காந்தமடி நான் உனக்கு!!-37
அத்தியாயம்-37 இ ருவரும் தங்களை மறந்து வேற ஒரு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க , அந்த நேரம் பூஜை வேளை கரடியாய் யாரோ அந்த அறையை நோக்கி வருவது தெரிய , முதலில் சுதாரித்து கொண்டாள் சத்யா. அப்பொழுதுதான் அவர்கள் இருவரும் இருக்கும் கோலம் புரிய , உடனே அவன் மடியில் இருந்து துள்ளி குதித்து எழுந்து , தள்ளி நின்றவள் அவசரமாய் தன் ஆடையை சரி செய்து கொண்டாள்.. அதே நேரம் கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே வந்தான் ராகேஷ். அமுதன் மட்டும் இருப்பான் என்று வந்தவன் உள்ளே சத்யாவும் இருக்க கண்டு ஒரு நொடி ஆச்சர்யத்தில் அவன் புருவம் ஏறி இறங்கியது. அதோடு சத்யா அவசரமாய் தன் புடவையை நீவி விட்டு கொள்ள , அமுதனும் எழுந்து நின்று கொண்டு தன் ப்ளேஸரை நீவி விட்டு கொண்டிருந்தான். இருவர் முகத்திலுமே பிஞ்ச் நிற வெட்கம் படர்ந்து இருக்க , அதை புரிந்து கொண்ட ராகேஷ் “என்ன பாஸ்.. சூப்பரா ரெப்ரெஸ் ஆகிட்டிங்க போல. சற்று முன்னால் உங்கள் முகத்தில் தெரிந்த களைப்பு கொஞ்சம் கூட இல்லையே....” என்று விஷமமாக சிரித்தான். “யெஸ்...யெஸ் ராக்கி. ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் நௌ. சது ஒரு ஜூஸ் கொடுத்தா... ப்ப்ப்பா என்ன ஒரு எனர்ஜி...” எ...