தேடும் கண் பார்வை தவிக்க-50
அத்தியாயம்-50 அ ண்ணா யுனிவர்சிட்டி வளாகத்துக்குள் காரை செலுத்தியவன் வழக்கமான இடத்தில் நிறுத்திவிட்டு இறங்க , தமயந்தியும் உடன் இறங்கினாள்.. ஏனோ அவளுக்கு படபடப்பாக இருந்தது.. ஸ்டேஜ் ஏறி அந்த பட்டத்தை வாங்க பயமாக இருந்தது.. அருகில் நின்றிருந்த ரிஷியின் கையை பிடித்து கொண்டாள்.. அவன் கைவிரலுக்குள் தன் கை விரல்களை விட்டுக் கொண்டாள்.. அவள் வாய் திறந்து சொல்லாமலயே அவள் மனநிலையை புரிந்து கொண்டவன் அவளை மெல்ல அணைத்து “ரிலாக்ஸ் தயா பொண்ணு... சும்மா நீ ஸ்டேஜ் ஏறி மெடல் வாங்க போற.. அவ்வளவுதான்.. அதெல்லாம் என் பொண்டாட்டி கலக்கிடுவா.. லண்டனுக்கே தனியா போய்ட்டு அங்க ஸ்டேஜ் ஏறி சூப்பரா டான்ஸ் ஆடினவ.. நீ நாலு வருஷமா படிச்ச இந்த காலேஜ்ல ஸ்டேஜ் ஏறவா உனக்கு பயம்.. அதெல்லாம் நீ சூப்பரா கலக்கிடுவ... ரிலாக்ஸ்..” என்று அவளை அணைத்தவாறு ஆறுதல் சொல்லி அவளை தன்னுடனே அழைத்துச் சென்றான்.. விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல , அங்கிருந்த மாணவர்கள் எல்லாரும் ரிஷியை கண்டதும் அனைவரும் எழுந்து ஓ வென்று கத்தினர்... ரிஷியும் லேசாக வெட்கப்பட்டு அனைவருக்கும் கையசைத்து புன்னகைத்தவாறு தமயந்திய...