தேடும் கண் பார்வை தவிக்க-54(Final)
அத்தியாயம்-54
சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் அமர்ந்து இருந்தனர்
ரிஷியும் தமயந்தியும்..
அதே ப்ளைட்..அதே சீட்.. அதே ஜன்னல்
ஓரம் அவளும் அவளை அடுத்து அவனும் அமர்ந்து இருந்தனர்..
அப்பொழுது வேகமாக அங்கு வந்த தலைமை
ஏர்ஹோஸ்டஸ் ரஜிதா
“ஹலோ ரிஷி.. வெல்கம் டு அவர் ஏர்லைன்...
என்ன இது ? பிசினஸ் க்ளாஸ் ல போகாம இந்த சீட்ல
உட்கார்ந்து இருக்கிங்க.. பிசினஸ் க்ளாஸ் ல நிறைய சீட் காலியா இருக்கு.. ப்ளீஸ்
கம்.. “ என்று கொஞ்சி அழைத்தாள்..
தமயந்தி அவளை முறைத்து பார்க்க அவனோ தன்
மனைவியின் பொறாமையை ரசித்தவாறு
“இட்ஸ் ஓகே ரஜி... இந்த இடம்தான் எனக்கு
பிடிச்சிருக்கு.. ஐ பௌன்ட் மை ட்ரெஸ்ஸர் இன் திஸ் சீட்.. அதனால் இது எனக்கு ஒரு
ஸ்பெஷல் சீட்.. எப்ப வந்தாலும் இனி இந்த சீட்தான்... “ என்று தமயந்தியை பார்த்து
கண் சிமிட்டி சிரித்தான் ரிஷி...
அவளும் மெல்ல வெட்கபட்டு தன் கணவன்
கையை பிடித்து கொண்டு அவன் தோளில் உரிமையாக சாய்ந்து கொள்ள,
அதை கண்ட ரஜிதா தமயந்தியை பொறாமையுடனும் ரிஷியை ஒருவித ஏக்கத்துடனும் பார்த்தவாறு
நகர்ந்து சென்றாள்..
விமானம் மேலே பறக்க ஆரம்பித்ததும் அன்று
பரபரப்பாக வெளியில் வேடிக்கை பார்த்த மாதிரியே அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன்
கை விளாக்குள் தன் கையை விட்டு கொண்டவள்
வெளியில் வேடிக்கை பார்த்து ரசித்தாள் தமயந்தி..
சிறிது நேரம் சென்றதும் விமானம் மேலே
ஏறி முழுவேகத்தில் பறந்து கொண்டிருக்க வெளியில் வானத்தில் மின்னி கொண்டிருந்த
நட்சத்திரங்களை எல்லாம் ஆர்வமாக பார்த்தவள் ஒரு இடம் வந்ததும்
“ரிஷி.... அங்க பாரேன்... நளன் மாமா
அந்த நட்சத்திரமா மாறி நம்மளையே பார்க்கிறான்.. “என்று குதூகளித்தாள்.. அவனும்
குனிந்து அந்த ஜன்னல் வழியாக பார்த்தவன்
“ஹே ஆமாம் தயா... அங்க பார் என்
மாமனார் மாமியார் .. அவங்க கூட நம்மளை பார்த்து சந்தோஷமா சிரிக்கிறாங்க.. “ என்று
அவனும் உற்சாகமாக சொல்ல அவளுள் பெரும்
பரவசம்..
“ஹ்ம்ம் உங்க மாமனார் மாமியார் மட்டுமா? என் மாமனார் மாமியார் கூட அங்க இருக்காங்க பாருங்க... அவங்க பேரனை
கூட்டிட்டு வரலைனு கோபமா மூஞ்சை திருப்பிகிட்டாங்க பார்.. “ என்று கண் சிமிட்டி
சிரித்தாள்...
“நான் தான் நளன் குட்டியையும் நம்ம கூட
கூட்டிட்டு வரலாம்னு சொன்னேன்.. கடைசியில் அம்மா அவனை புடிச்சு
வச்சுக்கிட்டாங்களே.. தயா.. நம்மளை விட்டு குட்டி இருந்துப்பானா? நம்மளை தேட மாட்டானே.. “ என்று நூறாவது முறையாக தமயந்தியிடம்
புலம்பி கொண்டிருந்தான் ரிஷி...
