என்னுயிர் கருவாச்சி-43


 

அன்பான வாசகர் தோழமைகளே,

நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் என்னுயிர் கருவாச்சி வரும் சித்திரைத்திருநாளில், அமேசானில் புத்தகமாக வெளி வர இருக்கிறது. 

அதற்கு முன்னால், இந்த கதையை பற்றிய நிறை, குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சிறந்த கருத்துக்கள், புத்தகம் வெளிவரும்பொழுது உங்கள் பெயருடன் வெளியிடப்படும். இன்னும் இந்த கதையை படிக்காதவர்கள், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்..! 

https://padminiselvaraj.blogspot.com/2021/12/ennuyir-karuvachi.html


அத்தியாயம்-43

 

டுத்த பத்தாவது நாள்,  நெல்லம்பயிர் நன்றாக செழித்து வளரும் விதத்தில், அந்த வயலை பதப்படுத்திய பிறகு,  அன்று நாத்து நட ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்று காலையில் அவள் குடும்பமே வந்திருந்தனர்.

நல்ல நேரம் பார்த்து, வயலில் பூஜை செய்து பூங்கொடியை முதன்முதலாக நாத்தை எடுத்து வைக்க சொன்னார் சிலம்பாயி.

பூங்கொடியும் மனதார தெய்வங்களை வேண்டிக் கொண்டாள்.  

முதன்முதலாக அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க அஸ்திவாரமாக இருக்க போவது. இந்த போகம் நல்ல விளைச்சல் வரவேண்டும் என்று மனதார  வேண்டிக்கொண்டே  நாத்தை எடுத்து நட்டு வைத்து ஆரம்பித்தாள்.

சிலம்பாயிம் தன் மகளுக்கு உதவ, வயலில் இறங்கி நாத்து நட, அவள் தங்கை மலர்க்கொடியும் உடன் இணைந்து கொண்டாள். அவளும் இதை பழகி இருந்ததால், தன் அக்காவுக்கு உதவ முதல் ஆளாக வந்து விட்டாள்.  

அன்பரசன் நாத்து முடியை எடுத்துக்கொண்டு வந்து நடுபவர்களுக்கு  கொடுக்க என, அவள்  குடும்பமே அவளுக்காக வயலில் இறங்கி வேலை செய்தனர்.

அதைக்கண்ட  பூங்கொடிக்கு  மனம் நெகிழ்ந்து போனது.

தன் கணவன் சொன்னதுபோல இதுதான் உறவுகளின் இயல்போ? ஆயிரம் பேர் இருந்தாலும்,ஏதாவது உதவி வேண்டும் என்றால், உறவுக்காரர்கள்... அதுவும் தன் பிறந்த வீட்டினர் தான் முதலில் வந்து நிப்பார்கள்.. என்பதை கண் கூடாக பார்த்தாள்.

அவள் அவர்களை எவ்வளவு தூரம் உதாசினபடுத்தினாலும், எரிந்து விழுந்தாலும், முகம் கொடுத்து பேசா விட்டாலும், அவர்கள் அவளுக்காக எல்லாம் பாத்து பாத்து செய்கிறார்கள் தான்.

அதை நினைக்கையில் கண்ணோரம் கரித்தது.

சிலம்பாயிக்கோ தன் மகளை காண ஆச்சரியம்..!

முழங்கால் வரைக்கும் தூக்கி சொருகிய கண்டாங்கி சேலையும், அவளின் நீண்ட ஜடை சேத்தில் விழுந்து விடாமல் இருக்க, அள்ளி முடிந்திருந்த  கொண்டையும், அதை சுற்றி அவள் கட்டியிருந்த மண்டக்காடுமாய் குனிந்து நாத்து நட்டு கொண்டிருந்தாள்.

முழங்காலுக்கு சற்று கீழ் வரை இருந்த சேற்றில் கால் புதைய புதைய கொஞ்சமும் முகம் சுளிக்காமல் லாவகமாக காலை மாத்தி மாத்தி எடுத்து வைத்து அவள் நாத்து நடும் அழகை பார்த்து பெத்தவள் அசந்துதான் போனாள்.

என்னமோ  பலநாள் அந்த சேற்றில் உழல்பவளை போல இயல்பாக நாத்து நட்டு கொண்டிருப்பவளை காண காண ஆச்சர்யம்தான்.  

இதுவே அவர்கள் வயலில் நாத்து நடும்பொழுதெல்லாம் நாத்து நட ஒரு கை குறையுது..நீயும் வாடினு அவளிடம் மல்லு கட்டி, கெஞ்சி கூத்தாடி அவளை வயலுக்கு இழுத்து வருவார் சிலம்பாயி.

அப்படியே வயலுக்கு வந்தாலும்,  அரை நாள் நாத்து நடுவதற்கே தன் அன்னையை திட்டி தீர்த்து விடுவாள் மகள்.

