காந்தமடி நான் உனக்கு!!!(final)-49
அத்தியாயம்-49 ஒரு வருடத்திற்கு பிறகு: “இ ன்னும் ஒரே ஒரு வாய் வாங்கிக்க டா செல்லம்...என் டார்லிங் இல்லை... உன் அம்மு சொன்னா கேட்கணும்...” என்று கையில் , உணவு கிண்ணத்தை வைத்துக்கொண்டு தன் மனையாளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் அமுதன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவும் , அவளின் நன்றாக மேடிட்டிருந்த வயிற்றை தூக்கிக் கொண்டு மூச்சிறைக்க உண்ண மறுத்து தன் கணவனிடம் இருந்து நழுவி ஓடிக் கொண்டிருந்தாள். “ப்ளீஸ் அம்மு...போதும்... இதுக்குமேல் என்னால் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது...” என்று பாவமாக கெஞ்ச , “சரி டா...நீ இதுவரைக்கும் சாப்பிட்டது எல்லாம் உனக்காக பேபி. இப்பொழுது நம்ம ஜூனியர்க்காக...இன்னும் ஒரே ஒரு வாய் சாப்பிடுவியாம்...” என்று அவளை செல்லம் கொஞ்சினான் அமுதன். “ஆஹான்... இப்படி சொல்லி சொல்லித்தான் இதோடு பத்து தரம் ஊட்டி விட்டிட்டிங்க. எனக்காக ஒன்று...உங்களுக்காக ஒன்று...என் அம்மாவுக்காக தங்கைக்காக... அத்தை மாமா..” என்று வரிசையாக பட்டியலிட்டு உள்ளே தள்ளி விட்டீர்கள். அது போதாதாக்கும். இப்ப உங்க ஜூனியர் ம் ...