற்புறுத்தி வாங்கி கொண்டார்..
அடுத்த வாரமே பெரிய அளவில் ரிசப்ஷனை நடத்தி முடித்தான்.. முதலில்
தமயந்தி ஒத்து கொள்ளவில்லை..
“தயா.. இது வெறும் பார்மாலிட்டிக்கான ரிசப்ஷன்...நீ என்னுடைய மனைவியாய்
என்னுடன் வந்து நில்.. மத்ததை எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்..
உன்னை யாரும் கஷ்டபடுத்த மாட்டார்கள்.. உனக்கு எந்த வேதனையும் வராமல்
நான் பார்த்து கொள்கிறேன்.. “ என்று கெஞ்சி கெஞ்சி சம்மதிக்க வைக்க,
அவளும் அவன் பாவமான முகத்தை பார்த்து சம்மதித்தாள்..
ஆனால் ரிஷிக்குத்தான் பெரும் சத்திய சோதனையாக ஆகி போனது..
ரிசப்ஷன் அன்று அவளை அழகு பெண்களின் கை வண்ணத்தில் ரிசப்ஷனுக்கான
மணப்பெண் அலங்காரத்தில் அவளை காண அவன் மனம் தறிகெட்டு ஓடியது.. அவளை விட்டு கண்ணை
அகற்ற முடியாமல் பார்த்து வைத்தான்..
அவளோ அவன் அப்படி பார்க்கும்பொழுதெல்லாம் அவனை முறைத்து வைக்க,
அவனும் ஓ.. சாரி சாரி... என்று அவளுக்கு மட்டும் புரியும் வண்ணம் கண்ணால் சாரி சொல்லி
காலில் விழுவான்..
அதை கண்டு அவளும் அடுத்த நொடி மலர்ந்து சிரிப்பாள். அவர்களுக்குள்
அப்படி ஒரு நட்பு பரவி கிடந்தது இந்த நாட்களில்.. ஆனால் நட்பை தாண்டி அவளால்
வெளிவர முடியவில்லை..
காதலுக்கும்
நட்புக்கும் ஒரு மெல்லிய நூலிழை தான் நடுவில்.. ஆனால் சில பேருக்கு அந்த மெல்லிய
நூலிழையே இரும்பு திரையாக இருந்து காதல் மலராமல் தடுத்து வெறும் நட்பாக நின்று விடும்..
ஆனால் ரிஷியோ
அவள் அதை தாண்டி, நட்பை தாண்டி காதல் வட்டத்துக்குள் வரவேண்டும்
என்று தவம் இருந்தான்.. .
ரிசப்ஷனில்
இருவரும் அருகருகே நின்று கொண்டு வருபவர்களை வரவேற்று சிரித்து பேசி அவர்கள்
வாழ்த்தை ஏற்று கொண்டு என்று பொழுது நகர்ந்தது..
அங்கு வந்திருந்த
பெரிய பெரிய வி.ஐ.பிக்களை கண்டதும் தமயந்திக்கு தலை சுற்றியது.
அவர்களை எல்லாம்
அவள் நேரில் அதுவும் தன் அருகில் பார்க்க அவளுக்கே நம்ப முடியவில்லை..
அவ்வளவு பெரிய
ஆள் தன்னிடம் எப்படி அப்படி நடந்து கொள்கிறான் என்று வியப்பாக இருக்கும்..
அவன் ஒற்றை
பார்வைக்காக பல பேர் காத்திருக்க, அவனோ தன் கண் பார்வைக்காக தவமிருந்து
தன் மனதில் நினைப்பதை அப்படியே நிறைவேற்றி வைக்கிறான்..
அவன் தனக்காக பார்த்து பார்த்து செய்வது கண்டு சிலிர்த்துப்
போனாள்.. ஆனாலும் ஏனோ அவன் காதலை மட்டும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
ரிசப்ஷன்
வெற்றிகரமாக முடிந்திருக்க வீட்டிற்கு திரும்பி இருந்தனர் அனைவரும்..