எனக்கு பரிட்சை இருக்கு..படிக்கணும் என்று ஆரம்பித்து, சேத்து வயலை பார்த்து முகம் சுளித்து, இம்புட்டு சேறா? இதுல எப்படி கால் வைக்கிறது...  பூச்சி எதுவும் கடிச்சிடும்... பாரு உன்னால் எனக்கு இங்க சேறாய்டுச்சு..அங்க சேறாய்டுச்சு...” என்று புலம்பி தள்ளுவாள்.

அவளின் புலம்பலை கேட்டு கடுப்பான சிலம்பாயி,

“ஏன்டி..இப்படி சலிச்சுக்கிற? நாளைக்கு நீ கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போனா , அங்க உன் வயல்ல இப்படித்தான்டி நீ வேலை செய்யணும்...”  என்று நக்கலாக சிரிக்க,  

நான் எதுக்கு இந்த வேகாத வெய்யில வெந்து மடியிறவனைப் போய்  கட்டிக்கப் போறேனாம்.

நானெல்லாம் என் அக்கா மாதிரி,  வெய்யில வாடி வதங்காம,  குளு குளு ஏ.சியில  ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்றவனைத்தான் கட்டிக்க போறேன்.

காலையில எட்டு மணிக்கு கிளம்பி ஆபிஸ்க்கு போனால், சாயங்காலம்  ஆறு மணிக்கெல்லாம் டான் னு வந்துடுவார்...அப்படிப்பட்ட புருஷன்தான் எனக்கு வரப்போறான்...”   என்று அங்கலாய்ந்தது நினைவு வந்தது.

அதே மகள்...  இப்பொழுது கொஞ்சமும் முகம் சுளிக்காமல்,  புடவையை வரிந்து கட்டிக் கொண்டு, இந்த  வெய்யிலில் நாத்து நடும்  தன் மகளை காண, அவரின்  கண்களில் நீர் கோர்த்தது.

நானெல்லாம் பெரிய படிப்பு படிச்சு,  நல்ல வேலையில் இருக்கிற மாப்பிள்ளையைத்தான் கட்டிக்குவேன் என்று  சவால் விட்டவள்... இப்படி வேகாத வெய்யிலில் கிடப்பதைக் கண்டு பெற்ற மனம் பதறியது.  

தனக்குத்தான் இப்படி ஆகிவிட்டது...விவசாயக்காரனை கட்டிகிட்டு காலத்துக்கும் இந்த சேத்துல வுழுந்து கெடக்கும் நிலை வந்துடுச்சு... தன் மகள்களாவது நல்ல இடத்தில் வாழ்க்கை பட்டு போவோணும் என்று சிலம்பாயி வேண்டாத நாள் இல்லை.

அவர் வேண்டியதைப் போல   மூத்தவளுக்கு நல்ல இடம்தான் கிடைத்து இருந்தது. அவள் குளுகுளு ஏசியில் ஒத்த புள்ளையை பாத்துகிட்டு ஜம்முனு மகாராணி மாதிரி கால் மீது கால் போட்டுக் கொண்டு தான் குடும்பம் நடத்துகிறாள்.

அவளைப் போல இளையவளும் அவளின் அறிவுக்கும், சுறுசுறுப்புக்கும், நல்ல இடத்தில் வாழ்க்கை பட்டு, வெய்யில் படாமல் இருப்பாள் என்று  எதிர்பார்த்திருக்க, அதற்குள்  என்னென்னமோ நடந்து அவள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று வேதனையாக இருந்தது.  

முந்தானையை இழுத்து தன் மூக்கை உறிஞ்சி கொண்டவர்

“எல்லாம் அந்த கடவுள் விட்ட வழி. என் புள்ள சீக்கிரம் நல்ல நிலைக்கு வந்திடணும்...” என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு  வேலையை தொடர்ந்தார்.  

******

யலின் ஓரமாக வரப்பில் ஆங்காங்கே அதிகமாக,  வரப்பு தாண்டி வளர்ந்திருந்த அருகம்புல்லை மண்வெட்டியால் வெட்டி,  வரப்பை சரி செய்து கொண்டிருந்தாலும், ஓரக்கண்ணால் தன் மனைவியையும் அவ்வபொழுது பார்த்துக் கொண்டிருந்தான் ராசய்யா.

அவனுக்கும் பூங்கொடியை  அப்படி பார்க்க,  மனம் கஷ்டமாகத்தான் இருந்தது

இந்த மாதிரி கஷ்டபட்டு வேலை செய்ய வேண்டாம். இன்னொரு கூலி ஆள் விட்டு நட்டுக்கலாம் என்று அவன் எவ்வளவு தூரம் சொல்லியும்  அவள்  கேட்கவில்லை.  

நம்ம  வயல்ல வேலை செய்ய நான் ஏன் யோசிக்கணும் மாமா?  ஒரு ஆளு கூலி மிச்சமாகுமில்லை.  

