தாழம்பூவே வாசம் வீசு-6
தாழம்பூவே வாசம் வீசு - இப்பொழுது ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்..! https://youtu.be/K9Zm2WD5HpU அத்தியாயம்-6 அ ந்த சிறிய மண்டபத்தின் உள்ளே அமரும்படி இருந்த சிறு இடத்தில் சென்று தூணுடன் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.. எதிரில் இவனை பார்த்து குறும்புடன் சிரித்து கொண்டிருந்த தன் நண்பனை கண்டவன் கடுப்பாகி "டேய் கணேசா.. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன் ? .. நேற்று ஒரு நாள் நான் சந்தோஷமா இருந்தது உனக்கு பொறுக்கலையா ? அதுக்குள்ள என் சந்தோஷத்தை பறிச்சுக்க னு கங்கணம் கட்டிகிட்டு வந்திட்ட ? நேற்று அந்த குட்டி தேவதையை பார்த்து எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்.. இன்னைக்கும் பார்க்கலாம்னு வந்தா அந்த பொண்ணு இல்லை இல்லை பிசாசு என்னை என்னா விரட்டு விரட்டறா ? பழைய பகையை இன்னும் மனசுல வச்சிருக்கா போல இருக்கு.. அப்ப இனிமேல் நான் அந்த குட்டிய பார்க்க முடியாதா ? அவளை பார்க்க எனக்கு துடிக்குதே... நான் எப்படி பார்க்காமல் இருப்பேன்.. ? " என்று ஏதேதோ சொல்லி புலம்பி கொண்டிருந்தான்.. அவன் புலம்பலை கேட்டு காதில் ரத்தம் வர ஆரம்பிக்க அதற்கு ம...