நிலவே என்னிடம் நெருங்காதே-63
இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ். நிலவே என்னிடம் நெருங்காதே..! அத்தியாயம்-63 “ வா வ்.... இந்த போட்டோ செமயா இருக்கு அண்ணி...இல்ல... இது அதைவிட சூப்பரா இருக்கு.. “ என்று ஆர்பரித்தாள் யாழினி.. அடுத்த நாள் காலையில் மணி ஒன்பது அளவில் காலை வேலைகளை முடித்துவிட்டு வரவேற்பறையில் அமர்ந்து இருந்தாள் நிலா... அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த அலைபேசியில் இருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் யாழினி.. மனோகரியும் பாரிஜாதமும் இன்னும் எழுந்திருக்கவில்லை.. நெடுமாறன் இப்பொழுதெல்லாம் அதிகாலை எழுந்து தோட்டத்தில் நடப்பதும் அங்கிருக்கும் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதும் என்று காலை வேளை சுறுசுறு ப் பாக சென்றது அவருக்கு.. இரு பெண்களும் அமர்ந்து இருக்க , அவர்களுக்கு எதிர்பக்கமாக ஜமீன்தார் அமர்ந்து அன்றைய தினசரியை புரட்டி கொண்டிருந்தார்... அதே நேரம் மாடியில் இருந்து அலுவலகம் செல்ல தயாராகி கீழ இறங்கி வந்து கொண்டிருந்தான் அதிரதன...