கூலியாளுக்கு கொடுக்கிற காசை என்கிட்ட கொடு...இந்த வேலை செய்ய எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை...” என்று புன்னகைக்க,  அவளின் பிடிவாதத்தை  அறிந்தவன்,  அதற்குமேல் சமாளிக்க முடியாமல் அவள் விருப்பத்திற்கே விட்டு விட்டான்.

காலில் சேறு படாமல், உடலில் வெய்யில் படாமல் சொகுசாக வாழணும்னு கனவு கண்டு கொண்டிருந்தவளை,  கொண்டு வந்து,  இப்படி கஷ்ட படுத்தறனே என்று அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

*****

ன்று வெள்ளிக்கிழமை..!

கல்லூரி முடிந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்தவள்,  கொஞ்ச நேரம் படித்துவிட்டு பின் இரவு சமையலை செய்து கொண்டிருந்தாள் பூங்கொடி.  

அன்று பண்ணையார் வீட்டில்,  வெளியில் செல்ல வேண்டும் என்று அவனை கார் ஓட்ட அழைத்திருக்க,  அவனும் காலையிலேயே கிளம்பி சென்றிருந்தான்.

அவன் வயலில் வேலை இல்லாதபொழுது, பண்ணையார் வீட்டிற்கு வேலைக்கு சென்று விடுவான். அங்கயும் வேலை இல்லையென்றால், மற்ற வயல்களில் இருக்கும் தினக்கூலிக்கு செல்வான்.

முன்பெல்லாம் சம்பாதிக்க வேண்டும்..நாலு காசு சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாமல் மனசுக்கு பிடிச்சால் மட்டும் வேலைக்கு போவான். மத்த நேரம் ஊரை சுத்துவான்.

தனிமை அதிகம் வாட்டும் நாட்களில்  கல்லுகடைக்கு போய் குடித்துவிட்டு யாருடனாவது தகறாரு பண்ணுவான்.

இப்பொழுதோ அவனை நம்பி வீட்டில் ஒருத்தி இருக்க, அதுவும் அவளை ராணி மாதிரி பாத்துக்கணும் என்ற குறிக்கோள் வந்துவிட, தானாக பொருப்பும் வந்து சேர்ந்தது.

இப்பொழுதெலலம் ஒரு நாளைக்கூட வீணாக்குவதில்லை... கல்லுக்கடைக்கு சென்று வெட்டியாக செலவு செய்வதுமில்லை.

அதே போல அவன் உழைப்புக்கு தகுந்த கூலியையும் சரியாக கேட்டு வாங்கிக் கொள்வான். அதைக்கொண்டு வந்து தன் மனைவியிடம் கொடுத்து விடுவான்.

அவளும் அவன் கொடுக்கும் சம்பளத்தில் சிக்கனமாக செலவு செய்து மீதம் படுத்தி வைப்பாள்.

அதோடு அதுவரை வங்கி கணக்கு என்ற ஒன்றே இல்லாமல் இருந்தவனை , அந்த ஊரில் இருந்த வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு அழைத்து சென்று அவன் பெயரில் வங்கி கணக்கையும் திறந்து கொடுத்தாள்.

அவனுக்கு கிடைக்கும் பணத்தை வங்கியில் போட்டு வைத்தால், அதற்கு மாதம் தோறும் வட்டியும் கிடைக்கும். வீணாக செலவும் ஆகாது என்று சொல்லி கொடுக்க, அன்றிலிருந்து அவனும் பணத்தை சேமிக்க ஆரம்பித்தான்.

அவள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டுக்கொள்ளும் தன் கணவனை எண்ணி பெருமையாக இருந்தது பூங்கொடிக்கு. ஒரே ஒரு விசயத்தை தவிர.

அது அவன் பண்ணையார் வீட்டிற்கு  வேலைக்கு செல்வது.

******

ண்ணையார் வீடு என்றால் , அவளுக்கு பண்ணையார் மகள் ஸ்வாதியின் நினைவுதான் வரும்.

அதுவும் அவள் ராசய்யாவுடன் ஒட்டிக்கொண்டு , கொஞ்சி குலாவுவது நினைவு வந்தால் அவ்வளவுதான்.

அதனாலயே அவனை பண்ணையார் வீட்டிற்கு வேலைக்கு அனுப்ப அவளுக்கு மனமே இருக்காது.  

ஒரு முறை அந்த ஸ்வாதியை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றி காண்பிக்க என்று அவனை அழைத்திருக்க, பூங்கொடியோ அவன் அங்க போகக்கூடாது என்று தடா போட்டாள்.

அவள் போக வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் புரிந்ததால்,  அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா பூங்கொடி? “ என்று வலியோடு கேட்க , தூக்கி வாரிப்போட்டது பெண்ணவளுக்கு.

“உன்னை  நம்பாமல் என்றில்லை மாமா...ஆனால் அந்த பண்ணையார் மகள் ஸ்வாதி....உன்கிட்ட அப்படி ஒட்டி உரசி பழகறது எனக்கு பிடிக்கலை...” என்றாள் எங்கோ வெறித்து பார்த்தபடி.  

