தேடும் கண் பார்வை தவிக்க-50

 


அத்தியாயம்-50

ண்ணா யுனிவர்சிட்டி வளாகத்துக்குள் காரை செலுத்தியவன் வழக்கமான இடத்தில் நிறுத்திவிட்டு இறங்க, தமயந்தியும் உடன் இறங்கினாள்..

ஏனோ அவளுக்கு படபடப்பாக இருந்தது.. ஸ்டேஜ் ஏறி அந்த பட்டத்தை வாங்க பயமாக இருந்தது.. அருகில் நின்றிருந்த ரிஷியின் கையை பிடித்து கொண்டாள்..

அவன் கைவிரலுக்குள் தன் கை விரல்களை விட்டுக் கொண்டாள்.. அவள் வாய் திறந்து சொல்லாமலயே அவள் மனநிலையை புரிந்து கொண்டவன் அவளை மெல்ல அணைத்து

“ரிலாக்ஸ் தயா பொண்ணு... சும்மா நீ ஸ்டேஜ் ஏறி மெடல் வாங்க போற.. அவ்வளவுதான்..  அதெல்லாம் என் பொண்டாட்டி கலக்கிடுவா.. லண்டனுக்கே தனியா போய்ட்டு அங்க  ஸ்டேஜ் ஏறி சூப்பரா டான்ஸ் ஆடினவ..

நீ  நாலு வருஷமா படிச்ச இந்த காலேஜ்ல ஸ்டேஜ் ஏறவா உனக்கு பயம்.. அதெல்லாம் நீ சூப்பரா கலக்கிடுவ... ரிலாக்ஸ்..” என்று அவளை அணைத்தவாறு ஆறுதல் சொல்லி அவளை  தன்னுடனே அழைத்துச் சென்றான்..  

விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல, அங்கிருந்த மாணவர்கள் எல்லாரும் ரிஷியை கண்டதும் அனைவரும் எழுந்து ஓ வென்று கத்தினர்... ரிஷியும் லேசாக வெட்கப்பட்டு அனைவருக்கும் கையசைத்து புன்னகைத்தவாறு தமயந்தியை மறுகையால் அணைத்தவாறு முன்னேறிச் சென்றான்..  

அங்கு  பட்டம் வாங்குபவர்கள் எல்லாம் ஒரு வரிசையில் அமர்ந்திருக்க தமயந்தியை அங்கு அமர வைத்து மறுபகுதிக்கு கிளம்ப எத்தனிக்க, அவளோ எட்டி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்..

தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்று பார்வையால் கெஞ்ச, அவள் கண்களில் இருந்த தவிப்பைக் கண்டவன் அங்கிருந்த ஒருங்கிணைப்பாளரிடம்  அனுமதி வாங்கிக் கொண்டு அவளை தன்னுடன் அழைத்துச் சென்று பார்வையாளர் பக்கம் முன்னால் அமர்ந்து கொண்டான்..  

விழா ஆரம்பிக்க இருக்க அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஆளுநர் மற்றும் கல்லூரியின்  டீன் ரிஷியை கண்டு கொண்டு மேடைக்கு வரச்சொல்லி அழைத்தனர்..

அவனோ அவளை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாமல் மேலே செல்ல மறுத்து கீழேயே  அமர்ந்து கொண்டான்..  

கொஞ்சம் தெளிந்திருந்த தமயந்திக்கோ ஆச்சரியமாக இருந்தது...

கல்லூரியின் டீன் அதோடு ஒரு ஆளுநரே அவனை கண்டு கொண்டு அழைக்கும் அளவுக்கு பெரிய ஆள் தன் பக்கத்தில் அதுவும் தனக்காக அவர்கள் அருகில் சென்று அமர்வதை கூட தவிர்த்து விட்டானே என பூரித்து போனாள்..

தனக்காகத்தான் அவன் கீழயே அமர்ந்து இருக்கிறான் என புரிந்து கொண்டவள்

“ரிஷி...  நீங்க வேணா மேலே போங்க.. இப்ப எனக்கு பயம் இல்ல.. நான் இப்படியே இருந்துக்கறேன்.. நீங்க மேல போங்க.. “  என்று சொல்ல

“இருக்கட்டும் டா... நீ பட்டம் வாங்குவதை நான் கீழே முன்வரிசயில்  இருந்து ரசித்து பார்க்கணும்.. அதுக்கு இதுதான் வசதி..” என்று கண் சிமிட்ட, அதை கேட்டு மீண்டும் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்..