தங்கள் அறையில் ட்ரெஸ்ஸிங்
டேபிள் முன் அமர்ந்து கொண்டு அவள் அணிந்திருந்த நகைகளையெல்லாம் கலட்டி வைத்துக் கொண்டிருந்தாள்
தமயந்தி..
அப்பொழுது உள்ளே
வந்த ரிஷி அவளின் பாதி கலைந்த மேக்கப்பில் அவள் இன்னும் தேவதை மாதிரி ஜொலித்துக்
கொண்டிருக்க, அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்..
கண்ணாடி வழியாக
அவனை கண்டு கொண்டவள் கண்ணாடி வழியாக அவனை பார்த்து புன்னகைத்து .
“ரிஷி..... இங்க
வாயேன்... “ என்று அழைத்தாள்.. அவனும் தன் தலையை தட்டிக் கொண்டு அவள் அருகில்
செல்ல
“இந்த நெக்லஸ்
கலட்ட வரமாட்டேங்குது.. கழட்டி விடு.. “ என்று அவள் கழுத்தை காண்பிக்க அவனுக்கோ பெரும்
அவஸ்தை ஆகிப் போனது..
ஏற்கனவே அவளை
ரிசப்ஷன் அலங்காரத்தில் பார்த்ததில் இருந்து அவன் உள்ளே சுழன்று கொண்டிருந்த சூறாவளி இப்பொழுது
அவளை பாதி மேக்கப்பில் காண இன்னும் தகித்தது உள்ளே..
அதற்கு சோதனையாக
அவள் அந்த நெக்லஷ் ஐ கழட்ட சொல்ல, அவனோ தயங்கி நின்றான்..
“ஏன் நிற்கிற
ரிஷி..? கழட்டி விடு... “ என்று திரும்பி அவன் முகம்
பார்த்து சொல்ல அவனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவன் அந்த நெக்லஷ் ல் இருந்த
ஹூக் ஐ கழட்ட முயல அதுவோ இன்னும் டைட்டாக மாட்டி கொண்டு இருந்தது..
அதை கழட்ட
முடியாமல் அவன் தடுமாறிக் கொண்டிருக்க அதற்கு வழியையும் அவளே சொன்னாள்..
“பேசாம குனிஞ்சு
பல்லால கடிச்சு எடுத்து விடு ரிஷி.. எங்கம்மா
அப்படித் தான் செய்வாங்க.. “ என்க அவனும்
மெல்ல குனிந்து பற்களால் அந்த நெக்லஷின் ஹூக் ஐ கடித்து பார்த்தான்..
எப்படியோ அந்த
ஹூக் விலகிவிட்டது.. ஆனால் அவள் கழுத்து வளைவில் அவன் தான் மாட்டிக்கொண்டான்..
பற்களால் அந்த
ஹூக் ஐ கடிக்கும் பொழுது அவன் இதழ்கள் அவள் கழுத்தில் உரச அவனுக்குள் இன்னும் தீப்பற்றிக் கொண்டது.. அடுத்த நொடி
அவனையும் மறந்து அவன் இதழ்கள் அவள் கழுத்தில் அழுந்த பதித்தன..
அதுவரை இயல்பாக
நின்று கொண்டிருந்தவள் அவன் மூச்சு காற்று அவள் கழுத்தில் குறுகுறுப்பை மூட்ட கூடவே
அவன் இதழ்கள் கழுத்தில் எதையோ தேடி கொண்டிருக்க அடுத்த நொடி நறுக் என்று அவன்
கையில் கிள்ளினாள்..
“கொக்கியை கழட்ட
சொன்னா இன்னும் என்ன பண்ற ரிஷி..? " என்றவள் அவனிடம் இருந்து தள்ளி நின்று
கொண்டாள்..
அவனோ அவன் இதழ்
தீண்டிய நொடி அந்த சொர்க்கத்தை தொட்டிருக்க,
திடீரென்று அந்த சொர்க்கத்தில் இருந்து யாரோ கீழ தள்ளிவிட்ட மாதிரி திருதிருவென்று
முழித்து கொண்டிருந்தான்..
