தேடும் கண் பார்வை தவிக்க-31
அத்தியாயம்-31 அ வனுடைய நிகழ்ச்சி நிரலும் அத்தோடு முடிந்திருக்க , சிறப்பு விருந்தினர்க்காக ஏற்பாடு செய்திருந்த டைனிங் ஹாலுக்கு ரிஷியை அழைத்து சென்றார் டீன்.. அந்த அறைக்கு சென்றவன் பப்பே முறையில் இருந்த உணவுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொண்டு அங்கிருந்த சில புரபெசர்களிடம் பேசி கொண்டிருக்க , திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு ஸ்பெஷல் மணம் அவன் நாசியை தீண்டி சென்றது... அடுத்த நொடி அது என்ன மணம் என்று புரிந்தது.. உடனே பின்னால் திரும்பியவன் அந்த ஹாலை அவசரமாக ஆராய்ந்தான்... ஆனால் அவன் தேடியவள் மட்டும் காணவில்லை.. நிறைய மாணவிகள் , சில பெண் விரிவுரையாளர்கள் என அந்த ஹாலில் நிறைந்து இருந்தனர்..அவளை காணவில்லை.. ஆனால் எப்படி அப்படி ஒரு வாசம் வீசியது ? கண்டிப்பாக அது என்னவளுடைய வாசம்தான் என மனம் அடித்து கூற அவசரமாக தன் கையில் வைத்திருந்த உணவை உண்டு முடித்தவன் ஒரு அவசர வேலை இருப்பதாக சொல்லி அனைவரிடமும் விடைபெற்று வேகமாக அங்கிருந்து வெளி வந்தான்.. வேக நடையுடன் அந்த ஹாலின் வெளியில் இரண்டு முறை சுற்றி வந்தான்..ஆனால் வித்தியாசமாக எதுவும் யாரும் அவன் கண்ணி...