தன் மகன் மீதான ரிஷியின் பாசத்தை கண்டு
அவளும் உருகி போனாள்..
குழந்தை பிறக்கும் வரைக்கும் என் மாமா
என்று ஆர்வமாக இருந்தவள் குழந்தை பிறந்ததும் ஒரு நிம்மதி மூச்சு.. அவள் மாமா ஆசையை
நிறைவேற்றி விட்ட திருப்தி..
என்னதான் அவனை தூக்கி வச்சு
கொஞ்சினாலும் ரிஷி அளவுக்கு அவனை பார்த்து கொண்டதில்லை..
இரவு நேரங்களில் அவனுக்கு டைபர்
மாற்றுவது,
அழுதால் அவளை எழுப்பி பால் குடிக்க வைப்பது சில நேரங்களில் அவள் அசந்து
உறங்கி கொண்டிருந்தாள் அவனாகவே பவுடர் பாலை கலந்து புகட்டுவது என்று தன் மகனை அப்படி
தாங்கி கொண்டான்...
அதை கண்டு தமயந்திக்கே ஆச்சர்யமாக
இருந்தது...
அதுவும் இந்த லண்டன் ட்ரிப் ஐ ப்ளான்
பண்ண அவனுக்கு மனசே இல்லை.. கண்ணம்மா தான் அவர்கள் திருமணம் முடிந்ததும் தமயந்தி
ரிஷியிடம் ஒட்டாமல் இருந்ததும் அடுத்து நளன் பிறந்துவிட,
இருவருக்கும் தனிமை கிடைக்காமலயே போய்விட்டது..
அதனால் இப்பொழுது நளன் வளர்ந்து இருக்க, இருவரையும் மட்டும்
எங்கயாவது சுற்றுலா மாதிரி சென்று வர சொன்னார்.. ரிஷி அனைவருமே கிளம்பலாம்
என்று சொல்ல கண்ணம்மா மறுத்துவிட்டார்..
அவர் அடம்பிடிக்கவும் அதை தட்ட முடியாமல்
எங்கே போகலாம் என்று தயாவிடம் கேட்க அவளோ “லண்டன் போகலாம்.. “ என்றாள் கண் சிமிட்டி..
அதை கேட்டு திடுக்கிட்டான்... சென்ற முறை
அந்த விமானத்தில் அவள் தவித்த தவிப்பு அவன் அறிந்ததே.. மீண்டும் அவளுக்கு நளன்
இறந்த ஞாபகம் வந்து தவித்து போனால் என்ன
செய்வது என்று கலக்கமாக இருந்தது..
அதனால் லண்டன் வேண்டாம்.. வேற
எங்கயாவது போகலாம் என்று சொல்ல அவள் ஒத்துகொள்ளவில்லை.. லண்டன் தான் போகவேண்டும்
என்று அடம்பிடித்து கிளமிபி இருந்தாள்..
நளன் குட்டியையும் அழைத்து செல்ல
ஏற்பாடு செய்திருக்க, கடைசி நேரத்தில் கண்ணம்மா தன் பேரனை
பிடித்து வைத்து கொண்டு விடமாட்டேன் என்க அவனும் பாட்டி உடனே இருக்கிறேன் என்று
அவன் அப்பா அம்மாவுக்கு டாட்டா காட்ட வேற வழியில்லாமல் மனமே இல்லாமல் தன் மகனை
விட்டுவிட்டு வந்திருந்தான் ரிஷி..
விமானம் ஏறும் வரை தன் மகனை பற்றிய
தவிப்பு என்றால் விமானத்தில் ஏறிய பிறகு தன் மகனை விடுத்து மனைவி பற்றிய தவிப்பு
அதிகமானது அவனுக்கு..
இந்த பயணத்தை அவள் எப்படி எடுத்து
கொள்வாளோ? மீண்டும் அவளுக்கு பழைய ஞாபகம் வந்து அவளை
வதைக்குமோ என்று அஞ்சியவாறு அவளையே கண்காணித்து வர,
அவளோ வெகு இயல்பாய் நட்சத்திரங்களை காட்டி பேசவும் பெரும் நிம்மதியாக இருந்தது..