சரி..உன் தங்கை,  மலரும்  என்னிடம் மாமா , மாமானு ஒட்டிக்கிறாளே.. அவளையும் அப்படித்தான் பார்ப்பியா? அவ என்கிட்ட பழகறதும் உனக்கு பிடிக்கலையா? “ என்று அவளை ஊடுருவி பார்த்தவாறு கேட்க, யாரோ அவள் கன்னத்தில் அறைந்ததை போல இருந்தது.

மலரும் தான் ராசு மாமா என்று அவனை கட்டிக் கொள்வாள்.

ஆனால் தன் தங்கை முகத்தில் எந்த கள்ளத்தனமும் இருக்காது. ஆனால் ஸ்வாதி?  என்று மீண்டும் ஸ்வாதியின் முகத்தை கண் முன்னே கொண்டு வந்தவளுக்கு அப்பொழுதுதான் ஒன்று புரிந்தது.

அவனை ராஜ் என்று கட்டிக்கொண்டாலும் அவள் கண்களில் சிறுபிள்ளைக்கான அடம் பிடித்தலும், என் பொம்மை என்று   பெருமையாக காட்டும்  சிறுபிள்ளையின் சாயல் மட்டுமே இப்பொழுது தெரிந்தது.

“இங்க பாரு பூங்கொடி.. இத்தனை நாள் என் கூட இருந்திருக்க இன்னுமா என்னை பற்றி தெரியல. கட்டின பொண்டாட்டியவே தொடாம, கட்டுபாட்டுடன் இருக்கும் நான் போய் மத்த  பொண்ணுங்க கூட உல்லாசமா இருப்பேனாக்கும்?

மத்த  விசயத்தில் நான் நெறி தவறினாலும்,  பெண்கள் விசயத்தில் நான் கட்டுப்பாட்டுடன் இருப்பவன் டி.

என்னை தட்டி கேட்க யாரும் இல்லாத பொழுதும்,  இந்த ஒரு விஷயத்தில் எனக்கு நானே தான் கட்டுப்பாட்டை போட்டுக்கிட்டேன்.

அதோட ஒரு ஆணோ  பெண்ணோ தவறு செய்யணும்னு நினச்சிட்டா அதுக்கு ஆயிரம் வழி இருக்கும் மறச்சு செய்ய.

அவங்கவங்க மனசாட்சிக்கு உண்மையா இருக்கணும். அது மட்டும்தான் தவறான பாதைக்கு இழுத்து செல்லாது.

அப்புறம் என்னை பற்றிய முழு நம்பிக்கை உனக்கும்,  உன்னை பற்றிய முழு நம்பிக்கை எனக்கும் இருக்கோணும். அது இல்லைனா புருஷன் பொண்டாட்டி னு சொல்லிக்கிறதுல அர்த்தமில்ல.

சரி.. இப்ப சொல்லு.. நான் போகவா ? வேண்டாமா?”  என்று ஊடுருவி பார்த்து கேட்க, அவளோ ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டு

“என் புருஷனை நம்பாம வேற யாரை நம்ப போறேன்.. போய்ட்டு வா மாமா..” என்று தழுதழுத்தவாறு அவனை அனுப்பி வைத்தாள்.

“என் கருவாச்சி...” என்று அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளிவிட்டு சென்றான்.

அதிலிருந்து அவன் பண்ணையார் வீட்டுக்கு செல்ல தடை சொல்வதில்லை பூங்கொடி.

*****

ன்றும் அங்கு சென்றுவிட்டு வீடு திரும்பி இருந்தவன், முற்றத்தில் இருந்த கட்டிலில் காத்தோட்டமாக படுத்திருக்க, அங்கு ஓரமாக இருந்த அம்மியில் சமையலுக்கு அரைத்துக் கொண்டு இருந்தாள் பூங்கொடி.  

எதேச்சையாக அவள் பக்கம் திரும்பியவன் அப்படியே உறைந்து போனான்.  

புடவையை தூக்கி சொருகியபடி,  ஒரு காலை நீட்டி தரையில் அமர்ந்திருக்க,  அவளின் புடவை முழங்கால் வரைக்கும் ஏறி இருந்தது.  

காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு, என்னை கொஞ்சம் கொஞ்சேன் என்று ஏக்கமாக பார்த்து  அவனை கிட்ட வா என்று அழைத்தது.  

அவள் அந்த குழவியை பிடித்து முன்னும் பின்னும் வேகமாக அரைக்கும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்,  அவளின்  மாராப்பு நழுவியிருக்க, அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டும் முன்பக்க கழுத்து கீழ் வரை இறங்கியிருந்தது.

ஒல்லியான தேகம் என்றாலும் நன்றாக  செழித்து வளர்ந்திருந்த தூக்கலான அவளின் முன்னழகோ ஜாக்கெட்டை விட்டு பிதுங்கி கொண்டு நின்றது.  

அதை கண்டு கொள்ளாமல் அரைப்பதில் கவனமாக இருந்தாள் அவன் மனையாள்.

