நிலவே என்னிடம் நெருங்காதே!!-34

 


நிலவே என்னிடம் நெருங்காதே-ஆடியோ நாவல்

https://www.youtube.com/playlist?list=PLmbeESYpIv3tfWSCrqU9cLbc1SqtN7Phk


அத்தியாயம்-34

ந்த ஜமீனின் சமையல் அறை பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது..

பம்பரமாக சுழன்று எல்லாரையும் பரபரப்பாக வேலை செய்ய வைத்து பெரிய விருந்தை தயாரித்து கொண்டிருந்தாள் அந்த ஜமீனின் புது மருமகள் நிலவினி....

அவள் சொல்லுவதை எல்லாம் கவனத்துடன் கேட்டு கொண்ட சமையல் கார பெண்களும் அதை அப்படியே பின்பற்ற வழக்கமாக அந்த அறையில் இருந்து வரும் ஜமீன் ட்ரெடிசனல் மனம் வராமல் வித்தியாசமான மனம் அந்த பெரிய ஜமீனில் இருந்த அனைவர் நாக்கிலும் எச்சிலை கூட்டியது..

அதுவும் அந்த ஜமீனின் குட்டி இளவரசி யாழிக்கோ சொல்லவே தேவை இல்லை.. சமையல் அறையில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு வித்தியாசமான நறுமணத்திற்கும் அவள்  நாக்கு இழுக்க அந்த சமையல் அறைக்கு ஓடி வந்து அந்த பதார்த்தத்தை ருசி பார்த்து விட்டே சென்றாள்..

நிலாவும் சிரித்து கொண்டே அவள் கேட்டதை எல்லாம் அவளுக்கு கொடுக்க, ஒவ்வொரு முறை அவள் அண்ணி அவளுக்கு டேஸ்ட் பண்ண கொடுக்கும் பொழுதும் அதற்கு பரிசாக துள்ளலுடன்  தன் அண்ணியின் கன்னத்தில் முத்தமிட்டு சென்றாள்..

நிலாவுக்கோ அவளின் அந்த எச்சில் முத்தத்திற்கே இன்னும் வித்தியாசமாக செய்ய வேண்டும் போல இருந்தது...அந்த குட்டியின்  இதழ்கள் அவள் கன்னதில் உரசி மீளும் பொழுதெல்லாம் அது என்னவோ அந்த குட்டியின் அண்ணன் நியாபகம் மறக்காமல் வந்தது....

கூடவே அவனின் அழுத்தமான முரட்டு இதழ்களும் அவள் கன்னம்  வருடி சென்றது...

எத்தனையோ முறை அப்படி எண்ண கூடாது என்று அவள் மனதுக்கு கடிவாளம் இட்ட போதும் அது என்னவோ அவளுக்கு அடங்காத காளையாக தறி கெட்டு ஓடத்தான் செய்தது..

ஒரு கட்டத்திற்கு மேல் வீண் முயற்சி செய்யாமல் அதன் போக்கிலயே விட்டுவிட்டாள்...

அதனால் அந்த குட்டியின் முத்தத்தை  அவளும் ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பித்தாள் நிலா...

ஓரளவுக்கு எல்லா பதார்த்தங்களும் தயாராகி இருக்க, அதை ஒருமுறை சரி பார்த்து திருப்தி பட்டவள் பொன்னியை எல்லாம் எடுத்து வந்து உணவு மேஜையில் வைக்க சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றாள் அவள் தயாராக...

நிலா அறையில் இருக்க அதே நேரம் அந்த ஜமீனின் வாயிலில் அந்த சொகுசு கார் வழுக்கி கொண்டு வந்து நின்றது..காரின் ஓசை கேட்டதும் வரவேற்பறையில் இருந்த அனைவரும் வாயிலுக்கு விரைய, அந்த காரின் கதவை திறந்து கொண்டு துள்ளலுடன் இறங்கினாள் அமுதினி...

அவளை  தொடர்ந்து ஓட்டுநர் இருக்கையில் இருந்த ரஞ்சன் கீழே இறங்க, பின் இருக்கையில் இருந்த அவன் குடும்பத்தினரும் இறங்கி உள்ளே வர தேவநாதன் நெடுமாறன் மற்றும் மனோகரி விரைந்து சென்று அவர்களை வரவேற்றனர்..

அதுவும் தேவநாதனுக்கு தன் பேத்தியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பூரிப்பையும் காண மன நிறைவை கொடுத்தது.. அவர்களை நலம் விசாரித்து வீட்டிற்குள் அழைத்து வந்தனர்..