அவளிடம் வந்திருந்த அந்த பெரிய மாற்றம்
அவனுக்குள் பெரும் நிம்மதியை கொடுத்து இருந்தது... நளனை பற்றி பேசும்பொழுதெல்லாம்
அவளுள் இருந்த தவிப்பு மறைந்து இப்பொழுது இயல்பாகி இருந்தாள்...
கூடவே அவனையும் நளனாக பார்க்காமல்
இப்பொழுதெல்லாம் ரிஷியாக பார்ப்பதும் அவனுக்கு புரிய,
இன்னுமாய் மகிழ்ச்சி ஊற்று அவன் உள்ளே.. எப்படியோ தன் ரோஜா பொண்ணு மீண்டுவிட்டாள்
என்று மகிழ்ந்து போனான்..
லண்டன் இமிக்ரேஷன்...
அதே இமிக்ரேஷன் ஆபிசர் ஜேம்ஸ் முன்னே இருவரும்
நின்றிருந்தனர்...
இப்பொழுதும் அவள் உடல் லேசாக நடுங்க
அவளை தன்னுடன் சேர்த்து மெல்ல
அணைத்திருந்தான் ரிஷி..
ஜேம்ஸ் அவர்கள் இருவரையும் பார்த்து அடையாளம்
கண்டு கொண்டு புன்னகைத்து
“வெல்கம் டு லண்டன் மிஸ்டர் ரிஷி.. “
என்று புன்னகைத்தவன்
“மேடம்... உங்க பாஸ்போர்ட் ப்ளீஸ்... “
என்க தமயந்தியோ நடுக்கத்துடன் தன் பாஸ்போர்ட் ஐ கொடுக்க,
நல்லவேளை இந்த முறை அட்ரஸ் மாற்றுவதற்கும் ரிஷியின் பெயரை கணவனாக அதில் சேர்ப்பதற்கும்
வேற ஒரு புது பாஸ்போர்ட் வாங்கி இருக்க அதில் அவளுடைய புது புகைப்படம் இருக்க
முன்பு அவர் பார்த்த போட்டோ இல்லை என்று சமாளித்து விடலாம் என்ற நிம்மதி அவள்
உள்ளே..
இல்லை என்றால் முன்பு ரோஜா பாஸ்போர்ட்
ஐ அல்லவா காட்டி சென்றிருந்தாள்.. இவர் பாட்டுக்கு அதை ஞாபகம் வைத்திருந்தால் இப்பொழுது
மாட்டி கொள்வேனே என்று எங்கெங்கோ ஓடியது அவள் பயகுதிரை..
ஆனால் அவள் பாஸ்போர்ட் ஐ இப்பொழுது
மாற்றிவிட்டதால் பிரச்சனை இல்லை என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவள் தன் நடுக்கத்தை
மறைத்து கொண்டு ஜேம்ஸ் ஐ பார்த்து நட்புடன் புன்னகைத்தவாறு ரிஷியை ஒட்டி நின்று
கொண்டாள்..
அவளுடைய கைரேகை யை எடுத்து கொண்டவன்
“வாவ்.... இந்த முறை எல்லாம் கரெக்ட் ஆ
மேச் ஆகுது..வெரி குட்.. “ என்று புன்னகைத்தவன் தமயந்தியை பார்த்து
“என்ன விசயமா லண்டன் வர்றீங்க? “ என்று கேட்க ரிஷி முந்தி
கொண்டு
“ஹனிமூன் மிஸ்டர் ஜேம்ஸ்.. “ என்று
சிரித்தான்...
“ஹனிமூன் ஆ?
அப்ப அன்று வந்தது ? “ என்றான் கண்கள் இடுங்க..
அப்பொழுதுதான் ரிஷி தான் உளறியது உறைத்தது.. அன்றும் ஹனிமூன் என்று
சொல்லித்தான் சென்றிருந்தான்...உடனே அவசரமாக சமாளித்து கொண்டவன்
“அது வந்து.. அது பர்ஸ்ட் ஹனிமூன்..