“இது அவள் மாமா உடைய டயலாக்... அவளை இந்த கல்லூரியில் சேர்த்த பொழுது இப்படித்தான் சொன்னான்.. நல்லா படிச்சு நீ கோல்ட் மெடல் வாங்கணும்.. அதை நான் முன் வரிசையில் அமர்ந்து ரசித்து பார்க்கணும்...

ஹே பொண்டாட்டி.. நீ மட்டும் கோல்ட் மெடல் வாங்கிட்ட, நான் விசில் அடிச்சு இந்த அரங்கத்தையே அதிர வைப்பேன்.. ப்ராமிஸ்.. அதுக்காக நீ நல்லா படி.. கண்டிப்பா கோல்ட் மெடல் வாங்கணும்.. “ என்று அவள் தலையை பிடித்து ஆட்டி சொன்னது இன்னும் அவள் கண் முன்னே..

அதுக்காகவே தன் வேதனையை எல்லாம் மனதுக்குள் போட்டு கொண்டு கஷ்டபட்டு படித்தாள்.. அவனுக்காகவே படித்தாள்.. அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று வெறியுடன் படித்தாள்..

இதோ அவன் சொன்ன மாதிரி கோல்ட் மெடலும் வாங்க போகிறாள்..

“ஆனால் அவன் சொன்ன மாதிரி அவன் வருவானா? முன் வரிசையில் அமர்ந்து என்னை பார்த்து ரசிப்பானா? “ என்று யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.

அதே நேரம் அவள் பெயரை அழைத்திருந்தனர் மேடைக்கு வர சொல்லி..  உடனே அவசரமாக எழுந்து மேடைக்கு ஏறிச் செல்ல,  செல்லும்பொழுதே அவள் கண்கள் பார்வையாளர் பக்கமே இருந்தது..

அவள் மாமா வந்து எங்காவது அமர்ந்திருக்கிறானா? என்று கண்களால் தேடினாள்... அவள்  பார்வை தவிக்க, இமைகள்  துடிக்க தேடினாள் தன்னவனை அந்த அரங்கத்தில்...

எல்லா பக்கமும் தன் கண் பார்வை தவிக்க தேடி பார்த்தவள் அவனை காணாமல் முகம் வாட, அவள்  பார்வை எதேச்சையாக முன் பக்கம் வர அப்படியே ப்ரீஸ் ஆகி போனாள்..

முன் பக்க வரிசையில் அமர்ந்திருந்தான் அவள் மாமன் நளன்.. எங்கிருந்தோ வந்துவிட்டான் அவளை காண.. அவள் பட்டம் வாங்குவதை  பார்க்க ஆவலுடன் காத்திருந்தான்..

அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமை பூரிப்பு.. அதுவும் அவன் சொன்ன மாதிரி அவள் கோல்ட் மெடல் வாங்க போகும் கர்வம் அவன் முகத்தில்..

அதுதான் அவனின் கனவு,  ஆசை…! அதை நிறைவேற்றி வைத்திருக்க அதை நிறைவுடன் பார்த்திருந்தான் அவள் மாமன்..

பெண்ணவள் மனமெல்லாம் பூரித்துப் பொங்க, பெருமையுடன் அந்த பட்டத்தை சீப் கெஸ்ட் இடம் இருந்து வாங்க,  அதேநேரம் வாயில் கையை வைத்து அந்த அரங்கமே அதிருமாறு விசில் அடித்தான் அவன்...

அவளுக்கோ வெட்கமாய் போய்விட்டது.. பட்டத்தையும் பதக்கத்தையும் வாங்கிக்கொண்டு அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு வேகமாக திரும்பி மேடையில் இருந்து கிட்டதட்ட ஓடி வந்தாள் அவள் மாமனை பார்க்கும் ஆவலில்..

அவள் மாமன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்து ஆவலுடன் பார்க்க பலத்த அதிர்ச்சி பெண்ணவளுக்கு..