அவளை அப்படி அரைகுறையாக  பார்க்கவும்,  ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனான் காளையவன்.

அதிலும் பிதுங்கி கொண்டு நின்றிருந்த அவளின் பெண்மையை கண்டவனோ,  தேன் குடித்த நரி போல கிறங்கி போனவன்  பார்வை, அவளின் கழுத்துக்கு கீழ அந்தரங்கமாக ஆழமாக மேய்ந்து கொண்டிருந்தது.

அவளை அப்படியே அள்ளி அணைத்து, இறுக்கமாக போட்டிருந்த அவள் ஜாக்கெட்டின்  ஹூக்குகளை தன் பற்களால் கடித்து அவிழ்த்து விட்டு,  எனக்கு கொஞ்சம்  விடுதலை கொடேன் என்று அவனை பார்த்து கெஞ்சிக் கொண்டிருந்த அவளின் பெண்மைக்கு சுதந்திரம் கொடுத்து, அதை வேறு வகையில் சிறை பிடிக்க  தகித்தது அவன் உள்ளே.

அவனின் நரம்புக்கள் முறுக்கேற, உஷ்ணம் பரவியது அவன் உள்ளே... .

ஒரு கணம் தான்....அவன் உடலில் பரவிய உஷ்ணத்தில் விழித்துக்கொண்டவன்,  அவளை அத்து மீறி ரகசியமாக அந்தரங்கமாக ரசித்தவன், அவன் செய்திருந்த உறுதி நினைவு வர, உடனேயே தன் பார்வையை மாற்றிக் கொண்டு, ஜெய் ஆஞ்சநேயா என்று மனதுக்குள் உரு போட்டுக் கொண்டான்.

எத்தனை தரம் அந்த பிரம்மச்சாரி அனுமனை அழைத்து தன் பிரம்மச்சரியத்தை காத்துக்கொள்ள முயன்றாலும், சற்றுமுன் அவன் கண்ட அவளின் திரண்ட முன்னழகே அவன் கண் முன்னே வந்து அவனுள் சூடு ஏற்றியது.

ஆனாலும் முயன்று  தன்  உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர படாதபாடு பட்டான்.   

தன் கணவன் தன்னை ஆர்வமாக, அந்தரங்கமாக   பார்த்து கிறங்கி போனதை ஓரக் கண்ணால் கண்டு கொண்டே தான் தன் வேலையை செய்தாள் அவன் மனையாள்.

அவளின் மாராப்பு விலகியது தெரிந்தும், என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என்றே ஓரக்கண்ணால் தன்னவனை நோட்டமிட்டாள் பெண்ணவள்.

அவள் எதிர்பார்த்தது போலவே,  அவள் கொடுத்த போஸில்  திக்கு முக்காடி போனவன், ஒரு கணம் போதை ஏறிப்போய் அவளை அந்தரங்கமாக ரசித்து விட்டு மறு கணம் பார்வையை மாற்றிக்கொண்டவனின் மனதை கண்டு கொண்டாள் பெண்ணவள்.

“ஆஹான்...மனசுல இம்புட்டு ஆசைய வச்சுகிட்டுத்தான் மறச்சுக்கிட்டு இருக்கியா மாமா... இன்னைக்கி அதை எப்படி வெளியில கொண்டு வர்றேன் பார்... “ என்று  உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.  

“மா....மா.... “  என்று கொஞ்சலுடன் ராகமாக  இழுத்தாள் பூங்கொடி.

அவளின் வித்தியாசமான  குரலிலிருந்தும், அவள் அழைத்த தோரனையில் இருந்தும்,  இன்னைக்கு  ஏதோ ப்ளான்  பண்றா  என்று  கண்டு கொண்டான் ராசய்யா.

ஒரு வாரம் முன்பு குடி வந்த முதல் நாள், அவளிடம் தெளிவாக எடுத்து சொல்லி இருக்க,  அவளும் அவன் சொன்னதை புரிந்து கொண்டு தலையை உருட்டியவள், அவனை  தொந்தரவு செய்யாமல் விலகி இருந்தாள்.  

இப்பொழுது அவள் அமர்ந்து இருந்த கோலமும், அவள் காட்டிய போஸ்,  அவனை அழைத்த விதம் எல்லாம் சேர்த்து கூட்டி கழித்து பார்த்தவனுக்கு பக் என்றது. உள்ளுக்குள் அபாய மணி  அடித்தது.  

“என்னடி? “  என்று அவள் பக்கம் திரும்பாமலேயே கேட்டான் ராசய்யா.

“இங்க பாரு மா... மா...”  என்று மீண்டும் கொஞ்சலுடன் அழைக்க,

“எனக்கு காது கேக்குது டி... நீ என்ன விஷயம் னு சொல்லு...” என்று அவளை தவிர்க்க பார்த்தான்.

அவளை பார்த்தால் அவன் பார்வையை கன்ட்ரோல் பண்ண முடியாது. வெறும் பார்வைதானே என்று பார்க்க போய்,  ஏடா கூடமா ஏதாவது ஆகியிருச்சுனா என்று அஞ்சியவன் அவளை பார்ப்பதை தவிர்த்தான்.

