நிலவே என்னிடம் நெருங்காதே!!-10
அத்தியாயம்-10 கா லையில் எழுந்ததும் நேற்றைய சம்பவங்கள் கண் முன்னே வர , அதுவும் அவன் கத்தியதற்கு அவள் திமிராக சென்று தரையில் படுத்து கொண்டதும் நினைவு வர , காலையிலயே அவன் உள்ளே கொதிக்க ஆரம்பித்தது... அதனால் தன் காரை எடுத்து கொண்டு கை போன போக்கில் காரை விரட்டிவிட்டு கொஞ்சம் ஆத்திரம் குறைந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தான்.. வீட்டிற்கு உள்ளே வரும்பொழுதே எல்லாரும் உணவு மேஜையில் இருப்பது தெரிந்தது... ஏனோ அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அவனுக்கு பிடிக்கவில்லை.. நேராக தன் அறைக்கு செல்லத்தான் எண்ணி வந்தான்.. ஆனால் டைனிங் ஹாலில் அவள் அமர்ந்து இருக்க அதை கண்டு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது.. அதுவும் அவள் அவன் தாத்தாவின் அருகில் அவன் இடத்தில் அமர்ந்து இருக்க அதை கண்டு பொங்கியவன் நேராக டைனிங் ஹாலுக்கு வந்து கத்த ஆரம்பிக்க அவளும் பயந்து போய் எழுந்து இருக்கை மாற்றி அமர , தன் தாத்தாவுக்கு எதிரான முதல் வெற்றி என உள்ளுக்குள் கொக்கரித்தான் அதிரதன்.. தேவநாதனோ.. “பார்த்தியாடா..!! உன்னை எப்படி இந்த உணவு மேஜைக்கு இழுத்து வந்தேன்.. ஆடற மாட்டை ஆடி கறக்கணும்.. பாடற மாட்டை ...