சற்று முன் அவள் கண்ட அவள் மாமன் நளன் அமர்ந்திருந்த அதே இடத்தில் இப்பொழுது அமர்ந்திருந்தான் ரிஷி வர்மா...

“அப்படி என்றால்..?  இதுவரை நான் பட்டம் வாங்குவதை ரசித்து பார்த்தது,  விசில் அடித்தது எல்லாம் ரிஷியா? “  என்று குழப்பத்துடன் அவன் முகம் பார்க்க, அவனோ தன் இருக்கையில் இருந்து எழுந்து அவளை பார்த்து புன்முறுவலித்தவன்

“கங்கிராட்ஸ் பொண்டாட்டி... கலக்கிட்ட... “  என்று அவள் கையை பிடித்து குலுக்கி அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்..  

அவன் சற்றுமுன் அடித்த விசில் அங்கே எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது..

அவ்வளவு பெரிய பிசினஸ் மேன் அப்படி விசிலடித்தானே என்று எல்லாரும் ஆச்சரியமாக பார்க்க தன்னவளை வரவேற்கும் விதமாக எழுந்து நின்றிருந்தவன் அருகில் இருந்தவரிடம் இருந்த மைக் ஐ வாங்கி பார்வையாளரை பார்த்தவன்

“என்னுடைய வைஃப் உடைய ஆசை அவள் கோல்டு மெடல் வாங்கறப்பா நான் விசில் அடிக்கணும் னு... அவ ஆசையை நிறைவேற்ற, அவ கோல்ட் மெடல் வாங்கியதற்கு என்னுடைய சிறிய பரிசுதான் அந்த விசில்.. யாரும்  தப்பா எடுத்துக்காதீங்க.. “  என்று சிறு வெட்கத்துடன் விளக்கம் கொடுக்க அனைவரும் ஓ என்று கை தட்டி ஆரவரித்தனர்...

விழா முடிந்ததும் வெளியில் வர அவன் ரசிகர்கள் எல்லாம் இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.. அதுவும் தமயந்தியின் கிளாஸ்மேட்ஸ் எல்லாம் தமயந்தி இருக்கும் தயவால் ரிஷியை சூழ்ந்துகொண்டு போட்டோ எடுத்தனர்..

பின் இருவரையும் நிற்க வைத்து அவர்களும் இணைந்து நின்று போட்டோ எடுத்தவர்கள் தமயந்தியை வாழ்த்தி சிறு பொறாமையோடு கலைந்து சென்றனர்...  

அவளோ இன்னுமே குழப்பத்தில் இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளி அந்த சூழ்நிலையை சமாளிக்க முயன்றாள்..

டுத்த நாள் அந்த குளக்கரையில் கூடி இருந்தனர் அனைவரும்..

கண்ணம்மாவும் கன்னியம்மாவை அழைத்து கொண்டு வந்திருந்தார்.. இது நளன் இறந்து மூன்றாவது வருடம் நிறைவு நாள்..நளன் மட்டுமா? அவர்கள் குடும்பமே அழிந்து போனது இந்த நாளில் அல்லவா...  

இதுவரை கண்ணம்மா பக்கம் இருந்து இறந்தவர்களுக்கு திதி கொடுத்திருக்கவில்லை..கண்ணம்மா தமயந்தி மட்டுமே இருக்க இந்த நாளில் இருவருமே வேதனையுடன் சுருண்டு விடுவர்..

அதனால் இவ்வளவு தூரம் தேடி வந்து திதி கொடுக்கும் அளவுக்கு மனதில் தெம்பில்லை இரு பெண்களுக்கும்...அதனால் வீட்டிலயே சாமி கும்பிட்டு விட்டு படுக்கையில் சுருண்டு விடுவர்..

அதே போல ரிஷியும் அவன் பெற்றோருக்கு திதி கொடுத்திருக்கவில்லை.. ஏனோ அப்படி கொடுக்க மனம் வரவில்லை அவனுக்கு..

அவனை பொறுத்தவரை அவர்கள் இறக்கவில்லை.. அவனோடு கூடவே இருக்கிறார்கள் என்று எண்ணி இருந்ததால் இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் செய்ததில்லை..

ஆனால் கண்ணம்மா இந்த வருடம் திதி கொடுக்கலாம் என்று சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்...