“யோவ் மாமா... நான் என்ன சிங்கமா? புலியா? என்னை பார்க்க ஏன் பயந்துக்குற? “ என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அதட்டினாள்.

“ஆஹான்... சிங்கம் புலியைக்கூட சமாளிச்சிடலாம் டி. உன்னை சமாளிக்கிறது...” என்று மனதுக்குள் புலம்பியவன்,

“பயமா? எனக்கா? இப்ப பார்... “ என்று சவால் விட்டவன், அவள் பக்கமாக ஒருக்களித்து  திரும்பி படுத்தவன்...  பார்வையை அவளின் கண்களில் மட்டுமே நிறுத்தி,  கழுத்துக்கு கீழே செல்லாதவாறு கஷ்டப்பட்டு நிறுத்திக் கொண்டான்.

ஆனாலும் கீழ்ப்பார்வை அவனையும் தாண்டி அவளின் கழுத்துக்கு கீழ சென்று ரகசியமாய் குடிகொண்டது. விலகியிருந்த மாராப்பை இன்னுமே மூடியிருக்க வில்லை அவள்.

மீண்டும் அவளின் முன்னழகு அவனுக்கு தரிசனம் தர, எத்தனை முயன்றும் தன்னை கட்டுபடுத்த முடியாமல் ஓரப்பார்வையில் பார்த்தவன், அடுத்த நொடி உள்ளுக்குள் புயல் அடிக்க,  எச்சிலை கூட்டி விழுங்கினான்.

உதடுகள் வறண்டு போக, நாக்கும் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, முயன்று தன் நாக்கை இழுத்து தன் உதட்டை நாக்கால் வருடி ஈரமாக்கியவன்,  

“ம்ம்ம்ம்ம் சொல்லுடி.. இப்ப எதுக்கு என்னை கூப்பிட்ட? “ என்று முயன்று அவள் மீது எரிந்து விழ, எரிந்து விழுவதை போல நடித்து வைக்க,  

“இத அரைக்க முடியல மாமா...கை வலிக்குது... கொஞ்சம் வந்து அரைச்சு கொடு மாமா...” என்று  சிணுங்க, மீண்டும் நெஞ்சுக்குள் திக் என்றது.

“ஆஹான்... இந்த கருவாச்சி நினச்ச மாதிரியே ஏதோ ப்ளான் பண்ணிட்டா...” என்று அதிர்ந்து போனான்.  

இதுவரை சரளமாக சர் சர் னு முன்னயும் பின்னயும் இழுத்து அரைத்தவள், திடீர்னு கை வலிக்குது என்று சொல்வதும், அவனை அரைத்து கொடுக்க சொல்லி அவள் கிட்ட அழைப்பதும் அவனுக்கு அவள் வலை விரிப்பதை சொல்லாமல் சொல்லியது.

உடனே தன்னை சமாளித்து கொண்டவன்

“அதெல்லாம் எனக்குத் தெரியாது டி. நீ  இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு அரைச்சு சமைக்க வேண்டாம். இருக்கிற மொளவா பொடியை போட்டு செய். அதுவே போதும்...” என்று முறைக்க,

“ம்ஹூம்...அம்மியில அரச்சு வச்சாதான் குழம்பு ருசியா இருக்கும் மாமா... கொஞ்சம் ஒரு கை புடியேன்...சீக்கிரம் அரச்சிடலாம்...” என்று மீண்டும் சிணுங்க, அவனோ மறுத்தான்.

 

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா

ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா...  

 

நான் இழுத்தரைக்கிற போது கை பழுத்திருக்குது பாரு

நீ அழுத்தமான ஆளு...  என் கழுத்தறுப்பது ஏன்யா

 

என்று ராகமாக பாட, அப்பொழுதுதான் அவனுக்கும் கோவில் திருவிழாவில் ரேடியோ செட்டில் கேட்ட அந்த பாடல் நினைவு வந்தது.

“ஆஹான்... இந்த கருவாச்சி ஒரு வரி விடாம சினிமா பாட்டெல்லாம் கூட மனப்பாடம் பண்ணி வச்சிருக்காளே.. “ என்று எண்ணியவனுக்கு   சிரிப்பு வந்து விட்டது.  

அவளை சீண்ட எண்ணி, அவனும் திருப்பி பாடினான்.

அம்மி அரைப்பது பொம்பள வேல தாண்டி....  

அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏன்டி...

அம்மி இழுத்தரைக்கிற போது நெஞ்சை இழுத்தரைக்கிற மானே 
நீ அழுத்தமான ஆளு...  என் கழுத்தறுப்பது ஏன் டி?

 

என்று மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு,  புன்னகையோடு பாட, அவன் பாடியதில் திகைத்தவள், ஆனாலும் பாட்டை விட்டு விடாமல் தொடர்ந்து பாடினாள்.