உள்ளே வந்த அமுதினியின் கண்கள் யாரையோ தேடியது..  உடனே அருகிலிருந்த தாத்தாவிடம்

“தாத்தா....  எங்க உங்க மருமக? “  என்று மிடுக்காக கேட்டாள்..

அதை கேட்டதும் இன்னும் குளிர்ந்து போனார் தேவநாதன்...

அவள் காதலை பிரித்து அவசரமாக அவள் திருமணத்தை நடத்தியதால் அவரிடம் முறைத்து கொண்டு இன்றுவரை அவரை தாத்தா என்று அழைத்ததில்லை அவள்.. ஒரே வீட்டில் இருந்தாலும் அன்பாக அவரை அழைத்ததில்லை..

அப்படி இருந்த தன் பேத்தி இன்று வாய் நிறைய தன்னை தாத்தா என்று அழைக்கவும் அப்படியே உருகிவிட்டார்... ஆனால் அடுத்த நொடி அவள் நிலாவை பற்றி கேட்க அவருக்கு  வருத்தமாக இருந்தது..

அன்று அவள் நிலாவை திட்டி விட்டு சென்றது இன்னும் அவர் கண் முன்னே  இருந்தது.. அன்று அப்படி நிலாவிடம் சவால் விட்டு சென்றவள் இன்று நிலாவை பற்றி கேட்கவும் யோசனையானார்...

“இந்தப் பெண் எதுக்கு வந்ததும் வராததுமாக நிலாவை தேடுகிறாள்.. அவளை மீண்டும் வருத்த போகிறாளோ..?  “  என்று யோசனையாக இருந்தவர்

“உன் அண்ணி மாடியில் இருக்கிறா டா அம்மு... இப்ப வந்திடுவா... அவ மேல கோப படாத.. உன் நல்லதுக்குத்தான்... “ என்று சொல்லி முடிக்கும் முன்னே தன் தாத்தாவை முறைத்தவள் அடுத்த நொடி விறுவிறுவென்று மாடிக்கு ஏறினாள்...

அதைப் பார்த்த பாரிஜாதமும் மனோகரியும்  கண்களால் ஜாடை சொல்லிக் கொண்டு நக்கலாக சிரித்தனர்..

“இந்த முறையும் அந்த ஒன்னும் இல்லாம வந்தவ நன்றாக டோஸ் வாங்க போகிறாள்..வேணும்.. நல்லா வேணும்.. அந்த கிழவனை மயக்கி இந்த ஜமீனுக்கு மருமகளா வந்தா இல்ல... நல்லா அனுபவிக்கட்டும்.. “  என்று உள்ளுக்குள் குரூரமாக சிரித்துக் கொண்டனர்...

தன் வேலையை முடித்து விட்டு அவசரமாக ஒரு குளியலை  போட்டு அதே அவசரத்தில்  ஒரு மைசூர் சில்க் புடவையை எடுத்து கட்டிக் கொண்டு எளிதாக தன் ஒப்பனையை முடித்திருந்தாள் நிலா..  

அப்போது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் அவசரமாக வெளியே வர முயல அதே நேரம் அந்த அறைக்கதவை திறந்துகொண்டு புயலென உள்ளே வந்தாள் அமுதினி..

அவளை கண்டதும் ஒரு நொடி திடுக்கிட்டு திகைத்தாள்  நிலா..

“இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள்?  அன்று விட்டுச்சென்ற மீதியை சொல்லி திட்ட வந்திருக்கிறாளோ? “  என்று அவசரமாக யோசித்தவள் அமுதினியை பார்த்து நட்பாக புன்னகைக்க அவளும் நிலாவை முறைத்தவள் அடுத்த நொடி ஒரு எட்டி முன்னே வைத்து தன் அண்ணியின் அருகில் வந்தவள்  நிலாவை இறுக்கி அணைத்து கொண்டாள்..

தன்னை திட்டப் போகிறாள் என்று எதிர்பார்த்து இருக்க, தன் நாத்தனார் தன்னை கட்டி அணைத்து கொள்ளவும் அதை கண்டு இன்னும் திடுக்கிட்டு திகைத்து போனாள் நிலா..

“தேங்க்ஸ் அண்ணி... ரொம்ப ரொம்ப ரொம்ப  தேங்க்ஸ்.. எனக்கு எப்பேர்பட்ட வாழ்க்கையை மீட்டு  கொடுத்திருக்கீங்க..  என் புருஷன் அருமை தெரியாமல் கண்ணிருந்தும் குருடாய் இவ்வளவு நாட்கள் என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்..

