உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-42
அத்தியாயம்-42 கா லையில் கண் விழித்த பவித்ரா வழக்கம்போல ஆதி அங்கு இல்லாமல் போக , எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள்.. நேற்று இரவே மரகதத்திடம் கேட்டு வாங்கி வைத்திருந்த கஸ்தூரி மஞ்சளை முகத்துக்கும் காலுக்கும் தேய்த்து குளித்து முடித்து , அவளுக்கு பிடித்தமான புடவையை நேர்த்தியாக கட்டி , ஈரம் சொட்டிய தலைக்கு ஒரு டவலை கட்டிகொண்டு கீழ இறங்கி வந்தாள்... அவள் கீழ இறங்கி வரும் அழகை கண்டதும் மரகதம் அதிசயித்து நின்றார்... “அப்படியே என் தங்கை வாணி மாதிரி இருக்கே பவி மா..காலங்காத்தாலயே மஞ்சள் தேய்ச்சு குளிச்சிட்டு அப்படியே அந்த மகாலட்சுமியே நேர்ல வந்த மாதிரி இருக்க.. சரி வா.. சாமிக்கு விளக்கேற்றி வைத்து இன்னைக்கு உன் கையால பூஜை பண்ணு என்று அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்றார்.. பவித்ராவும் சிரித்து கொண்டே அவர் பின்னால் செ ன்று அவர் சொன்ன மாதிரி விளக்கேற்றி வைத்து அங்கு இருந்த தன் மாமனார் மாமியார் மற்றும் ஆதியின் தாத்தாவை வணங்கினாள்...பின் மரகதம் அவள் தலையை துவட்டி இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் முடிச்சிட்டு அவளுக்கு திருஷ்டி சுத்தினார்... “...