உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-16
அத்தியாயம்-16 இ ரவு 7 மணி அளவில் யாரோ வந்து அவள் அறைக்கதவை தட்டுவது கேட்டது.. மெல்ல எழுந்து சென்று கதவை திறந்தாள் பவித்ரா... வள்ளி தான் நின்றிருந்தாள்... “அம்மா... உங்களை பார்க்க யாரோ ரெண்டு பேர் வந்திருக்காங்க.... அதான் கூப்பிடலாம் னு வந்தேன்..” என்றாள்... “சரி நீங்க போங்க.. நான் வர்ரேன்.. அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுங்க “என்றவள் மீண்டும் குளியலறைக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு பின் தன் முடியை தளர பிண்ணிக் கொண்டு கீழ வந்தாள்... கீழ அமர்ந்து இருந்தவர்களை சரியாக ஞாபகம் இல்லாததால் மீண்டும் தன் மூளையை கசக்கி யோசித்தாள்... பின் அவர்கள் அருகில் வரவும் அவர்கள் எழுந்து நின்று “வணக்கம் மேடம்.. நாங்க உங்க மேரேஜ் அப்போ போட்டோ மற்றும் வீடியோ ஷூட் பண்ணவங்க.. “எண்று தங்களை அறிமுகப்படுத்தினர்... அவளும் புன்னகைத்தவாறு அவர்களை அமர சொல்லி தானும் மற்றொரு ஷோபாவில் அமர்ந்தாள்.. அதே நேரம் பவித்ராவை அறைந்து விட்டு கோபமாக வெளியில் சென்ற ஆதியும் கொஞ்ச நேரம் சுத்தி முடித்தவன் “அவளுக்கு எப்படி இருக்கோ?? அப்படியே விட்டுட்டு வந்திட்டமே” என்று மனது உறுத்த திரும்ப வந்திருந்தான்... ...