நல்லவேளையாக அதை நான் முழுவதும் தொலைத்து விடாமல் எனக்கு கிடைத்த புதயலை கை நழுவ விடாமல் சரியான நேரத்தில் என்னை மீட்டெடுத்து எனக்கு புது வாழ்வு கொடுத்துட்டீங்க..

நீங்க மட்டும் என்னை புஸ் பண்ணலைனா இன்னுமே கண்ணை மூடிக்கிட்டு தான் இருந்திருப்பேன்... ரொம்ப தேங்க்ஸ் அண்ணி... “  என்று அவளை கட்டிக் கொண்டு தழுதழுக்க நிலாவும் அவள் முதுகை ஆதரவுடன்  வருடிக் கொடுத்தாள் மன நிறைவோடு..

பின் அமுதினி தன் அண்ணியை விட்டு விலகி நிற்க, நிலா  அவள் முகவாயை பிடித்து நிமிர்த்தி அவள் கண்ணுக்குள் பார்த்து

“சந்தோஷமா இருக்கியா அம்மு?  உன்னை எல்லோரும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்களா? “  என்று பாசம் மற்றும் அக்கறையுடன் விசாரிக்க, அவளோ  கன்னங்கள் சிவக்க,  கண்கள் பளிச்சிட,

“ஆமாம் அண்ணி....  ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. மனோ என்னை ரொம்ப நல்லா பாத்துக்கறார்.. என் மாமியார் மாமனார் நாத்தனார் கூட என் மீது ரொம்பவும் பாசமா இருக்கிறாங்க..

நான் இத்தனை நாள் ஒதுங்கி இருந்ததுக்கு கூட எதுவும் சொல்லாமல் பாசமா என்னை அரவணைச்சுகிட்டாங்க...  உங்களுக்கு ஒன்னு தெரியுமா அண்ணி...

நான் அந்த பொறுக்கி ரஞ்சனை முதன் முதலில் தியேட்டரில் பார்த்த அன்று மனோவும் அதே தியேட்டருக்கு வந்திருக்கிறார்.. அந்த தியேட்டரில் என்னை பார்த்த உடனே என்னை காதலிக்க ஆரம்பித்து விட்டாராம்..

அன்று என்னையே தொடர்ந்து வந்திருக்கிறார்.. அந்த பொறுக்கியின் ஆள்  என்னை இடிக்க வரும்பொழுது அவரும் அங்கேதான் இருந்திருக்கிறார்.. அவரும் கோபப்பட்டு  அந்த தடியனை  அடிக்க வரும் முன்னே அந்த பொறுக்கி ரஞ்சன் உள்ளே வந்து விட்டான்..

இல்லையென்றால் அன்று மனோ தான் எனக்கு ஹீரோவாக இருந்திருப்பார்..  எல்லாமே ஸ்மூத்தாக போயிருக்கும்..  ஆனால் இடையில் அந்த பொறுக்கி ரஞ்சன் வந்துவிட என்னென்னமோ ஆகிவிட்டது..  

ஆனாலும் மனோ என்னையே சுத்தி வந்து தாத்தாவிடம் பேசி என்னை கல்யாணம் செய்து கொண்டாராம்.. அப்பவும் என் மனம் மாறும் வரைக்கும் பொறுமையாக இருந்திருக்கிறார்.. அதையெல்லாம் இப்பொழுது தான் என்னிடம் சொன்னார்..  

அதைக்கேட்டதும் எனக்கு அழுகையா வந்துச்சு அண்ணி.. நீங்க அன்று சொன்ன மாதிரி இதுதான் உண்மையான காதல் என்று புரிந்து கொண்டேன்..

அதை புரிய வைத்த உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.. ரொம்ப தேங்கஸ் அண்ணி.. “  என்று தழுதழுத்தவள் எக்கி நிலாவின்  கன்னத்தில் முத்தமிட்டாள்...

நிலாவோ சிலிர்த்து போனாள்... மெல்ல வெட்கபட்டு தலை நிமிர, அங்கு அறை வாயிலில் நின்று கொண்டிருந்தான் அதிரதன்.. அவன் கண்ணில் இருந்தது என்ன? ஒரு மாதிரி பொறாமையோடு அவன் கண்கள் பளபளத்ததை போல தோன்றியது நிலாவுக்கு..

ஆனால் அடுத்த நொடி அது வெறும் கற்பனை என்ற அளவில் தன் முகத்தை இறுக்கி கொண்டவன் அறைக்கு உள்ளே வர, அவன் காலடி ஓசை கேட்டு திரும்பி பார்த்த அமுதினி தன் அண்ணனை கண்டதும் பாய்ந்து சென்று தன் அண்ணனை கட்டி கொண்டாள்..  

