நிலவே என்னிடம் நெருங்காதே-54
அத்தியாயம் -54 போ ர்க்களத்தில் பாய்ந்து செல்லும் தேர்வீரனின் வேகத்தை விட சீறி பாய்ந்து கொண்டிருந்தது அதிரதனின் கார்.. அதை அவ்வளவு வேகத்தில் செலுத்தி கொண்டிருந்தான் அந்த தேர்வீரன்... கைகள் தானாக அந்த காரை இயக்கி கொண்டிருந்தாலும் அவன் உள்ளேயே சொல்ல முடியாத அளவுக்கு எரிச்சலாக இருந்தது.. அவனை நினைத்து அவனுக்கே கோபமாக வந்தது.. அவன் தாத்தாவிடம் செய்து வந்த சபதம் நிறைவேறும் கடைசி நொடியில் அது நிறைவேறாமல் போய்விட்டதை எண்ணி கொதித்தது.. அதுவும் அவர்கள் யாருமே தடையாக இல்லாமல் தானே அதற்கு தடையாக வந்ததை எண்ணி அவன்மீது கோபம் கோபமாக வந்தது.. அத்தனை ஆசையுடனும் தாபத்துடனும் தன் நிலா பொண்ணை அணைக்க முயன்றவனுக்கு எப்படி முடியாமல் போனது ? ஏன் அவன் மனம் அதற்கு ஒத்துழைக்கவில்லை ? என்று ஏதேதோ எண்ணி உள்ளுக்குள் தகித்தபடியே தன் வீட்டை அடைந்திருந்தான்.. அண்ணாநகரில் பிரதானமான பகுதியில் கம்பீரமாக நின்றிருந்தது அவன் சமீபத்தில் வாங்கியிருந்த அந்த சொகுசு பங்களா.. அந்த பங்களாவில் கேட்டின் முன்னே காரை நிறுத்தியவன் அதை நிமிர்ந்து பார்க்க அவனுக்கு பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.. கிட்...