நிலவே என்னிடம் நெருங்காதே-69(Pre-Final)
அத்தியாயம்-69 ஒரு மாதத்திற்கு பிறகு : அந்த திருமண மண்டபம் களை கட்டியிருந்தது.. அந்த மேடையில் மணமகனாய் முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான் அர்ஜுன்.. அவனருகில் ஒரு ஊன்று கோலை வைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தாள் சாந்தினி.. அவள் கால் வலிக்கும்போதெல்லாம் அவளைத் தாங்கிக் கொண்டவன் அவ்வப்பொழுது அவளை இருக்கையில் அமர வைத்து சற்று ஓய்வு எடுத்த பிறகு அவளை மெல்ல பற்றி எழுப்பி மீண்டும் நிற்க வைத்தான்.. அதை பார்த்த அதிரதனுக்கு ரொம்பவுமே சந்தோஷமாக இருந்தது.. தன்னால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் எதிர்காலம் நேர் ஆகிவிட்டது என்ற நிம்மதி வந்து சேர்ந்தது.. கூடவே அந்த நிம்மதியை கொடுத்த தன் மனையாளை அவன் கண்கள் தேடின.. அந்த மண்டபத்தில் சுறுசுறுப்பாக இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் நிலா.. சா ந்தினி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்த பொழுது அர்ஜுன் உடன் இணைந்து அவளை கவனமாக பார்த்து கொண்டாள் நிலா.. அடுத்த வாரத்திலேயே டிஸ்சார்ஜ் ஆகி இருக்க அவளை கட்டாய படுத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டாள் நிலா.. ஒரு சகோதரியாய் தோழியாய் அன்னையாய் ...