இது செகண்ட் ஹனிமூன்.. “ என்று குறும்பாக கண்
சிமிட்டி சிரித்தான்.. தமயந்திக்கோ வெட்கமாகி விட அவள் கன்னங்கள் சிவந்து போக, அவளின் வெட்கத்தை ரசித்த ஜேம்ஸ்
“இந்த மாதிரி அழகான வைப் இருந்தால்
எத்தனை முறை வேண்டுமானாலும் ஹனிமூன் கொண்டாடலாம் யெங் மேன்.. ஹேப்பி ஹனிமூன் டேஸ்..
என்ஜாய் யுவர் டேஸ் அட் லண்டன்.. “ என்று புன்னகைத்து கை குலுக்கினான்...
தமயந்தியோ அப்பாடா நான் பாஸாகிட்டேன்
என்று உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்..
லண்டன் ரிஷி வீடு...
அந்த இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் வெளியில் பனி கொட்டி கொண்டிருக்க, ஜீரோ டிகிரிக்கும் குறைவான சில்லிட்டிருந்த க்ளேமேட்டில் தன் கணவன்
மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திருந்தாள் தமயந்தி...
ரிஷிக்கு என்றே அவன் தந்தை பிரத்யேகமாக
வடிவமைத்திருந்த அறை அது... படுத்தாலே உள்வாங்கி கொள்ளும் பஞ்சு மெத்தையில்
வெளியில் உறைந்து போகும் அளவுக்கு பனி கொட்டி கொண்டிருந்தாலும் அறைக்கு உள்ளே
கதகதப்பாக இருக்குமாறு வடிவமைக்க பட்டிருந்த அந்த பிரம்மாண்டமான அறையில் இருந்தனர்
இருவரும்...
அவளுக்கு இந்த மாதிரி க்ளைமேட் முதல்
முறை என்பதால் அறையில் கணப்பை ஏற்றி இருந்தபொழுதும் லேசாக நடுங்க தன் கணவன் உடலோடு
ஒட்டி கொண்டு அவன் மஞ்சத்தில் தஞ்சம்
புகுந்திருந்தவள் அவன் மீசையை பிடித்து இழுத்து விளையாடியவாறே
“ரிஷி மாமா....... “ என்றாள் அவன்
காதில் கிசுகிசுத்தவாறு..
“என்னடா ? “ என்றான் அதே மயிலிறகாய் வருடும் மென்குரலில்...
அவன் கைகளோ தன் அலைபேசியில் அவசரமாக ஏதோ
ஒரு முக்கிய விவரத்தை விஷ்ணுக்கு அனுப்பி கொண்டிருந்தது..
“அடுத்த ஜென்மத்தில் நீங்க என்னவா
பிறக்கணும்? உங்களுக்கு என்ன ஆசை? “ என்றாள் அவன் முகத்தை ஆராய்ந்தவாறு...
அப்பொழுது அவன் அனுப்ப வேண்டிய
விவரத்தை விஷ்ணுவுக்கு அனுப்பி முடித்தவன் தன் அலைபேசியை அணைத்து வைத்து விட்டு
அவள் புறம் பார்த்தவன்
“ம்ம்ம் ஆசைனா ?
“ என்று ஒரு நொடி யோசித்தவன்
“சின்ன ஆசை இல்ல.. பெரிய ஆசை டீ..அடுத்த
ஜென்மத்தில் நான் நளனாக பிறந்து உன்னை நளன் காதலித்த மாதிரி திகட்ட திகட்ட
காதலிக்கணும்.. “ என்று குறும்பாக கண்
சிமிட்டி அவளின் கொழுகொழு கன்னத்தை இதமாக வருடினான்...
“ம்ஹூம் இல்ல.. நீங்க ரிஷியாவே
இருங்க... “ என்றாள் அவசரமாக..
“ஏன்டா...? ரிஷி பாதியில் தான வந்தான்.. ஆனால் நளன்தான
உன்னை சின்ன வயசுல இருந்தே காதலித்தான்.. அதனால் தான் நளன் மாதிரி உன்னை சிறுவயதில்
இருந்தே பார்த்து பார்த்து லவ் பண்ணனும்.. “ என்றான் மீண்டும் கண் சிமிட்டி
மந்தகாச புன்னகையுடன்...
