நிலவே என்னிடம் நெருங்காதே!!-34
நிலவே என்னிடம் நெருங்காதே-ஆடியோ நாவல் https://www.youtube.com/playlist?list=PLmbeESYpIv3tfWSCrqU9cLbc1SqtN7Phk அத்தியாயம்- 34 அ ந்த ஜமீனின் சமையல் அறை பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.. பம்பரமாக சுழன்று எல்லாரையும் பரபரப்பாக வேலை செய்ய வைத்து பெரிய விருந்தை தயாரித்து கொண்டிருந்தாள் அந்த ஜமீனின் புது மருமகள் நிலவினி.... அவள் சொல்லுவதை எல்லாம் கவனத்துடன் கேட்டு கொண்ட சமையல் கார பெண்களும் அதை அப்படியே பின்பற்ற வழக்கமாக அந்த அறையில் இருந்து வரும் ஜமீன் ட்ரெடிசனல் மனம் வராமல் வித்தியாசமான மனம் அந்த பெரிய ஜமீனில் இருந்த அனைவர் நாக்கிலும் எச்சிலை கூட்டியது.. அதுவும் அந்த ஜமீனின் குட்டி இளவரசி யாழிக்கோ சொல்லவே தேவை இல்லை.. சமையல் அறையில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு வித்தியாசமான நறுமணத்திற்கும் அவள் நாக்கு இழுக்க அந்த சமையல் அறைக்கு ஓடி வந்து அந்த பதார்த்தத்தை ருசி பார்த்து விட்டே சென்றாள்.. நிலாவும் சிரித்து கொண்டே அவள் கேட்டதை எல்லாம் அவளுக்கு கொடுக்க , ஒவ்வொரு முறை அவள் அண்ணி அவளுக்கு டேஸ்ட் பண்ண கொடுக்கும் பொழுதும் அதற்கு பரிசாக துள்ளலுடன் தன் அண்ணியின் கன்னத்தில் முத்தமிட்...