அவனின் அந்த
முழியை கண்டு கிளுக்கி சிரித்தவள்
"ஐய... இது என்ன இப்படி ஒரு முழி ரிஷி...? ஆடு திருடிய திருடன் மாதிரி..
“ என்று எக்கி அவன் கன்னத்தை பிடித்து
செல்லமாக கிள்ளினாள்..
“நல்ல வேளை.. அவன் பண்ணின திருட்டுத்தனம் அவளுக்கு
தெரியவில்லை.. தெரிந்திருந்தால் இன்னேரம்
கடித்து குதறி இருப்பாள்.. “
என்று நிம்மதி
மூச்சு விட்டு கொண்டவன் ஒரு வெட்கச் சிரிப்பை சிரித்து ஒரு கையை தன் பேன்ட் பாக்கெட்டிற்குள் விட்டு
கொண்டு மறு கையால் தன் தலையை பின்னால் தடவிக் கொண்டே அவளிடம் இருந்து சற்று
நகர்ந்து நின்று கொண்டான்..
பின் அவளை
பார்த்தவன்
“தயா எனக்கு
கொஞ்சம் வேலை இருக்கு.. நான் ஆபிஸ் ரூம்ல இருக்கேன்.. நீ ட்ரெஸ் மாத்திட்டு
படுத்து தூங்கு..குட் நைட்... " என்று
சொல்லிவிட்டு அவசரமாக வெளியில் சென்றான்..
தன் அலுவலக
அறையை அடைந்தவன் கதவை மூடி கொண்டவனுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக மூச்சு விட
முடிநதது..
“என்ன கழுத்துடா
அது? ஆளை அப்படியே இழுக்குது.. பொதுவா கண்ணுதான் ஆளை
இழுக்கும் னு சொல்லுவாங்க.. இவ கழுத்து கூட என்னை சீண்டுதே... இன்னும் ஒரு நிமிஷம்
இருந்திருந்தால் என் சத்தியத்தை நானே உடைத்திருப்பேன்..தேங் காட்... "
என்றவன் தன் இருக்கையில்
அமர்ந்து லேப்டாப் ஐ திறக்க சற்றுமுன் அவன் கண்ட அவளின் தோற்றமும் அவள் கழுத்தில்
பதித்த இதழ் ஒற்றுதலும் திரும்ப திரும்ப நினைவு வர அவனால் வேலையில் கவனம் செலுத்த
முடியவில்லை...
ஏதேதோ நோண்டி
கொண்டிருக்க, உருப்படியாக எதுவும் செய்ய
முடியவில்லை.. சிறிது நேரத்தில் அதனுடன் போராடியவன் பின் தன் லேப்டாப்பை மூடிவைத்தவன்
மணியை பார்க்க பன்னிரெண்டாகியிருந்தது..
ஆனாலும் தன்
அறைக்குத் திரும்ப மனமில்லை அவனுக்கு..
இன்று மாலையில்
இருந்தே ஒரு மாதிரி டிஸ்டர்ப் ஆகியிருந்ததால் வழக்கம் போல அவன் மான்குட்டி அவனை
அணைத்துக் கொண்டு அவன் கழுத்தில் முகம் புதைத்தால், இன்று
அவனால் அவனை கட்டுப்படுத்த முடியாது என்று தோன்றியது..
அதனாலயே அவன்
அறைக்கு செல்லாமல் அந்த அலுவலக அறையிலேயே தங்கிவிட்டான்..அங்கிருந்த சோபாவில்
படுத்து விட, உறக்கம்தான் வரவில்லை..
எப்பொழுதும்
அவள் கை அணைப்பில் உறங்கி பழகியவனுக்கு அவளில்லாமல் உறக்கம் வரவில்லை.. மனம் அவள்
அருகாமையையும் அவள் வாசத்தையும் அவள் வளையல் குலுங்கும் ஓசையையும் தேடியது..
அங்கு தமயந்திக்கும்
அதே நிலை தான் போல.. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் அதற்குமேல் தாங்க
முடியாமல் ஒரு மணி அளவில் அலுவலக அறை கதவை தட்டிவிட்டு உள்ளே வந்து நின்றாள் தமயந்தி..