அவனும் என் தங்கையே மெல்ல கட்டி அணைத்து அவள் மோவாயை நிமிர்த்தியவன் அவள் கண்ணுக்குள் பார்த்து

“எப்படிடா இருக்க குட்டிமா? உன்னை ரஞ்சன் நல்லா பாத்துக்கறாரா? “  என்று அவள் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தவாறு அக்கறையுடன் விசாரித்தான்..

அவளும்  வெட்கத்துடன் தன் அண்ணனை விட்டு விலகியவள்

“ம்ம்ம் நான் சூப்பரா இருக்கறேன் ணா.... அவர் என்னை நல்லா பாத்துக்கறார்.. வேற வீட்டில் இருக்கிற பீலே இல்ல.. நம்ம வீடு மாதிரியே அங்கயும் என்னை இளவரசி மாதிரிதான் பாத்துக்கிறாங்க..

நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார் உங்க மாப்பிள்ளை.. “  என்று முகத்தில் பொலிவுடன் முகம் பூரிக்க தன் கணவனை பற்றி வெட்கத்துடனும் பூரிப்பு மற்றும் பெருமையுடன் இனிக்க இனிக்க பேசினாள் அமுதினி..  

அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி... இந்த மாதிரி ஒரு மகிழ்ச்சியை பூரிப்பை அவன் தங்கையிடம் இதுவரை பார்த்ததில்லை அவன்..

சில சமயம் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கும் பொழுதும்  அவளுக்கு பிடித்த ஆடைகளை வாங்கிக் கொடுக்கும் பொழுதும்  அவள் கண்கள் பிரகாசிக்கும்.. அவனை கட்டி கொண்டு கன்னத்தில் முத்தமிடுவாள்..

ஆனாலும் இந்த அளவு மகிழ்ச்சியில்லை அது..  இந்த மகிழ்ச்சியைத்  தான் அன்று நிலவினி சொன்னாளோ? என்று யோசித்தவன் பார்வை நிலாவின் பக்கம் செல்ல அவனையே ரசிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நிலாவும் தன் புருவத்தை உயர்த்தி

“பார்த்தீர்களா? இதை..  இதை..  இதைத்தான் சொன்னேன்.. “  என்று ஜாடையாக சொல்லி சிரித்தாள்.. அவனும் ஒரு நொடி அவளின் அந்த சிரிப்பையும் ஆக்சனையும் தன்னையும் மறந்து  ரசித்தாலும் அடுத்த நொடி சமாளித்துக் கொண்டு அவளை லேசாக முறைத்தவாறு தன் பார்வையை மாற்றி கொண்டான்..

மீண்டும் தன் தங்கையை கட்டிக் கொண்டவன்

“எப்பவும் இப்படியே சந்தோஷமா இருடா அம்மு “  என்று மீண்டும் அவள் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தான்..

“சரி வா...  கீழ போகலாம்..  எல்லோரும் காத்திருக்கிறார்கள்.. “  என்று பொதுவாக சொல்லி வெளியில் சென்றான் அதிரதன்..

வீட்டுக்கு உள்ளே வந்ததும் அமுதினி நிலாவை தேடிச் செல்ல அவளைத் திட்டத்தான் போகிறாள் என்று பாரிஜாதமும் மனோகரியும்  ஆவலுடன் மாடியையே பார்த்துக் கொண்டிருக்க மாடியிலிருந்து சிரித்த படி அமுதினி தன் அண்ணியின் கையை பிடித்துக் கொண்டு துள்ளலுடன் இறங்கி வந்து கொண்டிருந்தாள்..  

அதை கண்டதும் இருவருக்கும் காற்று போன பலூனாய் முகம் சுருங்கிவிட்டது..  

“அப்படி திட்டிவிட்டு போன  அம்முவையே  அவள் பக்கம் இழுத்து விட்டாளே  இந்த நிலவினி..  கெட்டிக்காரி தான் போல.. எப்படியோ போகட்டும்.. யாரை வேணா அவள் பக்கம் இழுக்கட்டும்.. ஆனால் என் பேரனை மட்டும் இவளால் அசைக்கக் கூட முடியாது...  

அவன் அந்த தாத்தா கிழவனை போல பிடிவாதக்காரன்.. பார்க்கலாம் அவனை எப்படி அவள் பக்கம் இழுக்கிறாள் என்று.. “  என்று தனக்குள்ளே பொரிந்து முகத்தை நொடித்துக் கொண்டார் பாரிஜாதம்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!