உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-8
அத்தியாயம்-8 ம றுநாள் காலை நீண்ட நேரம் கழித்தே கண் விழித்தாள் பவித்ரா... அவள் விழிக்கும் பொழுது ஆதி அங்கு இல்லை.. இவள் குளித்து விட்டு கீழே வரவும் தன் அம்மாவின் போன் வந்திருப்பதாக கூறினார் சமையல்கார பெண்மனி.. ஓடிப்போய் போனை எடுத்தவள் தன் அன்னையிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டாள்.. “என்ன இது பவித்ரா.?? .. இவ்வளவு நேரமா தூங்குவ?? இங்க இருக்கும் பொழுது காலையில ஆறு மணிக்கு எல்லாம் எழுந்திடுவ.. அங்க போய் ரொம்ப சோம்பேறி ஆயிட்ட” என்று தாளித்தார் அவளை..... “இங்க ஒரு வேலையும் இல்லை மா..காலைலயே எழுந்து என்ன பண்ண?? அதில்லாமல் நைட் தூங்க ரொம்ப லேட் ஆகிடுச்சு அதான்... “ என்று இழுத்தாள்.. தூங்க நேரம் ஆனது என்று பவித்ரா சொன்னதை தப்பாக அர்த்தம் எடுத்து கொண்ட பார்வதி. “தன் மகள் மாப்பிள்ளையுடன் சந்தோஷமாகத் தான் இருக்கிறாள்.. நான் தான் வீணா பயந்துகிட்டு இருக்கேன்”.. என்று எண்ணி நிம்மதியுற்றார்.. “மாப்பிள்ளையும் உன்னோடு தூங்காமல் தான இருந்திருப்பார்.. அவர் நேரத்திற்கு எழுந்து கிளம்பி வேலையை பார்க்க போகலை... உனக்கும் மட்டும் என்ன பவித்ரா தூக்கம்... மாப்பிள்ளைக்கு முன்னாடியே எழுந்து அவருக்கு...