நிலவே என்னிடம் நெருங்காதே!!-32

 


நிலவே என்னிடம் நெருங்காதே-ஆடியோ நாவல்

https://www.youtube.com/playlist?list=PLmbeESYpIv3tfWSCrqU9cLbc1SqtN7Phk

அத்தியாயம்-32

ன்று இரவு நிலவினி தங்கள் அறைக்கு திரும்ப,  அவள் அறையில் நுழைந்ததும் பொரிய ஆரம்பித்தான் அதிரதன்...  

“எதுக்கு இந்த ட்ராமா? “  என்று இடுங்கும் கண்களுடன் அவளை பார்த்து கேட்டான்..

“எ... என்ன து? எது ட்ராமா ? “ என்று அவளும் தெரியாத மாதிரி அவனை திருப்பி கேட்க

“ஹ்ம்ம்ம் கொஞ்ச நேரம் முன்னாடி நீ நடத்துனியே அந்த நாடகம்.. எதற்காக அந்த நாடகம்? “  என்றான்  அதே இடுங்கும்  கண்களுடன்..

அவளும் அவனை நேர் பார்வை பார்த்து

“அது  ஒன்னும் நாடகம் இல்லை... “  என்று சொல்லி முடிக்கும் முன்னே

“போதும்...  நீ சொல்றதை எல்லாம் மற்றவர்கள் கேட்கலாம்..நம்பலாம்.. இந்த அதிரதன்  கேட்க மாட்டான்..  நீ சொன்னியே ஒரு டயலாக்

தாத்தா சொன்னதுக்காகத்தான் நானும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. எனக்கு பாத்திருந்த மாப்பிள்ளை மட்டும் ஓடிப் போகாம இருந்திருந்தா நான் ஏன் இந்த  ஜமீன் ன்ற ஜெயிலுக்கு வந்து இப்படி கஷ்ட படணும்.. என் புருஷனோட சந்தோஷமா இருந்திருப்பேன்.. னு

நானும் கேட்டேன் அதை... அடேங்கப்பா... என்ன நடிப்பு? என்ன நடிப்பு..! 

தேவநாதன் ஜமீன்தார் தான் நடிப்பதிலும் குள்ளநரி திட்டம் போடுவதிலும் கில்லாடி என்று பார்த்தால் அவர் கூட்டி வந்த நீ  அவருக்கும் ஒரு படி மேல போய்ட்ட...  “ என்று உதட்டோரம் வளைத்து நக்கலாக சிரித்தான்..  

அவளுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது.. ஆனாலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலை சரித்து

“புரியலையே... “  என்றாள் யோசனையுடன்..

“ஹா ஹா ஹா உனக்கா புரியல? உனக்கு புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறது எனக்கு  தெரியும் டீ.. “  என்றவன் அதுவரை இலகி இருந்த  முகம் இறுக

“லுக்... அந்த ஜமீன்தார்,  இல்லாத மாப்பிள்ளை ஓடிவிட்டதாக கதை கட்டி என்னை ஏமாற்றி உன் கழுத்தில் தாலி கட்ட வைத்தார்..

நீயோ அதே இல்லாத மாப்பிள்ளையை  உனக்கு பிடித்ததாகவும் அவனை கட்டியிருந்தால்  உன் வாழ்க்கை சந்தோதோதோதோஷமா இருக்கும் என்று சொன்ன பார்.. அதைத்தான் என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை...

அவர் இல்லாத மாப்பிள்ளை ஓட விட்டார் என்றால் நீ இல்லாத மாப்பிள்ளை உடன் சந்தோஷமா குடும்பம் நடத்தியிருப்பேன் னு சொல்ற.... ஹ்ம்ம்ம் சூப்பர்..பொண்ணே..  

இதிலிருந்தே உன் களவானித்தனம் தெரிந்துவிட்டது.. இப்ப சொல் எதற்காக இந்த நாடகம்?  “  என்று மீண்டும் கண்கள் இடுங்க அதட்டினான்...

அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி திடுக்கிட்டாள். அவர்களுடைய அந்த அதிரடி கல்யாண  திட்டம் அவனுக்கு தெரிந்து விட்டது என்று புரிந்தது.. ஆனாலும் அடுத்த நொடி சமாளித்துக் கொண்டவள்  அவனை மாதிரியே நேராக பார்த்து

“என்ன ஜமீன்தாரே.. நீங்கதான் அதி புத்திசாலி ஆச்சே !  உங்களைத்தான்  யாரும் ஏமாற்ற முடியாதே..  அப்படி இருக்க ஏன் இந்த நாடகம் னு  உங்களால கண்டுபிடிக்க முடியலையா என்ன ? “  என்று அவனைப் போலவே நக்கலாக சிரித்து  தோளை குலுக்கினாள்..

அதைக் கேட்டு அவனையும் மீறி ஒரு நொடி திகைத்து போனான் அதிரதன்..

அவன்  அவளுடைய நாடகத்தை தெரிந்துகொண்டதை சொல்லிக் காட்டியும்  அசராமல் அவனை எதிர்கொண்ட அவளின் தைர்யத்தை,  துணிச்சலை கண்டு   அவனையும் மீறி வியக்க வைத்தது..

ஆனாலும் நொடியில் தன் தலையை உலுக்கி கொண்டவன்

“ஹ்ம்ம்ம் தெரியாமல் என்ன?  எல்லாம் அம்முவை அவ  புகுந்த வீட்டுக்கு அனுப்பத்தான? “  என்றான் தன் புருவத்தை உயர்த்தி..

“அடேங்கப்பா ஜமீன்தார் தாத்தா பேரன் னு  ப்ரூவ் பண்ணிட்டீங்க.. கரெக்ட் ஆ சொல்லிட்டிங்க..  சபாஷ்.. “  என்று நக்கலாக சிரித்தாள் நிலா..  

அதைக் கண்டு முறைத்தவன்  

“அவ மேல உனக்கு என்ன கோபம்?  அம்மு ரொம்பவும் சின்ன பொண்ணு.. உன்ன மாதிரி ப்ராட், கேடி கூட எல்லாம் அவள் பழகியதே இல்லை.. யாரையும் எதிர்த்து பேசியதில்லை.. அப்படி இருந்த அவளை எதற்காக அவ புருஷன் வீட்டுக்கு துரத்தனும் னு  நினைக்கிற..? “ என்றான் கண்களிலே அதே வெறுப்புடன்..

“என்ன ஜமீன்தாரே !  இப்பதான் அதிபுத்திசாலி னு சொன்னேன்... அடுத்த நொடியே அது தப்பு நான் ஒரு அடி முட்டாள் னு காட்டி விட்டீர்களே.. “  என்று உதடு வளைத்து நக்கலாக சிரிக்க

“ஏய்... என்னையவா முட்டாள் ன்ற? யாரை பார்த்து அடி முட்டாள் னு  சொல்ற.. நான் மூன்றே வருஷத்தில் என் தொழிலை சொந்தமா ஆரம்பித்து இப்ப எவ்வளவு பெரிய நிலைக்கு என் தொழிலை வளர்த்திருக்கேன் தெரியுமா...

பெரிய பிசினஸ்மேன் தி கிரேட் தேவநாதனே என்கிட்ட ஐடியா கேட்டுத்தான் சில முடிவுகளை எடுப்பார்.. அப்படி இருக்க யாரை பார்த்து முட்டாள் னு சொல்ற.. தொலைத்து விடுவேன்.. ஜாக்கிரதை.. “  என்று உறுமினான்..