ஏற்கனவே புரோகிதர் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து தயாராக இருக்க, ரிஷி வேஷ்டியை  கட்டி கொண்டு சட்டையை கழற்றி விட்டு அந்த  புரோகிதர் அருகில் அமர்ந்தவன் அவர் சொன்னதை எல்லாம் செய்து கொண்டிருந்தான்..

அவன் முகம் மட்டும் இறுகி கிடந்தது.. கண்களில் அத்தனை வலியும் வேதனையும்..

அதே போலவே தமயந்திக்கும்..

மூன்று வருடம் முன்பு நளனை வழி அனுப்ப விமான நிலையத்திற்கு அவள் அணிந்து வந்திருந்த அதே மயில் கழுத்து கலர் சல்வாரை அணிந்து வந்திருந்தாள்..

அவள் முகத்திலும் அப்படி ஒரு வேதனை விரவி கிடந்தது..

இருவர் மனமுமே மூன்று வருடம் முன்பு நடந்ததை நினைத்து கொண்டிருக்க, கண்ணம்மாவும் அப்பத்தாவுமே வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தனர்...

திதிக்கான பூஜை முடித்து பிண்டங்களை அந்த குளத்தில் இருந்த நீரில் கரைக்க சொல்ல, ரிஷியும் தயந்தியும் எழுந்து சென்று குளத்தில் அதை கரைத்தனர்....

அவள் மனம் எல்லாம் மாமா மாமா என்று அரற்றி கொண்டிருந்தது...

தமயந்தி,  ரிஷியை விடுத்து சற்று முன்னதாக குளக்கரை படிகளில் ஏறி முன்னால் சென்று  கொண்டிருக்க, திடீரென்று அவள் ஜடையை பிடித்து இழுத்து

“ஹோய் பொண்டாட்டி.... “ என்ற குரல் அவள் காதருகில் கேட்டது..

அதே குரல்.. அவள் மாமா குரல்..  உடனே திரும்பி பார்க்க யாரையும் காணவில்லை..

“எப்படி இது சாத்தியம் ! அப்படியே கேட்டதே அவன் குரல்..!  என் மாமா இங்கதான் எங்கயோ இருக்கிறான்..!.”  என்று அவசரமாக தேடி பார்த்தாள்...

கண் பார்வை தவித்தது மட்டும்தான் மிச்சம். அவனை காணவில்லை.. மாறாக ரிஷிதான் மேல ஏறி வந்து கொண்டிருந்தான்.. அவசரமாக அவனிடம் ஓடி அவன் கண்களுக்குள் தேட அங்கேயும் நளனை காணவில்லை...

அவள் முகத்தில் இருந்த தவிப்பையும் அவள் கண்களில் இருந்த தேடலையும் கண்டு கொண்டவன்  

“என்னடா ஆச்சு? “  என்றான்  மயிலறகாய் வருடிய மென்குரலில்..

அடுத்த நொடி அவன் மார்பில் புதைந்து கொண்டு குலுங்க ஆரம்பித்தாள் தமயந்தி..

அவள் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தவன்

“ஒன்னும் இல்ல டா...அழுவாத.. உன் மாமா உன்னை பார்க்க வந்திருப்பான் பார்.. இப்படி அழுமூஞ்சியா இருந்தா அவன் மனம் கஷ்டபடும் இல்ல.. “என்று எதை சொன்னால் அவள் அழுகையை நிறுத்துவாளோ அதை சொல்ல அடுத்த நொடி விலுக்கென்று நிமிர்ந்தவள்

“இல்ல.. நான் அழ மாட்டேன்.. என் மாமா ஆசை நான் எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும்ங்கிறது தான்.. டேய் மாமா.. எங்க இருந்தாலும் பார்த்துக்க.. நான் சிரிச்சிட்டேன்.. “ என்று  வாயை இரு கோட்டுக்கும் இழுத்து சிரித்து காண்பிக்க அத்தனை வேதனையிலும் சிரிப்பு வந்தது ரிஷிக்கு...

வாய் விட்டு சிரித்தவன்

“சூப்பர் டீ பொண்டாட்டி... இப்படியே சிரிச்சுகிட்டே இரு.. ஆனால் நான் மட்டும் ஒரு எஸ்கார்ட் போட்டு உன் முன்னால் யாரும் வந்திடாம அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்.. “ என்று சிரிக்க அவன் சொன்னதன்  அர்த்தம் புரிய சில நொடிகள் ஆனது பெண்ணவளுக்கு...

