உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-20
அத்தியாயம்-20 டி ன்னர் ஆரம்பமாகியது.. பப்பே முறையில் இருந்ததால், ஆதித்யா தன் உணவை எடுத்து கொண்டு ஒரு முக்கியமான நபருடன் பேசிகொண்டிருந்தான்.. அவர் விலகியதும் இதுவரை தனியாக மாட்டாமல் நழுவி வந்தவன் கிடைக்கவும் அவனை சுற்றிலும் பெண்கள் கூட்டம் அவனை சூழ்ந்தனர்..அனைவரும் அவனுடன் வழிந்து கொண்டிருந்தனர்.. என்றும் இல்லாமல் ஆதித்யாவும் இன்று அனைவருடனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் பவித்ராவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே... பவித்ரா மட்டும் தனித்து இருந்தாள்..அவனை கண்டு கொள்ளாமல் தானும் தன் உணவை எடுத்துக் கொண்டு சென்று தனியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. “ஹாய் சிஸ்டர்.. ஹவ் ஆர் யூ ??? “ என்று புன்னகைத்தவாறு ப்ரேம் அவளின் அருகில் வந்தான்.. “ஹாய்... வாங்க ப்ரதர்.. ஐம் பைன் அன்ட் யூ?? “ என்று அவளும் புன்னகைத்தாள்... “ஹ்ம்ம்ம் பைன் சிஸ்டர்... “ என்று சிரித்தான் “என்ன ப்ரதர்?? .. கரெக்டா உங்க டைம்க்கு வந்திருக்கீங்க.. “ என்றாள் குறும்பாக முதலில் முழித்தாலும் பின் அவள் தான் சாப்பாட்டு நேரத்துக்கு வந்ததை சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவன் “ஹீ ஹீ ஹீ.. இந்த மாதிரி பா...