அவளும் அதை கண்டு கொள்ளாமல்

“வெல் ஜமீன்தாரே.. தொழில் ல நீங்க பெரிய புலியா இருக்கலாம்.. ஆனால் சொந்த வாழ்க்கையில் அதே மாதிரி புத்திசாலித்தனமா யோசிச்சிருந்தால் தான் இவ்வளவு பிரச்சனையே இல்லையே.. “ என்று திருப்பி கொடுத்தவள்

“ஒரு பொண்ணு கல்யாணமாகி மூணு வருஷம் ஆகியும் புருஷனோட சேர்ந்து இல்லாமல் புருஷனோட ஒட்டாம இருக்கிறா னா அதை பார்த்ததும் முதல்ல  தவிக்கிறது அவளோட அண்ணனா தான் இருக்கணும்..

எப்படியாவது தங்கைக்கு புத்திமதி சொல்லி அவளை அவ புருஷனோட சேர்த்து வச்சிருக்கனும்...  அதை விட்டுவிட்டு எங்க வீட்டு இளவரசி னு செல்லம் கொஞ்சி கிட்டு வீட்டோட வச்சிக்கிடறதுதான்  ஒரு அண்ணனோட கடமையா? “  என்றாள்  முக இறுக்கத்துடன்...

“ஏய்... அவளுக்கு இங்க என்ன குறை? அவள்தான் இங்கே சந்தோஷமா இருக்கிறாளே..  பிறகு எதற்கு அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கணும்? “  என்றான்  ஸ்ருதி இறங்கி..

“ஐயோ ஜமீன்தாரே..  இவ்வளவு வெகுளியா இருக்கீங்களே... காசு பணம் நகைநட்டு நல்ல சாப்பாடு மட்டும் ஒரு பொண்ணுக்கு சந்தோஷத்தை கொடுத்துடாது.. அவ புருஷனோட சேர்ந்து வாழற அந்த சந்தோஷம்தான் அவளுக்கு பெருசு..

நீங்களும் பொண்டாட்டியை மதித்து அவ கூட சந்தோஷமா இருந்திருந்தால் அதை பத்தி எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்... நீங்கதான் கட்டின பொண்டாட்டி இருக்கவே இன்னொருத்தி  கூட போன்லயே குடும்பம்  நடத்தறிங்களே..!  உங்களுக்கு அதை பத்தி எல்லாம் புரிய நியாயம் இல்லை...” 

என்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்..

அதை கேட்டு இறுகியவன்

“ஏய்.. நான் ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி... “ நீ நினைக்கிற மாதிரி தரம் கெட்டவன் அல்ல.. அதெல்லாம் உன்னை வெறுப்பேத்த நடிப்பது.. என்று சொல்ல வந்தவன் அதை சொல்லிவிட்டால் அப்புறம் அவன் நாடகம் புரிந்து விடுமே... அப்புறம் அவளை எப்படி துரத்துவது என்று யோசித்தவன் சொல்ல வந்ததை அப்படியே நிறுத்தி கொண்டான்..

அவளும் நான் அப்படி இல்லை.. நடிக்கிறேன் என்று சொல்லிவிடுவான் என்று ஆவலுடன் அவன் முகம் பார்க்க, அதற்குள் அவன் தன்னை சமாளித்து கொண்டு பாதியில் நிறுத்தி கொள்ளவும் முகம் வாடிப்போனது ஒரு நொடி..

ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டவள்

“என்ன ஜமீன்தாரே..?  சொல்ல வந்ததை முழுவதும் சொல்லாமல் பாதியில் நிறுத்திகிட்டிங்க.. நான் ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி நல்லவன் இல்லனு சொல்ல வந்திங்களா? “ என்று நக்கலாக சிரித்தவள்   

“ஒன்னு தெரிஞ்சுக்கங்க... நீங்க கொடுக்கற சந்தோஷத்தை விட, கூடிய சீக்கிரம் உங்க தங்கச்சி ஆயிரம் மடங்கு  சந்தோஷமா இருப்பா.. அப்ப நான் சொன்னது உண்மைனு புரியும்.. இப்ப படுத்து தூங்குங்க.. குட் நைட். ..” என்றவள் வேகமாக சென்று  அவள் படுக்கையில் படுத்து போர்வையை இழுத்து மூடி கொண்டாள் நிலா..

அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் அதிரதன்..! 

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!