நிலவே என்னிடம் நெருங்காதே!!-16
அத்தியாயம்-16 இ னிமேல் நீங்க கவனமா இருக்கணும் தாத்தா.. இது உங்களுக்கு வந்திருக்கிற முதல் அட்டாக்... நல்ல வேளையா பக்கத்துல ஆள் இருந்ததனால் உங்கள சரியான நேரத்துக்கு கொண்டு வந்து சேர்க்கவும் எங்களால உங்களை காப்பாற்ற முடிந்தது.. இதுவே இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால்................. ? “ என்று இழுக்க , அதை கேட்டு அருகில் நின்று கொண்டிருந்த அதிரதன் உடல் ஒரு முறை நடுங்கியது.. அவன் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி , வேதனை வந்து போனது.. தன் பேரனின் உடல் இறுகியதையும் அவன் முகத்தில் வந்து போன மாற்றத்தையும் ஓரக்கண்ணால் கண்டு கொண்ட தேவநாதனுக்கு தன் வலியையும் மீறி புன்னகை தவழ்ந்தது உதட்டில் “ஹ்ம்ம்ம் என்னமோ பெருசா முறுக்கிகிட்டு போனான்.. இந்த கிழவனுக்கு ஒன்னுன்ன உடனே விழுந்தடிச்சு ஓடி வந்துட்டானே... பரவாயில்ல.. இன்னும் தாத்தா மேல பாசமாத்தான் இருக்கான்... தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சும்மாவா சொன்னாங்க... இதெல்லாம் அந்த பட்டணத்துக்காரிக்கு தெரிய மாட்டேங்குதே...என் பேரனாக்கும்... “ என்று உள்ளுக்குள் கம்பீரமாக சிரித்து கொண்டவர் தன் மீசையை பெருமையுடன் நீவி விட்டு கொண்டார். ஐ.சி.யூ...