 

நாந்தான் தனியா என்னதான் பண்ணுறது 
சோறு கொழம்பு எப்ப தான் பொங்குறது 

மாடாட்டம் வேலை செய்ய என்னால ஆவாது 
மாமா நீ ஒத்துழைச்சா எம்மேனி நோவாது 

ஆளாகி நான் சமஞ்சபுள்ள ஆனாலும் நான் சமைச்சதில்லை 
கண்ணாலம் கட்டாமலே குடித்தனமா ஆயாச்சு 

 

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா

ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா....!  

 

அவள் மீண்டும் ராகமாக இழுத்து பாட, அதில் காதை பொத்திக்கொண்டவன், கட்டிலில் இருந்து எழுந்து வேகமாக அவள் அருகில் சென்றான்.  

“அடியே...  நான் வேணா உனக்கு அரச்சு கொடுத்துடறேன்.  தயவுசெய்து நீ பாடாத...”  என்றான் சிரித்தவாறு.  

“ஏன் மாமா... என் பாட்டு நல்லா இல்லையா? “ என்று உதட்டை பிதுக்கினாள் சிணுங்கியவாறு.

“அதை வேற என் வாயால சொல்லனுமா? கன்றாவதியா இருக்குடி...”  என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்,

“சே..சே... சூப்பரா இருக்குடி...ஆனால் நீ பாட வேண்டாமே செல்லம்...” என்று கெஞ்சலுடன் இறைஞ்ச,

“அதெல்லாம் முடியாது...  நான் பாடித்தான் தீருவேன்...” என்று மீண்டும் பாட்டை தொடர்ந்தாள்.   

“அடியே... நீ  இன்னும் கொஞ்சம் சத்தமா பாடின, ஊருக்குள்ள மேய்ஞ்சுகிட்டிருக்கிற கழுதை பூராவும் நம்ம வூட்டுக்கு படை எடுத்துடும்...அதான் வேண்டாங்கிறேன்... ” என்று சிரிக்காமல் சொல்ல,

“மா.... மா..... “ என்று காலை தரையில் உதைத்து,  கையை ஆட்டி சிணுங்கினாள்.

அவளின் அந்த சிறுபிள்ளைத்தனமான செய்கையை கண்டு சொக்கியது அவன் மனம்.

சுளித்த அவள் இதழ்களை இழுத்து தண்டனை கொடுக்க தவித்தன அவன் இதழ்கள்.

மீண்டும் தன் தலையை உலுக்கி கொண்டவன்,

“சரி...நீ நகரு.. நான் அரைச்சு தர்றேன்...எப்படி அரைக்கிறதுனு மட்டும் சொல்லு.... “  என்றான் தானாக வலையில் வந்து மாட்டிகிட்ட சிங்கத்தை போல.

“ஆஹான்..சிக்கிடுச்சு சிங்கம்....இதை இப்படியே கவுத்துட வேண்டியதுதான்... ” என்று தனக்குள்ளே துள்ளி குதித்தவள்,  

“சூப்பர் மாமா...  முதல்ல இப்படி வந்து உட்கார்ந்துக்க...” என்று அவள் எழுந்து கொண்டு, அவனை கீழ அமரும்படி, அம்மியின் அருகில் கையை காட்டினாள்.

சிலம்பாயி தன் மாமியாரின் அம்மியைத்தான் தன் மகளுக்கு சீதனமாக கொண்டு வந்து போட்டிருந்தார்.

பழசாக இருந்தாலும், அரைப்பதற்கு வாகாக இருக்கும். சீக்கிரம் அரை பட்டுடுந். புதுசு வாங்கினால் அது பழகவே நாள் ஆகும். தன் மகள் அரைக்க கஷ்டபடக்கூடாதே என்று பழகிய அம்மியையே கொண்டு வந்து போட்டிருந்தார்.

அம்மி கீழ தரையில் இருக்கவும், தரையில் அமர்ந்துதான் அரைக்க வேண்டும். அதனால் ராசய்யாவை அம்மியின் அருகில் வந்து அமர சொன்னாள்.

அவனும் கட்டியிருந்த லுங்கியை தொடை வரைக்கும் சுருட்டியவாறு,  அவளைப்போலவே கலை நீட்டி அமர்ந்து கொள்ள,

“அப்புறம் இந்த கையை எடுத்து குழவியின் ரெண்டு பக்கமும் புடிச்சுக்க...”  என்று சொல்லி அவன் கையை எடுத்து குழவியின் இரு பக்கமும் வைத்தாள்.

அவனின் பின்னால் நின்று கொண்டு,  குனிந்து குழவியின் மீது இருந்த அவன் கைமீது தன் கையை வைத்து அழுத்தியாவாறு,  அந்த குழவியை எப்படி உருட்டி அரைப்பது   என்று விளக்கினாள்.

அவனின் திடகாத்திரமான, வலிமையான கையின் மீது அவளின் மென்மையான கரம் படிய, அவளின் கை தீண்டலின்  ஸ்பரிசத்தில் அவனுக்குள்  மீண்டும் புயல் அடித்தது.

