நிலவே என்னிடம் நெருங்காதே!!-24
அத்தியாயம்-24 நி லவினி- தேவநாதனுக்கு சொந்தமான ஜமீனுக்கு உட்பட்ட கிராமங்களில் ஒன்றில் பிறந்தவள்.. அவள் தாத்தா ராமசாமி தேவநாதனுக்கு பள்ளி தோழன்... பள்ளியில் படிக்கும் பொழுது தேவநாதன் தான் ஒரு ஜமீன் வாரிசு என்று பெருமை பாராட்டாமல் எல்லாருடனும் இயல்பாக பழகுவார்.. அப்படித்தான் அவர் வகுப்பு தோழன் ராமசாமி மீது அவருக்கு நட்பு மலர்ந்தது.. சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்தவர்.. பத்தாம் வகுப்புக்கு பிறகு மேல படிக்க வசதி இல்லாமல் ராமசாமி பள்ளியை விட்டுவிட்டார்... ஒரு நாள் தன் நண்பனை காண ராமசாமி வீட்டிற்கு சென்றவர் அவரின் ஏழ்மையை கண்டு மனம் வருந்தி தன் தந்தையிடம் சொல்லி ராமசாமி தந்தை விவசாயம் செய்யும் வகையில் ஒரு சென்ட் நிலத்தை வாங்கி கொடுத்தார்.. ராமசாமியும் தன் நண்பனை கட்டி கொண்டு அவருக்கு நன்றி சொன்னவர் தன் தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டார்.. தேவநாதன் வளர்ந்து ஜமீன் பொறுப்பை ஏற்று கொண்ட பிறகும் தன் பால்ய சிநேகிதனை மறந்துவிடவில்லை.. நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் சென்று ராமசாமியை பார்த்து வருவார்... இருவரும் வளர்ந்து அவர்களுக்கு என குடும்பம் வந்துவிட்ட போதும் அவர்கள் நட்பு தொ...