“டேய் ரிஷி.... என்னையவே கலாய்க்கிறியா.. உன்னை? “ என்றவள் அவனை அடிக்க வர அவனோ அவள் கைக்கு சிக்காமல் ஓடி விட்டான்..

சிறிது நேரம் அந்த குளக்கரையில் இருவரும் ஓடி பிடித்து விளையாட பெரியவர்கள் இருவருக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது..

அதற்கு பிறகு கிளம்பி அருகில் இருந்த முதியோர் இல்லத்திற்கும் அனாதை  ஆசிரமத்துக்கும் சென்று அங்கு இருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்..

முதியோர்களுக்கு புதிய ஆடை வாங்கி கொடுத்து அவர்களின் ஆசியை பெற்று கொண்டனர்...

ரிஷி அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து கொண்டு அவளுடனே இருந்து விட, வேதனையை மறைத்து  அந்த நாள் முழுவதுமே கலகலப்பாக இருக்க முயன்றனர் அனைவரும்..  

ன்று இரவு தமயந்தி வழக்கம் போல ரிஷியின் மார்பில் சாய்ந்து கொண்டு அன்றைய நாளை பற்றி பேசி கொண்டிருக்க, அவனும் அவள் தலையை வருடியவாறு அவள் சொல்லுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தான்..

என்னதான் வாய் அவனிடம் பேசிக் கொண்டே இருந்தாலும் அவள் மனம் முழுவதும் மூன்று வருடம் முன்பு நடந்ததையே எண்ணிக் கொண்டிருந்தது..

இந்த நேரம்தான் அவள் மாமன் தவிப்புடன் விமான நிலையத்தில் உள்ளே சென்றது..  அந்த நேரம் நினைவு வர அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது..

அவள் கண்களில் அவளையும் அறியாமல் தாரை தாரையாக நீர் வடிய அதை கண்டு ரிஷியும் தவித்து  போனான்..  

அவளை இறுக்க அணைத்து தன்னுள் புதைத்துக் கொள்ள வேண்டும்.. எந்த வேதனையும் அவளை அணுகக் கூடாது என்று தவித்தவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டவன் அவளை திசை திருப்ப எண்ணி

“ஹாய் பொண்டாட்டி...  ஷல் ஐ கிஸ் யூ? “ என்று அவள்  செவ்விதழை மெல்ல வருட அவள் உள்ளுக்குள் அன்று நளன் கேட்ட அந்த முத்தம் நினைவு வந்தது...

உடனே அவளும் கண்களால் சம்மதம் சொல்ல அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. கேட்ட உடனே ஒத்துகொண்டாளே.. என்று வியந்தவன்

“ஆர் யூ ஸ்யூர் ?”  என்று மீண்டும் உறுதிப் படுத்திக் கொள்ள அவளும் ம்ம்ம் என்று மீண்டும் தலை அசைக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அவள் இதழ் நோக்கி குனிந்தான் ரிஷி..

ஆனால் அவன் அவள் அருகில் வரும்போதே அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.. அவள் உதடுகளும் துடிக்க கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள்..

அவளின் அந்த நிலையைக் கண்டவன்  தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்

“உனக்கு பிடிக்காதது எதுவும் இந்த மாமா செய்ய மாட்டான் டி... எதுக்கு இப்படி பயந்து நடுங்கற? பிடிக்கலைனா பிடிக்கலைனு தைர்யமா சொல்ல வேண்டியது தான? “ என்று அவள் நுனி மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்...

அதை கேட்டு விலுக் என்று நிமிர்ந்து பார்த்தாள் தமயந்தி..

அன்று நளன் சொன்ன அதே டயலாக் அப்படியே அச்சு பிசகாமல் இப்பொழுதும்.. உடனே அவசரமாக  அவன் கண்களில் மீண்டும் நளனை தேட, காணவில்லை அவன்... ரிஷிதான் தெரிந்தான் அவள் கண்ணுக்கு..

அடுத்த நொடி அவனை இறுக்க கட்டிக்கொண்டு அவனுள் புதைந்து கொண்டாள் குலுங்கியவாறு... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!