சோபாவில்
படுத்து இருந்தவன் மெல்ல தலையை தூக்கி அறை கதவின் அருகில் பார்க்க இன்னும்
அதிர்ந்து போனான்..
அங்கு தமயந்தி
இரவு உடையில் தன் நீண்ட முடியை அள்ளி கொண்டையாக முடிந்து கொண்டு நின்று
கொண்டிருந்தாள்..
வழக்கமாக இரவு
நேரங்களில் அணியும் உடைதான் என்றாலும் ஏற்கனவே அவனுள் சூறாவளி சுழற்றிக் கொண்டிருக்க
அதுக்கு இன்னும் தூபம் போடுவதை போல அந்த இரவு உடையில் அவளைப் பார்க்க இன்னும்
எகிறி குதித்தது அவனுக்கு...
அவன் பார்வையை
அவசரமாக கட்டுபடுத்தி சோபாவில் இருந்து எழுந்து அமர்ந்தவன் அவளை பார்த்து மெல்ல
புன்னகைத்து
“என்னடா ஆச்சு? “ என்றான் குரலே இல்லாமல்..
“ஹ்ம்ம் தூக்கம்
வரல ரிஷி... உன் வேலை முடிஞ்சிருச்சுனா நீயும் வா தூங்கலாம்..அப்ப தான் எனக்கு
தூக்கம் வரும்.. “ என்று சிறுபிள்ளை போல்
தலை சரித்து பாவமாக கேட்க அதற்கு மேல் அவனால் மறக்க முடியவில்லை..
உடனே சோபாவில்
இருந்து எழுந்தவன்
“சரி.. வாடா..
தூங்கலாம்.. “ என்று அவள் அருகில் வந்தவன்
அவனே எதிர்பாராமல் அடுத்த நொடி அவளை
அப்படியே தன் கையில் அள்ளிக் கொண்டான்..
எங்கிருந்து தான்
வந்தது அந்த தைரியம் அவனுக்கு? அப்படி அவளை அள்ளி கொள்ள வேண்டும் என்று எதுவும்
நினைத்திருக்கவில்லை.. வந்திருந்தது
அப்படி ஒரு எண்ணம்...அள்ளிகொண்டான் தன்னவளை அவன் கைகளில்..
தமயந்தியும் ஒரு
நொடி திகைத்துத் தான் போனாள்.. அவன்
அப்படி அள்ளிக் கொள்ளவும் அப்படியே அவன் மாமா நளனை போல தோன்றினான் அவளை அள்ளி
கொண்டவன்..
அடுத்த நொடி அவசரமாக
அவன் முகம் பார்க்க அங்கே மந்தகாச புன்னகையுடன் அவளை தூக்கிக் கொண்டு தங்கள் அறையை
நோக்கி சென்று கொண்டிருந்தான் நளன்...
அடுத்த நொடி அவள்
கைகள் தானாக உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாக தவழ்ந்தது.. அவள் கண்ணிலும் காதல்
வந்து ஒட்டிக் கொள்ள கன்னங்களும் சிவந்து போய் அவனையே இமைக்க மறந்து
ரசித்திருந்தாள்..
அவளின் அந்த
காதல் பார்வையில் இன்னும் கிறங்கியவன் முற்றிலும் தன்னை தொலைத்திருந்தான்...
தங்கள் அறைக்கு
வந்தவன் அவளை படுக்கையில் கிடத்தியவன் அவள்
இதழ் நோக்கி தாபத்துடன் குனிய அந்த நொடி சொல்லி இருந்தாள் அதை...
“டேய் மாமா...
நீ ரொம்ப மோசம்..இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.. : என்று அவள் முகத்தை தன் இரு
கரங்களால் மூடி கொண்டு வெட்க பட்டு சிணுங்க அப்பொழுது தான் உறைத்தது அவனுக்கு அந்த
உண்மை....
அவள் கண்ணில் தெரிந்த
காதல் அவள் மாமன் நளனுக்காக.. அவளிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னல் நளனுக்காக.. அவன்
நளன் இல்லை.. ரிஷி வர்மா.. என்ற உண்மை அவன் மண்டையில் உறைக்க அவள் இதழை அடைந்த தன்
இதழ்களை வலுகட்டாயமாக திரும்ப அழைத்து கொண்டான்..
