காந்தமடி நான் உனக்கு!!-8
அத்தியாயம்-8 ச த்யாவைப் பற்றி தெரிந்து இருந்ததால் , அவள் அன்னை வளர்மதியும் சத்யா புதிதாக ஒரு ஆளை வீட்டிற்கு அழைத்து வந்ததை கண்டு மிரண்டு போகவில்லை. மாறாக அமுதன் முகத்தை பார்த்ததும் அவருக்குமே பாவமாக இருக்க , பல நாட்கள் சாப்பிடாத களைப்பு அவன் முகத்தில் தெரிய , ஒரு அன்னையாய் அவர் மனம் உருகி விட்டது. முழு மொத்த கரிசனத்துடன் அவனை வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமர வைத்தவனை கண்டதும் இன்னுமே உருகிப் போனார். இது மாதிரி வாரம் தோறும் ஏதாவது ஒரு நாய்க்குட்டி அவர் வீட்டிற்கு அடைக்கலம் வந்துவிடும். எங்கேயாவது ஒரு நாயோ பூனையோ போக இடம் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றால் உடனே அதை தூக்கிக் கொண்டு வந்து விடுவாள் சத்யா. இத்தனை நாட்களாக நாய்க் குட்டியை , பூனைக்குட்டியை அழைத்து வந்தவள் இன்று முதன் முதலாய் ஒரு ஆண் மகனை அழைத்து வந்திருக்க அவர் முகத்திலும் யோசனை படர்ந்தது. ஆனாலும் அதை பின்னுக்குத் தள்ளி தன் மகளை பார்த்தவர் “என்னாச்சு சத்யா ? யார் இவர் ? “ என்று விசாரிக்க , சத்யாவும் நடந்ததை சொன்னாள். உடனே அவரின் தாயுள்ளம் இன்னுமாய் விழித்துக் கொள்ள , ...