நிலவே என்னிடம் நெருங்காதே!!-2
இந்த நாவல் ஆடியோ நாவலாக என்னுடைய சேனலில் வெளிவந்துள்ளது. இந்த கதையை ஆடியோ வடிவில் இனிய குரலில் கேட்டு மகிழ, என்னுடைய சேனலை கிளிக் பண்ணுங்க...அப்படியே மறக்காமல் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க...! அடுத்த அத்தியாயத்தில் விரைவில் சந்திக்கலாம்...நன்றி!!! https://www.youtube.com/channel/UCEYI0t-vckRAOhGYxxEf7nQ அத்தியாயம்-2 அ தே நேரம் காரின் முன்னால் டேஸ்போர்டில் வைத்திருந்த அவனுடைய ஐபோன் அழைத்தது அவனை.. அதை பார்க்காமலயே அழைப்பது யாரென்று தெரிந்தது.. “சே.. ஸ்பீக் ஆப் தி டெவில் அன்ட் தி டெவில் அப்பியர்ஸ்..” என்ற மாதிரி இந்த டெவிலுக்கு நூறு ஆயுசு... இல்ல...அவர் இருக்கும் தோரணையை பார்த்தால் இன்னும் 150 வருசத்துக்கு கூட வாழ்ந்து என் உயிரை எடுப்பாராக்கும்... “ என்று புலம்பியவன் அந்த அழைப்பை ஏற்காமல் விட்டு விட்டான்.. மீண்டும் விடாமல் அழைக்க , அதில் எரிச்சலானவன் “சே ,, இந்த சனியன அங்கயே விட்டுட்டு வந்திருக்கணும்.... மனுசன் எங்க போனாலும் நிம்மதியா இருக்க விடமாட்டேங்குது .. “ என்று தன் அலைபேசியை முறைத்தவன் அதில் இருந்த பட்டனை அழுத்தி “ஹ்ம்ம்ம்ம் சொல்லுங்க.. “ என்றான் ஆத்திரம் எரிச்சல் கோபம...