“சரி.. நீ சொல்லு.. உனக்கு நளன் பிடிக்குமா ரிஷி பிடிக்குமா? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...
அதை கேட்டு அவள் முகம் வாடிப்போக அதை
தாங்க முடியாதவனாய்
“ஓ...சாரி டா... உன் மனசை
கஷ்டபடுத்திட்டனா? நான் அப்படி கேட்டிருக்க கூடாது...
ரியலி சாரி...” என்றான் வருத்தத்துடன்...
“ப்ச்... அதெல்லாம் ஒன்னுமில்லை... உங்களுக்கு
வலது கண் பிடிக்குமா இடது கண் பிடிக்குமானா என்ன சொல்விங்க?
அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா னா என்ன சொல்விங்க?
அது மாதிரிதான் எனக்கு இரண்டு பேருமே பிடிக்கும்…. ஆனால் அதுலயும் உங்க காதல் தான் க்ரேட் ரிஷி.. “ என்றாள்
தழுதழுத்தவாறு..
“என்னடா சொல்ற? “
என்றான் குழப்பத்துடன்.. அவளுக்கு எப்பவுமே நளனைத்தானே பிடிக்கும்.. ஆனால் இப்ப
இப்படி சொல்கிறாளே என்று யோசனையாக பார்க்க
“ஹ்ம்ம்ம் ஆமாம் ரிஷி.. நளன்
மாமாவுக்கு சின்ன வயசுலயே என் அம்மா நான் தான் பொண்டாட்டினு சொல்லி வச்சுட்டாங்க..
அதனால அதை மனசுல வச்சுகிட்டு அதுக்காகவே வளர்ந்தான்...
அவனுக்கு சொந்த விருப்பம் இல்லாமலயே
திணிக்கபட்டதுனு கூட சொல்லலாம்.. நான் அவனோட அத்த பொண்ணுனு வந்த பாசம் அதையே அவன் காதலா
சின்ன வயசுல இருந்து மனசுல பதிச்சு வச்சுகிட்டான்.
ஆனால் நீங்க?
உங்களுக்கு அப்படி யாரும் திணிக்கலையே.. உங்களுக்கு என்னை விட எத்தனையோ பெரிய
இடத்துல அழகான பொண்ணுங்களை சூஸ் பண்ற சான்ஸ் இருந்தும் என்னைய மட்டும்
காதலித்தது.. எனக்காக நீங்க பண்ணின தியாகம்.. சான்சே இல்ல ரிஷி..
கட்டின பொண்டாட்டி வேற ஒருத்தன்
நினைப்புல அவனிடமே வேற ஒருத்தனை பற்றி புலம்ப உங்களுக்கு அப்ப எல்லாம் என்னமாய்
இருந்திருக்கும்? நீங்க அதை எல்லாம் சகிச்சுகிட்டு
எனக்காக என் நலனுக்காக அதை எல்லாம் தாங்கி கொண்டு எனக்கு துணையா நின்னிங்க பாருங்க..
அது நீங்க என் மேல வச்சிருந்த காதல்னால
தான்... அந்த காதலுக்கு முன்னால் வேற எதுவும் பெருசு இல்ல ரிஷி... இப்படி ஒரு
கணவன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்..
அடுத்த ஜென்மம் னு ஒன்னு இருந்தால்
நான் இதே தமயந்தியாவே பொறக்கணும்.. நீங்களும் ரிஷியாவே இருக்கணும்.. நான் உங்களை
திகட்ட திகட்ட லவ் பண்ணனும்...ஐ லவ் யூ ரிஷி...
லவ் யூ சோ மச்.. “ என்று அவன்
மஞ்சத்தில் முத்தமிட்டாள்..
அதை கண்டு உருகி போனவன் இந்த உலகத்தையே
வென்றுவிட்ட பெருமிதம் அவன் முகத்தில்.. வானத்தையே வசபடுத்திவிட்ட பெருமை...
தன் சிறுவயதில் இருந்தே அவளை உருகி
உருகி காதலித்த அவள் மாமனை விட என் காதலை பெரிதாக சொல்கிறாள் என்றால் இதைவிட வேற
என்ன சாதிக்க முடியும்...
