உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-22
அத்தியாயம்- 22 ஆ தியின் மார்பில் சாய்ந்து நன்றாக உறங்கிய பவித்ராவை அப்படியே கையில் அள்ளி கொண்டான் .. அவளின் மென்மையான பூப்போன்ற மேனியின் மென்மையில் தன் கட்டுபாட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது அவன் மனம்... எப்பவும் வேகமாக எட்டி வைத்து நடப்பவன் இன்று அவளை சுமக்கும் அந்த சுகத்தை இழக்க மனமின்றி மெதுவாக மிகவும் மெதுவாக நடந்தான் அவளை ரசித்துக்கொண்டே... அப்படியும் அவன் அறை வந்திருந்தது... “அதுக்குள்ள அறை வந்திருச்சா ?? “ என்ற ஏமாற்றத்துடன் அறைக்குள் சென்றவன் நேராக அவனின் படுக்கைக்கு சென்றான்...அவளை அப்படியே கட்டிக்கொண்டு அவனுடனே கட்டிலில் தூங்க வைக்க ஆசைதான்.. ஆனால் அவள் எழுந்தால் சாமி ஆடிடுவா என்று தன்னை கட்டு படுத்திக்கொண்டவன் திரும்பி வந்து அவளை அந்த பெரிய ஷோபாவில் கிடத்தினான் மனமே இல்லாமல் .. மெல்ல உறுத்தும் நகைகளை மட்டும் கழட்டி வைத்தான்.. குழந்தை போல உறங்கும் அவளின் முகத்தை நெருக்கத்தில் காணும் பொழுது அவனுக்கு சத்திய சோதனையாக இருந்தது... இருந்தும் சமாளித்துக்கொண்டு அவள் மேல் போர்வைய...