பின்னால் அவனை ஒட்டி நின்றிருந்தவள்,  சற்று முன்னால் குனிந்து இருக்க,  அவளின் வெப்பமான மூச்சுக்காற்று அவன் கழுத்தில் பட்டு அவனை இன்னுமே தடுமாற வைத்தது.

அவன் கையை பின்னால் இருந்து எட்டி பற்றி இருந்ததால் கிட்டத்தட்ட அவன் முதுகில் படர்ந்திருந்தாள் பெண். அதில் அவளின் தூக்கலான முன்னழகு, அவனின் இறுகியிருந்த முதுகில் பட்டு அழுத்த, அதன் மென்மையில் சித்தம் தடுமாறித்தான் போனான்.

இதுவரை பெண் வாடை அறியாமல் வளர்ந்திருந்தவன்...அம்மா..அக்கா...தங்கை என்று எந்த பெண்ணுடனும் பழகியிராதவன்... முதன் முதலாக ஒரு பெண்ணின் அருகாமையும், தனக்கு உரியவளின் அந்தரங்கமான அங்கத்தையும், அதன் ஸ்பரிசத்தையும் உணர்ந்தான்.     

அதில் தன்னிலை இழக்க ஆரம்பித்து இருந்தவன்,  அதற்குமேல் தன்னை கட்டுபடுத்த முடியாமல் உடனே அங்கிருந்து எழுந்திருக்க தலையை நிமிர்த்த,  அந்த திடீர் அசைவில், அவன் தலைக்கு மேலாக குனிந்து இருந்தவளின்  இதழ்கள் அவனின் இதழோடு ஒட்டிக்கொண்டன.  

முதன்முறையாக அவனின் அழுத்தமான இதழ்கள் மீது,  மென்மையான மிருதுவான ஆரஞ்சு சுளை போன்ற திரண்ட  இதழின் தீண்டல் அவனை இன்னுமாய் புரட்டி போட்டது.

ஏற்கனவே அவளின் முன்னழகின் தீண்டலில்   சூடேறி இருந்தவன்...இப்பொழுது கிடைத்த இந்த இதழ் தழுவலில் மெய்மறந்து,   தன்னை முற்றிலும் மறந்தவன்,  அடுத்த கணம் எதுவும் யோசிக்காமல், பின்னால் நின்றிருந்தவளின் இடையில் கைபோட்டு முன்னால் இழுத்தான்.

அவளும் தடுமாறி முன்னால் வந்து அவன் மடியில் விழ,  பூச்சென்டாய் விழுந்தவளை ஆரத்தழுவி,  தாபத்துடன் அவளின் செவ்விதழை சிறை பிடித்தான்.

முதலில் மென்மையாக ஆரம்பித்தவன்,  அவளின் இதழ் தந்த போதையில் வன்மையாக தீண்ட ஆரம்பித்தான்.  

பின் இன்னும் கல்லுண்ட வண்டாய் கிறங்கி போனவன், அவளின் இதழில் ஆழமாய்,  அழுத்தமாய்,  வன்மையாய் முத்தமிட்டான்.

அவனின் இந்த திடீர் தாக்குதலில் திக்குமுக்காடிப் போன பெண்ணவள், கண்கள் மோகத்தில் சொருக,  கண்களை மெல்ல கிறக்கத்துடன் மூடிக்கொண்டாள்.

இத்தனை நாள் தன்னவனின் தீண்டலுக்காக ஏங்கி   கிடந்தவளின் உணர்வுகள், அவனின் முரட்டுதனமான ஆளுகையில்  தீண்டப்பட,

உணர்ச்சியின்  பிடியில் கொந்தளித்தவளின் கரம் ஒன்று நீண்டு   தன்னவனின் பின்னந்தலை முடியை இறுக  பற்றிக் கொள்ள,  மறுகரமோ அவனின் பரந்த முதுகில் படர்ந்து அவனை ஆரத்தழுவிக் கொண்டது..  

தன் மடியில் கிடந்த தன்னவளின் கிறக்கத்தையும், உணர்ச்சி மிகுதியில் பின்னிக்கொண்ட அவளின்  வாழைத்தண்டு கால்களையும், உருகி, குழைந்து அவனின் தழுவலுக்காக தவித்த மேனியையும் கண்டவன், ஆண்மை இன்னும் வீறு கொண்டு எழ, அசுர வேகத்தில்,  முரட்டுத்தனமாக அவளின் இதழை கவ்வி சுவைத்தான்.

அவன் கரமோ  அவளின் வெற்றிடையை பற்றி முரட்டுத்தனமாக அழுத்த, அதில் இன்னுமே உணர்ச்சிகள் தூண்ட பட்டவள்,  அவனின் திண்ணிய தோளை அழுந்த பற்றி அவனோடு இன்னுமாய் வாகாக ஒன்றிக் கொண்டாள் அவன் மனையாள்..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!