தன் உயிரானவள் தன்னையே அவள் உயிராகவும்
பாவிப்பதாக சொல்ல இதை விட ஒரு கணவனுக்கு என்ன வேண்டும்..உள்ளம் பூரிக்க
“ரொம்ப தேங்க்ஸ் டீ பொண்டாட்டி.. லவ்
யூ. லவ் யூ சோ சோ சோ மச்.. “ என்று அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான்...
சிறிது நேரம் இருவருமே அந்த மோன நிலையில் இருக்க,
மெல்ல விழி உயர்த்தி அவனை பார்த்தவள்
“ரிஷி மாமா... உங்களுக்கு உங்க அம்மானா
ரொம்ப பிடிக்கும் தான? “ என்றாள்..
இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாமல் இதை
கேட்கிறாள் என்று யோசித்தவன்
“ஆமாம் டா.... அம்மாவை பிடிக்காம
இருக்கு மா ? ‘
என்றான் அவள் காது மடலை வருடியவாறு..
“அப்பனா உங்க அம்மா எனக்கு குழந்தையா
வரணும்.. எனக்கு இன்னொரு குழந்தை வேணும்.. “ என்றாள் தலை சரித்து மையலுடன் அவனை
பார்த்தவாறு..
அதை கேட்டு உள்ளுக்குள் சிரித்து
கொண்டவன் வழக்கம் போல அவளை சீண்ட எண்ணி
“ஹே... அதான் கண்ணம்மா அம்மா
இருக்காங்க இல்ல.. நமக்கு நளன் குட்டி மட்டும் போதும் டா... “ என்று அவளை சீண்ட
“இல்ல.. எனக்கு என் கஸ்தூரி மாமியார்
மகளா வரணும்.. அவங்களை நான் நேர்ல பார்த்ததில்லை இல்ல.. அதனால் அவங்க எனக்கு மகளா
பொறக்கணும்..” என்றாள் அவனை செல்லமாக முறைத்தவாறு..
“அடியேய்.. அப்பனா அடுத்து உன் அப்பா
அம்மா வேணும்னு சொல்லுவ.. அப்புறம் உன் பெரிய மாமா தங்கராசு, உன் ஆயா எல்லாம் திரும்ப வேணும்னு கேட்ப.. இதெல்லாம்
வேலைக்கு ஆகாது.. நீ ஒரு தரம் கஷ்டபட்டது போதும்..
செத்து பொழச்சேன் அப்பயே.. அந்த விஷ
பரிட்சை எனக்கு வேண்டவே வெண்டாம் தாயே.. நமக்கு நளன் குட்டி மட்டும் போதும்..என்னை
விட்டுடு..” என்று இரு கரம் குவித்து அவளிடம் பெரிய கும்பிடு போட்டான் ரிஷி..
அதை கண்டு, அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை காதலை கண்டு இன்னுமாய் உருகியவள்
“ஹீ ஹீ ஹீ ரிஷி மாமா... நீ
கொடுக்காட்டி போ.. நானே எடுத்துக்கறேன்.. “ என்றவள் அடுத்த நொடி அவன் மீது
பாய்ந்து அவன் இதழை சிறை பிடித்தாள்..
நான்கு வருடம் முன்பு இருந்த அதே வேகம்
இப்பொழுது அளிடத்தில்.. அதில், அவள் முத்தத்தில் சிலிர்த்தவன் கைகள் தானாக
உயர்ந்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன் தாபத்துடன் அவளின் ஆசையை
நிறைவேற்ற ஆரம்பித்தான்....
பல இன்னல்களுக்கு பிறகு தங்கள் காதலை உணர்ந்து
ஒருவருக்குள் ஒருவர் கலந்து உருகும் இந்த இரு உயிர்களும் இன்று போல என்றும்
நிறைவற்ற மகிழ்ச்சியுடனும் குறைவற்ற காதலுடனும் வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.....
********** சுபம்*********
மீண்டும் ஒரு சுவாரஸ்யமான காதல் கதையுடன் விரைவில் சந்திக்கலாம். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி.!
அத்தியாயம்-53 | < |
Super love story ma...
ReplyDelete