அவளோ சிறிது நேரம்
கண் மூடி தன் மாமனின் முத்தத்திற்காக எதிர்பார்த்து மையலுடன் கிறங்கி கிடக்க,
அங்கு எந்த அசைவும் இல்லாமல் போக மெல்ல ஒரு கையை மட்டும் முகத்தில்
இருந்து விலக்கியவள்
"ஏன்டா
மாமா.. அப்படியே நின்னு கிட்ட? " என்று
வெட்கத்துடன் தலை சரித்து வினவ, ரிஷியோ தன் வேதனையை உள்ளுக்குள்
மறைத்து கொண்டு அவள் அருகில் அமர்ந்தவன் அவள் தோளை தொட்டு உலுக்கியவன்
“தயா... நான்
ரிஷி..... நளன் இல்லை.... " என்றான் வேதனையுடன்..
எந்த ஒரு
கணவனும் அனுபவிக்க கூடாத நரக வேதனை அது.. தன் மனைவி தன்னை அடுத்தவனாக எண்ணிக்
கொள்வது.. தன்னை விடுத்து அடுத்தவனை காதலனாக எண்ணி அவனுக்காக வாழ்வது..
அவளின் அந்த
ரியாக்ஷனை கண்டதும் ரிஷியின் உள்ளுக்குள் சுழன்று கொண்டிருந்த சுனாமி அந்த
நொடியில் அப்படியே அடங்கி போக அடிபட்ட பாவத்துடன் அவளை தோள் தொட்டு உலுக்க
அப்பொழுதுதான் சுய நினைவுக்கு வந்தவள் ஒன்றும் புரியாதவளாக
"என்னாச்சு
ரிஷி... ? " என்று பதற்றத்துடன் எழுந்து அமர்ந்தாள்..
“ஒன்னும் இல்லடா..
தூக்கத்துல ஏதோ உளறின.. அதுதான் உன்னை எழுப்பினேன்... நீ தூங்கு.. " என்றான்
அவள் தலையை வருடி...
“நான் எப்படி
இங்க வந்தேன் ரிஷி..? உன் ஆபிஸ் ரூம்க்கு வந்தேன்.. அப்புறம் எப்படி
இங்க வந்தேன்? " என்றாள் குழப்பமாக..
அந்த நொடி புரிந்தது
அவனுக்கு...அவன் ஒரு வேகத்தில் அவளை தூக்கி விட, அந்த
நொடி அவளுக்கு அவன் நளனாக தெரிந்திருக்கிறான் என்ற உண்மை..
அவளிடம் உண்மையை
சொல்லாமல்
“அது.. நீ
தூக்கத்தில் இருந்தியா.. அதான் நீ நடந்து வந்தது உனக்கு தெரியல டா.. “ என்று
புன்னகைக்க
“ஓ... "
என்றவள் “சரி வா தூங்கலாம்... “ என்று அவனையும் அழைக்க, அவனும்
இடம் வலமாக தலையை ஆட்டி கொண்டு அவள் அருகில் படுத்து கொள்ள அடுத்த நொடி அவனை கட்டி
கொண்டாள் அவன் மனையாள்..
காமம் இல்லாத
அணைப்பு அது.. ஒரு தாயை தேடும் பிள்ளையின் அணைப்பு அது.. இப்படித்தான் திருமணம் ஆன
நாளில் இருந்து அவனுடன் உறங்குகிறாள்..
எந்த இடத்திலும்
அவனும் அவளிடம் எல்லை மீறியது இல்லை.. அவளை ஒரு குழந்தையாக பாவித்து அவளை
பாதுகாத்து வருகிறான்.. இன்றுதான் மனம் தறிகெட்டு போய்விட்டது...
என்று தன்னைத்தானே நொந்து கொண்டு அவனும் அவளை மெல்ல அணைத்தவாறு உறங்கி போனான் ரிஷி வர்மா..!
Comments
Post a Comment