காந்தமடி நான் உனக்கு-41
அத்தியாயம்-41 அ முதன் மீதான தன் காதலை முழுமையாக உணர்ந்து கொண்ட சத்யா , அவனை மணக்க சம்மதம் என்று உற்சாகத்துடன் சொல்லி வைக்க , அதைக் கேட்கத்தான் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவளின் அலைபேசி பேட்டரி இல்லாமல் உறக்கத்திற்கு சென்றுவிட்டிருக்க , அதைக்கண்டு டென்ஷன் ஆனவள் , அதை விசிறி எறிய , மீதி உயிரையும் விட்டிருந்தது அந்த வாயில்லா ஜீவன். அதை கண்டு ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள் சத்யா. ஆனால் அடுத்த நொடி அவள் மனம் பரபரப்பானது. “இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும்...இது நடக்கக் கூடாது...” என்றவள் , இப்பொழுது அமுதனை அழைத்து தன் முடிவை சொல்ல வழி இல்லாமல் போய்விட , அதோடு நேரமும் இல்லாததால் , அவளாகவே நேரிலேயே சென்று விடலாம் என்று முடிவு செய்தவள் அவசரமாய் குளியலறைக்குள் ஓடி , பரபரப்புடன் தன் முகத்தை கழுவிக் கொண்டு , வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள் சத்யா அவசரத்தில் செருப்பைக் கூட சரியாக மாட்டாமால் வேற வேற ஜோடியில் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டு , தலைதெறிக்க வாசலுக்கு ஓடி வர , இங்கிருந்து எப்படி செல்வது என்று அடுத்த ...