Posts

Showing posts from November, 2020

இதழில் கதை எழுதும் நேரமிது...!

Image
  இதழில் கதை எழுதும் நேரமிது...! முன்னுரை:   டியர் ரீடர்ஸ் , காதலை மையமாக கொண்டு பொழுதுபோக்கிற்காக எழுதிய கதை இது...காதல் என்பது அற்புதமான ஒன்று.. நல்லவர் கெட்டவர் ஹீரோ வில்லன்   ஏழை பணக்காரர் என்று பார்த்து வருவது இல்லை காதல்.. தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்...அதன் அடிப்படையில் என் கற்பனையில் தோன்றியதுதான் இந்த கதை.. கூடவே ஒரு பெண் எந்த சூழ்நிலையிலும் தைர்யமாக எதிர்த்து நிக்க வேண்டும் என்று சொல்ல முயன்று இருக்கிறேன்.. இது ஒரு மோதல் , கூடல் , ஊடல் , காதல் கலந்த ஜாலியான ரொமாண்டிக் கதை..இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..    Happy Reading!!! - அன்புடன் பத்மினி செல்வராஜ்... ******** எ ன்னுடைய இந்த புதிய  நாவல் தற்பொழுது Amazon ல் வெளியாகியுள்ளது... Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்....    https://www.amazon.in/dp/B08M6GX9MB இந்த தளத்தில் விரைவில் பதிவிடுகிறேன்....  ******* COMING SOON ***********

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-25

Image
  அத்தியாயம்-25   ஆ தியின் அலறலை கேட்டு திடுக்கிட்ட பவித்ரா   “என்னாச்சு ?? “ என்று திரும்பி நிமிர்ந்து அவனை பார்த்தவள் அவன் நெற்றியில் கை வைத்து அலறவும் சிரிப்பு வந்தது அவளுக்கு... “ஹ்ம்ம்ம் எவ்வளவு   பெரிய மகாராஜானாலும் எங்க வீட்டிற்கு வரும் பொழுது தலை வணங்கி தான் வரணும்னு எங்கப்பா எங்க வீட்டு வாயில் நிலையை கொஞ்சம் உயரம் கம்மியா வச்சுட்டார்... அதான்.. நீங்க பாட்டுக்கு நேரா வந்தா இப்படி தான் அடி படுமாக்கும்.. இனிமேலாவது குனிஞ்சு வாங்க பாஸ்.. “ என்று சிரித்தாள்... அவன் இடித்துக்கொண்ட வலியோடு பவித்ராவின் நக்கலும் சேர்ந்து அவனை கடுப்பேற்ற அவளை பார்த்து முறைத்தான்.. அதற்குள் பார்வதி வந்துவிட தன் மாப்பிள்ளை நெற்றியில் கை   வைத்து வலியுடன் நிற்பதை கண்டவர் ,   நடந்தது புரிந்து விட “ஏய் பவித்ரா.. நீயாவது சொல்லக் கூடாது   மாப்பிள்ளையிடம் குனிஞ்சு வருமாறு.. .பார்..   பாவம் இப்படி இடிச்சுகிட்டார்... நீ போய் அந்த அயோடக்ஷ் எடுத்துட்டு வந்து மாப்பிள்ளைக்கு போட்டு விடு..சாரி மாப்பிள்ளை... “என்றார் வருத்தத்துடன்.. அதை கேட்டு அதிர்ந்த பவித்ரா ...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-24

Image
  அத்தியாயம்-24 அ ன்று ஞாயிற்றுக்கிழமை.. ஆதி ஜாகிங் சென்று திரும்பும் முன்னே பவித்ரா சீக்கிரம் எழுந்து குளித்து பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தாள்..அவன் திரும்பி வந்ததும்   பவித்ராவின் பரபரப்பை கண்டு “இவளை எப்படி மடக்கிறது ?? கடந்த 4 நாளா நான் படுத்தினதை எல்லாம் சமாளிச்சுட்டாளே!! இப்ப என்ன செய்யறது ?? “   என்று யோசித்தான்.. பின் அவளிடம் சென்று “ஹே!! உங்க அம்மா நம்மள லன்ச் க்கு தான கூப்பிட்டிருக்காங்க.. நீ என்ன டி   இப்பவே ரெடியாகிட்டு இருக்க ??   “ என்றான் குறும்பாக அதை கேட்டவள் “ஹ்ம்ம் என் அம்மா வாம்.. ஏன் அத்தைனு சொன்னா என்னவாம் ?? ஐயோ... இவன் பாட்டுக்கு அங்க வந்து ஏதாவது உளறி , அத கேட்டு அம்மா கஷ்டப்பட்டா ?? அதுக்குத்தான் நான் மட்டும் தனியா போறேனா , இந்த அம்மா அதுக்கும் கல்யாணத்துக்கப்புறம் முதல் முதலா ரெண்டு பேரும் சேர்ந்துதான் வரணும்.. தனியா வரக்கூடாது னு தடா   வேற .. இல்லைனா இவன் கிட்ட நான் ஏன் கெஞ்சிகிட்டு இருக்க போறேனாம் ?? நான் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டு ரெண்டு நாள்   கழிச்சுதான் வருவேணாக்கும்... வரட்டும் எப்படியாவது இவ...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!