உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-9
அத்தியாயம்-9 ஆ தித்யாவின் ட்விட்டர் பக்கத்தை திறந்த பவித்ரா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அதில் அவன் அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றை போஸ்ட் செய்து இருந்தான்... அதிலும் அவன் தாலி அணிவிக்கும் பொழுது அவளின் முகத்தில் தோன்றிய கலவையான உணர்ச்சிகளால் நிறைந்திருந்தது அப்படியே பிரதிபலித்தது அந்த படங்களில்.. பின் அவள் மாலை அணிவிக்கும் பொழுது அவனை பார்த்து மயங்கி நின்ற புகைப்படம் மற்றும் சில ரிசப்ஷன் படங்களும் அதில் இருந்தன... அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது மனதினில் மழைச்சாரல் அவளுக்குள்ளே...இருவரும் விரும்பி மணந்த மாதிரியே அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தனர் இருவரும் அந்த படங்களில்... ஒரு வேளை என்னை விரும்பித்தான் மணந்தானோ?? இல்லையென்றால் அவன் ஏன் திருமண படங்களை பப்ளிக் ஆ போடனும்?? “ என்று மகிழ்ந்து போனாள் சில விநாடிகள்.. பிறகு தான் கவனித்தாள் அந்த படங்களுக்கு வந்த வாழ்த்துக்களை.. அத்தனை வாழ்த்துகள் அதில் குவிந்திருந்தன.... அப்பொழுதுதான் நினைவு வந்தது பேருக்காக, ஊருக்காக , பழி வாங்க உன்னை மணந்தேன் என்று அவன் கூறியது... “சே.. இதுவும் அவன் நாடகம்.. ஊருக்கெல்ல...