நிலவே என்னிடம் நெருங்காதே!!-23
அத்தியாயம்-23 அ ன்று இரவு , இரவு உணவை முடித்துவிட்டு தங்கள் அறையில் படுக்கையில் அமர்ந்து அலைபேசியை நோண்டி கொண்டிருந்தாள் நிலவினி..மனதில் தேவநாதன் சொல்லியதே ஓடி கொண்டிருந்தது.. மணி பத்தை தாண்டியதும் அறைக்கு திரும்பி இருந்தான் அதிரதன்.. உள்ளே வந்தவன் நேற்றை போலவே குளித்துவிட்டு ஒரு கையால் தலையை துவட்டியவாறு வெளிவர , அவள் கண்கள் தானாக அவன் பக்கம் செல்ல முயன்றன.. ஆனால் அடுத்த நொடி நேற்று அவன் திட்டியது நினைவு வர , வலுக்கட்டாயமாக தன் கண்களை இழுத்து தன்னிடமே வைத்து கொண்டாள்.. அவனும் ஒரு கையால் தலையை துவட்டியவாறே வந்தவன் ஓரக்கண்ணால் அவளை பார்த்தவாறு வெளிவந்தவன்.. நேற்றை போலவே இன்றும் அவள் பார்வை தன்னிடம் வரும் என்ற எதிர்பார்ப்பும் சிறு குறுகுறுப்புமாய் அவளையே பார்த்திருந்தவனுக்கு முதல் ஏமாற்றம்.. மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை அவள்.. அதை கண்டு அவன் உள்ளே கொதிக்க ஆரம்பித்தது.. “சரியான திமிர் பிடிச்சவ.. “ என்று மனதுக்குள் திட்டியவாறு கட்டிலின் அருகில் வர , அதே நேரம் அவனின் அலைபேசி செல்லமாய் சிணுங்கியது.. அந்த சிணுங்களில் இருந்தே யாரென்று புரிந்துவிட , உதட்டில் மலர்ந்...