Posts

தாழம்பூவே வாசம் வீசு-3

Image
அத்தியாயம்-3 இ ன்று மதியம் சென்னையின் முக்கிய பகுதியில் சவாரிக்காக ஆட்டோவில் சுற்றி  கொண்டிருந்தான் பார்த்திபன்.. மதியம் மணி ஒன்றை கடந்து இருந்தது . அப்பொழுது தான் பசிக்க ஆரம்பிக்க , ஏதாவது  சாப்பிட்டு விட்டு பின்  தன் சவாரியை தொடரலாம் என எண்ணி அங்கு ஏதாவது சிறிய உணவகம் இருக்கிறதா என்று தேடி கொண்டிருந்தான்... அப்பொழுது அவன் ஆட்டோவின் அருகில் வந்த ஒரு முதியவர் “தம்பி.. ஆட்டோ வருமா ? “ என்றார் சிறு பதட்டத்துடன்... அவனும் இன்னும் மதிய  நேரம் ஆகியிருக்க வில்லை என்பதால் இந்த  சவாரியை முடித்து விட்டு பிறகு சாப்பிடலாம் என எண்ணியவன் “ஹ்ம்ம் வரும் பெரியவரே.. எங்க போகணும்.. ? “ என்றான்.. அவர் சொன்ன இடத்தை கேட்டதும் அவன் முகம் இருண்டது.. அது சென்னையின் புற நகர் பகுதி.. கிட்ட தட்ட ஒரு மணி நேரம் ஆகும் அந்த இடத்தை  சென்றடைய.. இப்பொழுது ஆரம்பித்தால் எப்படியும் இரண்டரை மணி ஆகிவிடும் அங்கு சென்று சேர.. அதோடு அங்கிருந்து  திரும்பி வர சவாரி கிடைப்பது கஷ்டம் என தோன்ற “இல்ல.. அவ்வளவு தூரம் வராது.. நீங்க வேற ஆட்டோ பாருங்க.. இல்லைனா பஸ் எதுவும் இருக...

தாழம்பூவே வாசம் வீசு-2

Image
  அத்தியாயம்-2 ஒ ரு மாதம் முன்பு.. ஒரு சிறிய கோவிலின் திண்ணையில் காலை கீழ தொங்க விட்டவாறு ஏதோ யோசித்தவாறு   அமர்ந்து இருந்தான் பார்த்திபன்.. ஏனோ   மனம் எல்லாம் கசந்து வழிந்தது.. வாழ்க்கையையே வாழ பிடிக்காமல் வெறுப்பாக இருந்தது.. “இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா ? “என்று   யோசித்தவன் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட் ஐ எடுக்க , அது காலியாக இருந்தது.. ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் அதில் இருந்த கடைசி சிகரெட் ஐ இழுத்திருந்தான்... மீண்டும் அந்த பாக்கெட் ஐ எடுத்து பார்த்தால் அது என்ன அமுத சுரபியா சிகரெட்   ஐ சுரந்து கொண்டே இருக்க.. ?   ஆத்திரத்தில் அந்த காலி   சிகரெட் பாக்கெட் ஐ தூக்கி எறிந்தான்..வேற ஒரு சிகரெட்   பாக்கெட் வாங்கலாம் என்று சட்டை பாக்கெட் ஐ தடவ நயா பைசா இல்லை.. “சே.. இதெல்லாம் ஒரு பொழப்பா ? ஒரு சிகரெட் வாங்க கூட வக்கில்லை..அதுக்கு கூட ஆத்தா கையை எதிர்பார்த்துட்டு இருக்கியே.. நீயெல்லாம் உருப்படுவியா ?? நீயெல்லாம் வாழ்ந்து என்னத்த சாதிக்க போற ? “ என   தன் தங்கை   ஏசி கூறியது காதில் விழுந்தது இப்பொழுது நினைவ...

தாழம்பூவே வாசம் வீசு-1

Image
  அத்தியாயம்-1 வி ண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை.. எங்கு பார்த்தாலும் பளிச் சென்று துடைத்து வைத்ததை போல மின்னியது.. அதன் தரையும் சுவர்களும் முகம் பார்க்கும் கண்ணாடியை போல பளபளவென்று மின்னியது.. மருத்துவமனைக்கு உள்ளேயும் பல விதமான அலங்காரங்கள் கண்ணை குளிர வைப்பதாகவும் மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருந்தது.. மருத்துவமனைக்கே உரித்தான மருந்தின் நெடியும் டெட்டால் வாசமும் இல்லாமல் சுத்தமாக இருந்தது.. முதலில் பார்ப்பவர்களுக்கு அது ஒரு ஸ்டார் ஹோட்டலை போன்று தோன்றியிருக்கும்.. அந்த அளவுக்கு அதனை பராமரித்து வந்தனர் அந்த நிர்வாகத்தினர்.. அதன் தோற்றத்தில் இருந்து அது ஒரு விஐபி களுக்கான மருத்துவமனை என பார்ப்பவர்கள் அடித்து சொல்வர்.. ஆனால் அங்கு நடமாடும் மக்களை உற்று கவனித்தால் யாரும் மேல்தட்டு மக்களை போல இல்லை.. எல்லாருமே நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் நிலையில் உள்ளவர்கள் போன்று தோன்றினர்.. அப்படி என்றால் இது நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் நிலையில் உள்ள ஏழை மக்களுக்கான மருத்துவமனையோ ? ஏழை மக்களுக்கென இப்படி கூட ஒரு மருத்துவமனை இருக்குமா ? .. அப்படி  என்ன...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!