தேடும் கண் பார்வை தவிக்க-14
அத்தியாயம்-14 ஒ ரு நாள் முகம் பார்த்து தலை வாரி கொண்டிருக்க , அப்பொழுது தான் அவன் முகத்தை உற்று பார்த்தான்.. மூக்குக்கு கீழ முடி வளர ஆரம்பித்து கோடாக வளர்ந்திருந்தது... அதை கண்டதும் தான் அவனுக்கு மீசை வந்திருப்பது புரிய அவனுக்கு வெட்கமாகவும் பெருமையாக இருந்தது.. அவன் அப்பாவை போல மீசையை நீவி விட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்து சிரித்தான்... தன் மீசையை பார்த்து வெட்கபட்டு கொண்டு அடுத்த ஒரு வாரம் தன் அத்தை மகளை பார்க்க செல்லவில்லை நளன்.. தமயந்தியோ அவனை காணாமல் அதுவும் தினமும் அவன் வாங்கி வரும் சாக்லெட் கிடைக்காமல் போக அவன் வரும் வழியையே பார்த்து கொண்டு ஏமாந்து போனாள்.. அந்த வார இறுதியில் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளாகவே தன் அன்னையிடம் சென்று “அம்மா... நான் மாமா வூட்டுக்கு போய்ட்டு வரவா ? “ என்று ரகசியமாக கேட்க அதை கேட்டு தங்கத்திற்கு மனம் குளிர்ந்து போனது... உடனே தன் அண்ணன் மகனுக்கு பிடித்த பக்கோடா மற்றும் இனிப்பு போண்டா என்று செய்து டப்பாவில் போட்டு கொடுத்து “தமா... அப்பத்தா தூங்கி எழுந்துக்கறதுக்கு முன்னாடி போய்ட்டு வந்துடு டீ...” என்று ரகசியமாக சொல்லி தன் மகளை அனுப்பி வைத்த...