தவமின்றி கிடைத்த வரமே-45
அத்தியாயம்-45 ஏ தோ ஒரு மாய லோகத்தில் சஞ்சரித்தனர் இருவரும்... அவர்களின் மோன நிலையை பொறுக்காமல் வெளியில் மக்கள் நடமாடும் சத்தம் கேட்க, அதில் விழித்து கொண்டவன் மனமே இல்லாமல் அவள் இதழை விடுவித்தான்.. “சோ ஸ்வீட் ஹனி... தேங்க்யூ சோ மச்... சீக்கிரம் மாமாகிட்ட சொல்லி நாள் பார்க்க சொல்லலாமா? இது நாள் வரை காத்திருந்தது போதும்.. இனிமேலும் உன்னை பிரிந்து என்னால் காத்திருக்க முடியாது.. “ என்றான் தாபத்துடன்.. அவனை பார்த்தால் அன்றுதான் அதுவும் 5 நிமிடம் முன்னர் தான் தன் காதலை சொன்னவன் போன்று இல்லை. பல வருடங்கள் காதலித்து பழகியவனை போல உரிமையுடன் பேச மித்ரா வாயடைத்து மந்திரத்துக்கு கட்டுண்டவளை போல தலையை மட்டும் ஆட்டினாள்.. அவளுக்கு தெரியாது.. அவன்தான் அவன் உலகில் அவளுடன் தினமும் காதல் மொழிகளை பேசி அவளை கொஞ்சி சிராட்டி பாராட்டி வருகிறான் என்று.. அதனாலயே அவள் தன் காதலை ஏற்று கொண்டதும் எந்த தயக்கமும் இல்லாமல் ஷ்யாம் அவளிடம் பழக முடிந்தது... அவள் தலை அசைக்கவும் “தேங்க்யூ சோ மச் மிரா... ஐ லவ் யூ..” என மீண்டும் அவளை மெல்ல அணைத்து விடுவித்தான்.. மித்ரா வுக்கோ அவனை விட்டு விலகவே மனம் இல்லை... அவன் அணை...