காந்தமடி நான் உனக்கு!!-31
அத்தியாயம்-31 கா லதேவன் காலில் சக்கரத்தை கட்டியது போல வேகமாக சுழன்று கொண்டிருந்தான். மேலும் ஒரு மாதம் கடந்திருக்க , அமுதன் அவனுடைய மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பிப்பதில் படு பிஸியாகி போனான். இப்பொழுது கிட்டதட்ட அதனுடைய எல்லா ஃபார்மாலிட்டீஸ் ம் முடிந்திருக்க , அடுத்த வாரத்தில் அதன் திறப்பு விழா என்றிருந்தது. விழாவிற்காக அவனுடைய பெற்றோர்கள் மும்பையிலிருந்து இங்கே வர இருக்கிறார்கள். தன்னுடைய தொழிலில் அடுத்த பகுதியை , புதிய துறையை தென்னிந்தியாவில் ஆரம்பிக்க இருக்கிறான் அமுதன். இது அவனுடைய கனவு ப்ராஜெக்ட். இதுவரை அவன் தந்தை கால் பதித்திராத துறை ஐ.டி துறை. அவருக்கு அதில் அவ்வளவாக பிடித்தம் இல்லாததால் இந்த பக்கம் பார்க்காமல் இருந்தார். ஆனால் அமுதன் அப்படியில்லையே. அவனுக்கு இந்த துறையிலும் ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் க்கு நல்ல பெயர் இருக்கவேண்டும் என்று எண்ணினான். அதனால்தான் ஐ.டி நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டு , அதையும் தென்னிந்தியாவை தேர்வு செய்து , அதிலும் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு தன் நிறுவனத்தை தொடங்க இருந்தான...